கொஞ்சம் பறக்க விடுங்களேன்
அன்று கவின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்திருந்தார் ஜீன். மாலை வேளையில் குடும்பமாய் காரில் வந்து இறங்கினார். அப்பொழுது அவர் தன் மனைவி மற்றும் திருமணமான மகளுடன் வந்து இறங்கினார். ஜீன் அவளை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி, எப்படிம்மா இருக்கிறா? Husband எப்படி இருக்கிறாங்க? என்றார். நல்லா இருக்கிறேன் uncle என்றவள் husband பற்றி ஒன்றும் கூறவில்லை. ஏம்மா எங்க வீட்டுக்கு அவரையும் அழைத்து வந்து இருக்கலாமே என்று கூற, அவள் - uncle அவரை பற்றி என்னிடம் ஒன்றும் கேட்காதீங்க என்றாள். ஜீனுக்கு சற்று மனது குழம்பியது. கவினை நோக்கி பார்த்தார். அதற்குள்ளாக கவின் முந்திக் கொண்டார், “அவன் ஒன்றுக்கும் உதவ மாட்டான், தெரியாமல் மாட்டிக் கொண்டோம்” என்றார். கவின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க, அவரது மகள் அங்கும் இங்குமாய் பார்த்து ஜீன் கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. வந்ததும் வராததுமாய் தெரியாமல் கேட்டு கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருத்தப்பட்ட ஜீன், “வாங்க வீட்டிற்குள் போகாமல் வெளியேயே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். மாலை மயங்கும் போது அப்படியே கவின் மகள் ஜான்சி, வீட்டிற்கு பி