சுபாவத்தை மாற்ற இயலுமா?
மனம் வருந்தினவர் அந்த தேளைக் காப்பாற்ற விரும்பி தன் கைகளைக் கொண்டு தூக்கினார். அவ்வளவு தான் அந்த தேள் தன்னுடைய கொடுக்கினாலே கொட்டியது. வலி தாங்க முடியாமல் ஐயோ என்று அதை உதறினார். மீண்டும் தேள் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தது. மனம் தளராமல் மீண்டும் அந்த தேளை தன் கைகளால் தூக்கி காப்பாற்ற முற்பட்டார். தன்னைக் காப்பாற்றுகிறாரே என்ற உணர்வு இன்றி மீண்டும் தன் கொடுக்கால் கொட்டியது. ஐயோ என்று கையை உதறினார்.
இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் நண்பர்கள் அவரைப்பார்த்து நீ நல்ல முட்டாள். தேளைப்போய் காப்பாற்றி இப்படி கொட்டு வாங்க வேண்டுமா? என்று கிண்டல் செய்தனர்.
அவரோ பொறுமையுடன் நான் எல்லா படைப்பையும் நேசிக்கிறவன். ஆகவே என் சுபாவம் உதவிச் செய்வது தான். அதே வேளையில் தேளின் குணம் கொட்டுவது தான். அது நான் எவ்வளவு தான் உதவிச் செய்தாலும் அது கொட்டத்தான் செய்யும். நான் என் கையினால் காப்பாற்றாமல் ஒரு மர துண்டை பயன்படுத்தி அதற்கு உதவியிருந்தால் நான் கொட்டுப்பட்டிருக்க மாட்டேன். நான் தான் தவறு செய்து விட்டேன் என்றார்.
சில குடும்பங்களில் கணவன் மனைவியை மாற்றுவதற்கு முற்படுகின்றார். சில குடும்பங்களில் மனைவி கணவனை மாற்ற முற்பட்டு தோல்வியுருகின்றனர். நான் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து விட்டேன். ஆனால் இந்த மனுஷனை என்னாலே திருத்தவே முடியல. எனவே இவருடன் வாழவே முடியாது என்ற முடிவுக்கு வருகின்றனர்.
யாரும் யாரையும் எளிதாக மாற்ற முடியாது. அவர்கள் வளர்ந்த சூழல்கள் என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும். எனென்றால் சில பழக்கவழக்கங்கள் இரத்தத்தில் ஊறிவிடுகிறது. திடீரென்று மாற்ற முடியாது. நாம் அதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். மாற்ற முயற்சிக்கிற காரியங்கள் இருப்பின் சிறிது சிறிதாக ஏற்படுத்த வேண்டும். சில வேளைகளில் நாம் தான் மாறிக்கொள்ள வேண்டும். குறைவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திருமறையில் யாக்கோபுவின் சுபாவங்களை சிந்தித்துப் பாருங்கள். யாக்கோபு தன் தந்தையை ஏமாற்றுகிறான். தன் சகோதரன் ஏசாவை ஏமாற்றுகிறான். தன் மாமனாகிய லாபானுக்கு ஆடு மேய்க்கும் போதும் நல்ல ஆடுகளை தனக்கு எடுத்துக்கொள்ள தந்திரங்களை மேற்கொள்ளுகிறான். அவனுடைய குணங்கள் எங்கிருந்தாலும் மாறவில்லை.
இறைவனிடம் யாக்கோபு சிக்கலான சூழலில் யாப்போக்கு ஆற்றங்கரையில் மன்றாடும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவன் குணத்தை மாற்றும் விதமாக இஸ்ரவேல் என்று பெயரிடுகிறார். யாக்கோபு என்ற ஏமாற்றும் குணத்தை மாற்றுகிறார். எனவே சுயநலத்தை மாற்றுவதற்கு இறைவன் மட்டுமே இயலும். எனவே உங்கள் கணவன்/மனைவியின் குணத்தை மாற்ற விரும்பினால் இறைவனிடம் மன்றாடுங்கள். அவர் பதிலளிப்பார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment