இல்லறத்தின் இலக்கணம்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பின் சாம்பியனாகி சாதனைப் படைத்தது. ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கிடையே நடந்து வந்த இந்த தொடரின் இறுதிக் கட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசிலுடன் அர்ஜென்டினா அணி மோதியது. இவ்வணிகளின் மிகச்சிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் ஜூனியர் (பிரேசில்) இருவரும் இப்போட்டியில் எதிர் எதிர் அணிகளில் களமிறங்கி ரசிகர்களின் இருக்கையில் இருக்க விடாமல் செய்தனர்.
அனல் பறந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஒரு பந்தை வலைக்குள் திணித்து வெற்றியை வசப்படுத்தியது. 28 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெற்றியை முற்றமிட்ட அர்ஜென்டினா வீரர்கள் அமர்களத்தில் இறங்க, பிரேசில் அணியினர் வெளிவரமுடியாத அதிர்ச்சியில் தலையை பிய்த்துக்கொண்டனர். பிரேசில் வீரர்கள் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தனர். இதில் நெய்மரும் அடங்குவார். ஆனால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெஸ்ஸிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இருவரும் கட்டியணைத்தபடியே சில நிமிடங்கள் அமைதியாக நின்றனர். இந்த செயலானது அவர்களின் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது. நட்புக்கு இலக்கணமாக இருவரும் செயல்பட்டது நமக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது.
மெஸ்ஸியும், நெய்மரும் நெருங்கிய நண்பர்கள் விளையாடியது எதிர் எதிர் அணிகள் விளையாடி முடிந்ததும் கட்டியணைத்து அன்பை, நட்பை வெளிப்படுத்தினர். குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இருவரும் ஒரே அணியில் தான் விளையாடுகிறோம். ஆனாலும் சண்டை, சச்சரவு வருகிறது. சண்டைப் போட்டாலும், கோபங்கொண்டாலும் சூரியன் அஸ்தமிக்கும் முன் மறந்து அன்பை வெளிப்படுத்த வேண்டும் என ஆண்டவர் நமக்கு கற்றுத் தருகிறார்.
இரு அணி வீரர்களுமே அதிக தவறுகள் செய்ததால் நடுவரால் எச்சரிக்கப்பட்டு "மஞ்சள் அட்டை" கொடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி வந்தனர். வாழ்க்கையிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மன்னிக்கப்பட முடியாத அளவிற்கு தீமைச் செய்ததாக குற்றம் சாட்டலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்ற பந்தத்திலிருந்து வெளியேறிவிடக்கூடாது. குடும்ப வாழ்க்கை வாழ ஆண்டவரின் சந்ததி முன் தீர்மானித்துள்ளோம். ஜீவன் இருக்கும் வரை வாழ்வை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். ஒருவர் குற்றத்தை ஒருவர் மன்னித்து வாழவேண்டும். அதற்கு முன் மாதிரியாக கிறிஸ்துவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பவுலடியார் ஆலோசனை அளிக்கிறார்.
இந்த விளையாட்டில் வீரர்கள் அதிகமாக காயப்பட்டனர். எனவே காயங்களால் நேர்ந்த நேர இழப்பை சரிகட்டும் வகையில் கூடுதலாக 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பிலும் அர்ஜென்டினா கவனமாக எதிரணியைக் கோல் போட விடாமல் பார்த்துக் கொண்டனர். இதைப் போன்று குடும்ப வாழ்விலும் பல்வேறு காயங்களை பலர் ஏற்படுத்தி, குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வர். ஆனால், கணவன், மனைவிக்கு இடையே மற்றவர்கள் நுழைந்து குடும்பத்தை பாழ்படுத்துவதற்கு இடங் கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எத்தனையோ வெற்றிகள் கண்ட நெய்மர் இப்பொழுது கண்ணீர் வடித்து தேம்பி தேம்பி அழுகிறார். ஆனால் மெஸ்ஸியின் அன்பான அரவணைப்பு, தோல்வியில் இருந்த நண்பரின் காயங்களுக்கு நல்ல மருந்தாக மாறிவிட்டது. குடும்ப வாழ்விலும் வெற்றி, தோல்வி, கஷ்டங்கள், மகிழ்ச்சி, கண்ணீர் விடும் சூழல், சந்தோஷ ப்பட்டு களிகூரும் சூழல் என்று மாறி மாறி வரலாம். கணவன், மனைவி கண்ணீர் சிந்த நேரும் போது மற்றவர்கள் அருகில் உட்கார்ந்து தொட்டு, ஆற்றித் தேற்றும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டு வாழ்வு மகிழ்ச்சியாக மாறி விடும்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் புத்தகம் : என் ரூபவதியே உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற "Hi" என type செய்து “93 42 80 71 51” என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும் புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment