பெருமையில் அல்ல பொறுமையில்


இங்கிலாந்து தேசத்தில் பழமையான ஆலயம் ஓன்று இருந்தது. அந்த ஆலயத்தின் ஆல்டர் பகுதியில் ஒரு அழகான கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அது மிகவும் கலை நயத்தோடு செய்யப்பட்ட ஓன்று. எனவே ஆலயத்திற்கு வருகிற அனைவரும் அந்த கண்ணாடியின் அழகை பார்க்காமல் செல்வதே கிடையாது. சிலர் இந்த விஷேசித்த கண்ணாடியைப் பார்ப்பதற்கென்றே தூர இடத்திலிருந்து வருவர்.

ஒரு நாள் ஆலயம் இருந்த பகுதியில் வேகமான புயல்காற்று வீசியது. அந்த காற்றில் எதிர்பாராத விதமாக கண்ணாடி நொறுங்கியது. போதகர் புயல் நின்றதும் ஆலயத்தை வந்து பார்த்தார். அதிர்ச்சியடைந்தார், மனம் தளராமல் அந்த சிறிய கண்ணாடி துண்டுகள் எல்லாவற்றையும் ஒரு அட்டை பெட்டியில் பொறுக்கி வைத்தார்.

அந்த ஆலயத்தை பார்வையிட தூர இடத்திலிருந்து ஒருவர் வந்தார். ஆலயத்தின் கண்ணாடியைப் பார்க்க வந்தவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. எனவே போதகரிடம் போய் கண்ணாடி இல்லையே என்ன ஆச்சு என்றார்.

நடந்த சம்பவத்தை போதகர் சொல்லி வருத்தப்பட்டார். வந்த நபர் போதகரிடம் அந்த கண்ணாடி துண்டுகளை நான் பார்க்கலாமா என்றார். போதகர் அழைத்துச் சென்று அட்டைப் பெட்டியை பிரித்துக்காட்டினார்.

வந்த அந்த நபர் கண்ணாடியை தரமுடியுமா? என்று போதகரிடம் கேட்க, அவர் கொடுத்து விட்டார்.

ஒரு நாள் போதகருக்கு ஒரு தபால் வந்தது. தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு இருந்தது. போதகர் தொலை தூரமான அந்த இடத்திற்கு போய் சேர்ந்தார். வீட்டைத் தட்டினார்.

அந்த நபர் போதகரைப் பார்த்ததும் வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற போதகர் அதிர்ச்சியில் அப்படியே நின்றார். இது எங்கள் ஆலயத்திலிருந்த கண்ணாடி அல்லவா!? என்றார்.

ஆம் ஐயா, நான் தான் கடந்த வருடம், அந்த கண்ணாடி துண்டை உங்களிடம் இருந்து வாங்கி சென்ற நபர். அவற்றை பல நாட்களாக உட்கார்ந்து பார்த்துப் பார்த்து ஓட்ட வைத்தேன். இப்பொழுது நேர்த்தியாக உள்ளது. உங்கள் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கட்டும் என்றார்.

இதைப் போன்று தான் பிரியமானவர்களே, நமது வாழ்க்கையிலும் கணவன், மனைவி ஆகிய இருவருக்கிடையே அநேக காரியங்கள் பொருத்தமாய் உள்ளது. உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். நாம் ஒருவருக்கொருவர் "ஏற்ற துணையாக" இருக்கிறோம் (ஆதியாகமம் 2:18) என்று அறிந்து தான் நம்மை திருமண வாழ்வில் கர்த்தர் இணைத்துள்ளார். நாம் ஒற்றுமையை யோசித்துப் பார்க்காமல் வேற்றுமையையே அதிகம் யோசிப்பதால் தான் சண்டைகள் வருகிறது. உங்கள் கணவன்/மனைவியை ஏற்ற துணையாக கர்த்தரே அறிந்திருக்கும் போது, நீங்கள் ஏற்ற துணை இல்லையென்று வெறுக்கலாமா!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்