On லைனில் பிள்ளைகள் Off லைனில் பெற்றோர்
எப்படியோ கஷ்டப்பட்டு cell யை வாங்கிக் கொடுத்தார். அதுக்கு அப்புறமா பிள்ளையாண்டானை கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. எப்பொழுதும் cellல் தான். அப்பா நினைத்தார் மகன் நன்றாக படிக்கிறான் என்று.
ஒரு நாள் ஆசிரியை phone பண்ணி, sir உங்க மகன் ஆன் லைன் கிளாஸ்க்கு ஒழுங்காகவே வரமாட்டாக்கிறான். home workசெய்ய மாட்டுக்கிறான். நீங்க கவனிக்கிறது இல்லையா? என்றார்கள். அப்பொழுது தான் அப்பாவுக்கு மகன் மேல சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது.
இன்றைக்கு ஆன் லைன் கல்வி என்பது வியாபாரமாக்குகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சமூக மேம்பாட்டுக்கோ, குடும்ப உறவுக்கோ மிகப் பெரிய அளவில் பிரச்சனைகளாகவே மாறி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் android போன் கேட்டு பெற்றோரை தொந்தரவு செய்கின்றனர். ஏழைப் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க இயலாமல் மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். மற்றொரு புறம் வாங்கி கொடுத்த பெற்றொர்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். பிள்ளைகள் காலையில் மிகவும் லேட்டாக எழும்பி, பல் துலக்காமல், குளிக்காமல், சாப்பிடாமல், இரவு பயன்படுத்திய உடையிலே மாலை வரையில் செல்போனும் கையுமாக அலைகின்றனர். இரவு வேளைகளில் home work என்று விடிய விடிய செல்லுக்கும், கம்பியூட்டருக்கும் முன்னாக சாஸ்டாங்கமாக விழுந்து கிடப்பது பெற்றோருக்கும் வேதனையாக மாறுகிறது. எப்பொழுது பள்ளிக்கூடம், கல்லூரி திறக்குமோ என்று எதிர்பார்க்கும் சூழலுக்கு வந்து விடுகிறது.
இன்று சிறுவர்கள் அதிக gadgets (Cell, Computer, Tab) பயன்பாட்டில் ஈடுபடுகிற பல மாணவர்கள் Online gamesக்கும் அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் விளையாடும் போது பெற்றோர் கூப்பிட்டால் அவர்களுக்கு காது கேட்பதே இல்லை. அப்படியே கேட்டால் எரிச்சலுடன் பதிலை அளிக்கின்றனர். இவர்கள் எல்லாம் வீட்டில் இல்லாமல் எங்காவது போய் விட்டால் சந்தோஷமாக விளையாடலாமே என்ற மன நிலைக்கு பிள்ளைகள் வந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட இளம் மாணவர்களைத் தான் சில சமூக உறவை பாழ்படுத்தும் நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். பெற்றோருக்கு பயம் எல்லாம் நம் பிள்ளைகள் இப்படிப்பட்ட நபர்களின் பிடியில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதே.
பிள்ளைகள் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவ மாணவியரிடம் பழகும் போது தான் சமுதாயத்தில் இணக்கமானவர்களாக உருவாக முடியும். ஆனால் ஆன் லைன் கல்வி வந்ததும் சில மாணவர்கள தலை முடிக்கு டை அடிப்பதும், ஒழுங்கீனமான வாழ்க்கை அமைப்பை உருவாக்கியும் கொள்ளுகின்றனர். அவர்களை சீர்படுத்த முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.
இவ்வாறு உறவில் விரிசல்கள் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே பெருகி வந்தாலும் பிள்ளைகளை அப்படியே விட்டுவிடக்கூடாது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நேரத்தை செலவிட மறந்து விடக்கூடாது. பிள்ளைகளை நாம் கண்காணிக்கவும் வேண்டியது அவசியம். பிள்ளைகள் படிக்கும் போது அருகில் உட்கார்ந்து உங்கள் வேலைகளைச் செய்யுங்கள். அவர்களுக்கு பெற்றோருடைய அன்பு எப்படியாவது கிடைக்கட்டும்.
பிள்ளைகளை தண்ணீர் தெளித்து விட்டு விட்டேன். அவன்/அவள் இனி நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கமாட்டார்கள் என்று விட்டு விட வேண்டாம். ஆதியாகமம் 34ம் அதிகாரத்தில் தினாள் என்ற இளம் பெண் தனித்து பிற தேசத்து பெண்களைப் பார்க்கச் செல்கிறாள். இறுதியாக மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளுகிறாள். இதைப் போன்று வலைத் தளத்திற்குள் நம் பிள்ளைகள் தனித்துப் போய் மாட்டிக் கொள்ளாமல் இருக்க நாம் உதவியாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகள் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துக் கொள்ள முடியும். நம் உறவானது இனிமையாக இருக்கும் போது cell க்கு ஓய்வு கொடுக்க முற்படுவர்.
பெற்றோர் பிள்ளைகளிடம் விளையாட முற்படுங்கள். அது அவர்களுக்கு மன அளவிலும், உடலளவிலும் ஊக்கம் கிடைக்கும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு: நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment