வெற்றியுள்ள வாழ்வுக்காக போராடு


Tom Dean என்ற பெயரை வாசித்த உடன் உங்களுக்கு நியாபகம் வருவது ஒலிம்பிக் போட்டி (2021). அதில் 200 மீட்டர் freestyle பிரிவில் தங்கம் வென்ற வீரர் தானே என்பது உண்மை தான். ஆனால் Tom Dean ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவாரா என்பதே கேள்வி குறியாக இருந்தது.   

கொரானா தொற்றினால் இரண்டு முறை பாதிக்கப்பட்டவர் தான்  Tom Dean. வயது 21 தான் ஆகிறது. ஆனாலும் உள்ளம் தளராமல் உறுதியுடன் பயிற்சி செய்து தங்கத்தை தட்ட மனவலிமை இருந்துள்ளது. துவக்கத்தில் பிரிட்டன் ஒலிம்பிக் அணிக்குள் இடம் பிடிக்க முடியுமா என்று சந்தேகித்தனர்.

கொரானா தொற்றினால் முதல் முறை பாதிக்கப்பட்டவர் எதிர்பாராத விதமாக இரண்டாம் முறையும் கொரானாவின் கோரப்பிடியில் மாட்டிக் கொண்டார். இதன் விளைவால் நுரையீரல் பாதிக்கப்பட்டது. இருமலால் கஷ்டப்பட்டார். நீச்சல் பயிற்சிச் செய்வதற்கு இவை மிகவும் தடையாகவே இருந்தது. ஆனால் Tom Dean உள்ளமோ எப்படியாகிலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்டு வெற்றியைப் பெற வேண்டும் என்ற அவா பெருகிக்கொண்டேப் போனது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொரானாவினால் பாதிக்கப்பட்டதில் சிலர் விரக்தியடைந்து தற்கொலைச் செய்துள்ளனர், பலர் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர், பலர் நம்பிக்கையை இழந்து வறுமைக்குள்ளாகியுள்ளனர். ஆனால் இத்தகைய இடையூறுகள் எல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உயிர் இருக்கும் வரை போராடுவேன் என்ற மனபக்குவத்தோடு மோசமான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் பயிற்சியை மேற்கொண்டார்.  

எப்பொழுதுமே போராட்டத்தில் இருக்கும் போது சிலர் நம்மை ஊக்கப்படுத்த இருப்பார்கள். அதுபோல் தான் டேவிட் மெக்நல்பி என்ற பயிற்சியாளர் Tom Dean க்கு உதவினார். மன உறுதியுடன் முழு திறமையையும் வெளிப்படுத்த ஊக்கப்படுத்தினார். உலகமே எதிர்பார்க்காத சூழலில் ஸ்காட் புரிந்த சாதனையை முறியடித்து (1 நிமிடம் 44:22 விநாடிகள்) தங்க பதக்கத்தை வென்றார். 

வாழ்க்கையில் பல வேளைகளில் பிரச்சனை மேல் பிரச்சனைகள் வரலாம், கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், மாமியார், மாமனார், நம்மோடு பணிச் செய்யும் மக்கள் போன்று பலவிதங்களில் பிரச்சனைகள் அலை அலையாய் வரலாம். ஆனால் நம்பிக்கையுடன், வாழ்ந்தே ஆகவேண்டும் என்று போராட வேண்டும்.  

திருமறையில் 1 சாமுவேல் 30:6 ல் “தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்… தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்.” வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனையை தாவீதும் அவனோடு இருந்தவர்களும் சந்தித்தார்கள். இப்பிரச்சனையினிமித்தமாக தாவீதும், அவனோடிருந்தவர்களும் அழுகிறதற்கு பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (V4). இருப்பினும் கடவுளுடைய சமூகத்தில் தாவீது தன்னை திடப்படுத்திக் கொண்டு, தான் அடுத்து செய்ய வேண்டிய காரியம் என்ன? என்பதைக் குறித்து யோசித்தான். செயல்பட தொடங்கினான், முயற்சித்தான், முடிவில் வெற்றிப் பெற்றான்.

நம் குடும்ப வாழ்விலும் பல வேளைகளில் நிம்மதியை இழந்து விடுகிறோம், பல வேளைகளில் கதறி அழுகிறோம், பல வேளைகளில் மனம் துவண்டு விடுகிறோம். இருப்பினும் கர்த்தர் நம்மோடு இருந்து வழி நடத்துவார் என்ற அசைக்க முடியாத விசுவாசத்துடன் வாழ்வில் போராட வேண்டும். கர்த்தர் நம்மோடு இருந்து சூழல்களை மாற்றி சந்தோஷத்தை தருவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு: நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி