எண்ணித் துணிக


ஜவகர்லால் நேருவும், காந்தியும் நடந்து போய் கொண்டிருந்தனர். அவர்கள் போகிற வழியிலே சிறிய நீரோடை ஓன்று ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சற்று இளைஞராகக் காணப்பட்ட நேரு ஓடி சென்று அதைத் தாண்டினார். காந்தியடிகள் சற்று வயதானவர், அவர் அந்த தண்ணீரின் வழியாக மெதுவாக நடந்து வந்தார்.

சிரித்துக்கொண்டே நேரு காந்தியடிகளைப் பார்த்துச் சொன்னார், "பார்த்திர்களா, நான் எப்படி தாண்டி வந்துட்டேன்," என்று! பதிலுக்கு, காந்தியடிகள் நேருவைப் பார்த்து "நான் முன் வைத்தக் காலை பின் வைக்காதவன்" என்றார்.

காந்தியடிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். குறிப்பாக உப்பு என்னும் உரிமையைப் பெறுவதற்காக ஆறு வார காலம் திர்மானம் எடுப்பதற்கு காத்திருந்தார். ஆழ்மனதில் இருந்து ஒரு உந்துதல் வந்த போது அப்பொழுது வைசிராயாக இருந்த இர்வின் பிரபுவுக்கு உப்பு வரி என்னும் கொடுமையை நீண்ட கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். சத்தியாகிரகம் என்பது மாபெரும் சக்தி என்பதை ஆங்கிலேயருக்கு உணர்த்த தனது ஆசிரமத்திலிருந்து 240 மைல்கள் தொலைவிலுள்ள தண்டி கடற்கரையைத் தேர்ந்தெடுத்து நடந்து பிரிட்டிஷ் சாம்ராஜியத்திற்கு முதல் புள்ளியை வைத்தார். காரணம் "முன் வைத்த காலை பின் வைக்க விரும்பாதவர்".

திருமண வாழ்வு என்பது பல நாட்களாக, வருடங்களாக சிந்தித்து, விசாரித்து, நாமாக யோசித்து, பலருடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு எடுக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவருடைய சந்நிதியிலும் வாக்குக் கொடுத்து, திருமணம் செய்துக்கொள்ளுகிறோம். ஆனால் நாட்கள் பல கழிந்த பின்பு, குழந்தைகள் பெற்ற பின்பு ஏற்படுகிற சிறிய மனக்கசப்புகளுக்கும் தாக்கு பிடிக்காமல் இந்த உறவு நமக்கு சரிபட்டு வராது என்றும், இந்த மருமகன், மருமகள் நமது குடும்பத்திற்கு சரியாக வராது என்றும் முடிவு கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

உங்கள் சுய நலத்தை மட்டும் முன் வைத்து பிரிய நினைத்தால் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி சரிக்கட்ட முடியும்? அவர்கள் எதிர்கால வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாகும் என்பதை உங்களால் கணக்கிடமுடியுமா? உங்கள் பெற்றோர் தங்கள் கடமைகள் முடிந்தது என்று நினைக்கும் போது அவர்களுக்கு மிகப் பெரிய பாரத்தை மீண்டும் நீங்கள் சுமத்தலாமா? எடுத்த திருமண பந்தத்தில் இறுதிவரையிலும் நிலைத்திருந்து இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற திர்மானியுங்கள். தேவன் இணைத்ததை   மனுஷன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற திருமறை வார்த்தையை எந்த சூழ்நிலையிலும் கடைபிடிக்க முடியாது என்று பின் வாங்காதிருங்கள். உங்களை இணைத்தவர் உண்மையுள்ளவர், அவரும் உங்களுக்கு உதவிச்செய்ய ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் அவருடைய கட்டளையை விட்டு விலகாமல் இருந்தால் அவரும் உங்கள் குடும்ப வாழ்வை விட்டு விலகவே மாட்டார்.   அவரை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள், அவரும் உங்களை பற்றி பிடித்துக் கொள்ளுவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி