மூழ்கிய பாவிகள்


எப்பொழுதெல்லாம் மாமியார் வீட்டுக்கு வருகிறார்களோ, அப்பொழுதெல்லாம் மருமகளுக்கு ஜுரம் வந்துவிடும். கணவனுக்கு புரியாத புதிராக இருக்கும்! ஓன்று அவரே உட்கார்ந்து அம்மாவுக்கு சாப்பாடு செய்வார் அல்லது கடையில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுப்பார்.

ஆண்டவரிடம் வேண்டினார், ஆண்டவரே எப்படியாவது எங்க அம்மா வரும் போது என் மனைவி சுகமாய் வாழ உதவிடும் என்று கெஞ்சினார். வாதத்திற்கு மருந்து உண்டு, பிடிவாதத்திற்குதான் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லையே.

எதிர்பாராத விதமாக ஒரு போதகர் அந்த ஊருக்கு வந்தார். பாவத்திலிருந்து விடுதலை பெற முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தால்தான் பரலோகம் என்றார்!

முதல் ஆளாக மனைவி அழுகையோடும், கண்ணீரோடும் ஒப்புக்கொடுத்து, மூழ்கி ஞானஸ்நானம் எடுத்துவிட்டு சாட்சி கூறினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தர் இப்பொழுதுதான் என்னுடைய எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை செய்துள்ளார் என்றாள். கணவனுக்கு மிக்க சந்தோஷம்.

அடுத்தநாள் எதிர்பாராதவிதமாக மாமியார் வருகை என்று phone மூலம் செய்தி வந்தது. மகனுக்கு எந்த டென்ஷனும் இப்பொழுது இல்லை! எங்க அம்மா அவங்க மருமகள் கையால செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மனதார தன் மனைவியை வாழ்த்த போகிறதை நினைத்து உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தது.

காலையில் market போயிட்டு வேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு வந்தான். அம்மாவுக்குப் பிடித்த மீனை தேர்ந்தெடுத்து வாங்கினான். மனைவியை பார்த்து எங்க அம்மா வாராங்க, உன் கையால செய்கிற சாப்பாட்டை இப்போதான் முதன்முதலா சாப்பிட போறாங்க என்று சந்தோஷமாக கூறினான்!

மனைவி நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு, sorryங்க, நான் இன்றைக்கு உபவாசம்! என்னை சாப்பாடு செய்யச் சொல்லி வீணாக temptation கொடுக்காதீங்க!! நான் உபவாசம் என்று முடிவெடுத்துவிட்டேன் அதை மாற்றினால் கர்த்தருக்கு பிடிக்காது!!! நீங்களே ஏதாவது செய்து கொடுத்திடுங்க  என்றாள். 

கணவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது! இந்த பாகற்காய் எத்தனை முறை மூழ்கினாலும் கசப்பு மாறாது!! பவுலடியார் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “புது சிருஷ்டியே காரியம்.” காரணம் ஒரு மனிதனின் சுபாவம் என்பது அவ்வளவு எளிதாக மாறக்கூடியது அல்ல. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வரும் போது ஏற்படும் மாற்றம். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மனதார நமது குறைவுகளை அறிக்கையிடும் போது ஏற்படும் விளைவு. இந்த மாற்றம் ஒரு நாள் முழுக்கிலே  வருவதில்லை. நாம் எப்பொழுதெல்லாம் செய்கிற செயல் தவறு என்று பரிசுத்த  ஆவியானவர் உணர்த்துகிறாரோ அப்பொழுதெல்லாம் அவைகளை விட்டுவிட ஆண்டவரிடம் மன்றாட வேண்டும், முயற்சிக்க வேண்டும். நமது சுபாவங்களை மாற்றுவதற்கு பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே முடியும்.

நான் சாகும் வரைக்கும் என் மருமகள் கையால நான் சாப்பிட மாட்டேன் என்றும், நான் இருக்கிற வரையிலும் என் வீட்டிற்கு என் மாமியார் காலடி எடுத்து வைக்க முடியாது என்றும் சவால் விடுகிறவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட நபர்கள் எத்தனை முழுக்கு எடுத்தாலும் ஒரு பயனும் இல்லை. கண்ட பெண்ணிடம் அன்பு கூறாதவள் காணாத கடவுளிடம் அன்பு கூறுவது எப்படி?

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்