அடுத்த கல்பனா சாவ்லா
இந்திய வம்சாவளியைச் சார்ந்த சிரிஷா பந்தலா அவர்கள் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளார். இதைப்பற்றி அவருடைய தந்தை வழி தாத்தா பகிர்ந்துக்கொண்ட பேட்டி சிந்திக்க வைக்கிறது. அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார், எனது பேத்தி விண்வெளி பயணத்தை மேற்கொள்வதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது பேத்தி குழந்தையாக இருக்கும் போதே மிகவும் துணிச்சல் உள்ளவளாக செயல்பட்டாள். முடிவுகளை எடுப்பதில் எப்பொழுதும் துணிவாக எடுப்பாள். விண்வெளியில் உள்ள தகவல்களை அறிந்துக்கொள்வதில் அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர் தான் சிரிஷா பந்த்லா. இவர் தற்பொழுது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் வி எஸ் எஸ் யூனிட்டி விண்வெளி ஓடமானது நியூ மெக்சிகோவிலிருந்து 11.07.2021 அன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் ஆறு பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த பயணத்தில் இந்திய வம்சாவெளியைச் சார்ந்த சிரிஷா பந்த்லாவிற்கு வாய்ப்பு கிடைத்தது இந்தியாவிற்கு பெருமையாக உள்ளது. கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தப்படியாக விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்.
இப்படி பெருமை மிகுந்த செயல்களில் பிள்ளைகள் முன்னெடுப்பதற்கு பெற்றோர் முக்கிய இடம் பெறுகின்றனர். மனோவா தன் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று இறை தூதரிடமே கேட்கிறார். "பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்கு கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்" (நியாயாதிபதிகள் 13:8). நம்முடைய பிள்ளைகளைக் குறித்து கர்த்தரிடம் எப்படி வேண்டிக் கொள்ளுகிறோம்? நாம் வளர்க்கிற முறை சரிதானா என்பதைக்குறித்து எப்பொழுதாவது நாம் சிந்திக்கிறோமா? உயர்ந்த நோக்கங்களை நோக்கி பிள்ளைகள் பயணிப்பதற்கு ஊக்கத்தைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். மேலான காரியங்களை நாமும் நாடவேண்டும். நம் பிள்ளைகளுக்கும் போதிக்க வேண்டும். நல்ல நண்பர்களுடன் பழக ஊக்குவிக்க வேண்டும். கர்த்தரை தேடுவதற்கும் ஊக்குவிக்கவேண்டும். அப்பொழுதெல்லாம் நேர்த்தியான பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்
Comments
Post a Comment