Daddy நீங்க தான் வேண்டும்
நடு நடுங்கினான் Tom. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது. யோசித்தான்! பாக்கெட் மணியை அப்படியே சேர்த்துவைத்தான்.
ஒரு நாள் “Dad” என்று கூறிக் கொண்டு, கதவை திறந்தான். அப்பா மகனைப் பார்த்ததும் நான் வேலைச் செய்துகிட்டு இருக்கிறேன் தெரியுமில்லா என்று கூறி முறைத்துப் பார்த்தார். Tom கைகளை பார்த்தார், கையில் சில்லரை பணமாக வைத்திருந்தான்.
என்ன வேண்டும்? என்று மீண்டும் கத்தினார். Dad எனக்கு நீங்க ஒரு மணி நேரத்திற்கு வேண்டும், இதோ 5000 ரூபாய் பிஞ்சுக் கைகள் தந்தைக்கு முன் அதை வைத்தது. அசந்துப்போன தந்தை தன் மகனை அணைத்துக்கொண்டு, என் மகனுக்கு நான் தான் வேண்டும், என் பணமல்ல என்று கிரிக்கெட் பேட்டை தூக்கிக்கொண்டு வீட்டு தோட்டத்திற்குள் சென்றார்.
தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு தான் முக்கியம் என்று இரவு பகலாக உழைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் சற்று நேரம் கூட செலவழிக்க விரும்புவதில்லை. பணம் ஒன்றே பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உதவிடும் என்று பிள்ளைகளை மறக்கிற பெற்றோர் இறுதியாக பிள்ளைகளையே இழந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு புரிவதில்லை
நீங்கள் தேடும் பணமானது உங்கள் பிள்ளைகளை வளப்படுத்துமா? அல்லது வழுகி விழ பண்ணுமா என்பதை நீங்கள் தான் யோசிக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளை அதிக பணத்தை கட்டி hostelல் சேர்த்து சிறந்த Doctor ஆக்க, Engineerஆக்க தீர்மானிக்கிறீர்கள். உங்கள் பணத்தினால் அவர்கள் வாழ்வை கட்டி எழுப்புகிறீர்கள். அன்பினால் அல்ல. ஆகவே அவர்கள் பெரியவர்களான பின்பும் உங்களுக்கு பணத்தை தான் அனுப்பி வைப்பார்களேயன்றி, அன்பை திருப்பி தர மாட்டார்கள். நீங்கள் நடக்க முடியாமல் வீட்டிற்குள் ஊர்ந்து செல்வீர்கள், ஆனால் உங்கள் bank accountல் இலட்சக்கணக்கான பணத்தை உங்கள் பிள்ளைகள் அனுப்பி, அம்மா - அப்பா உங்களை நன்றாக உதவிக்கு ஆள் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்.
திருமறையில் ஏலி என்ற ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக பணிவிடை செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் பிள்ளைகள் வளர்ந்த போதோ இறைவனுக்கு விருப்பமற்ற செயல்களில் ஈடுபட்டனர். பிள்ளைகள் எதை சிறுவயதில் செய்தாலும் அவர்கள் விருப்பப்படியே விட்டு விடுவதும், அவர்களை கர்த்தருக்கு பிரியமாய் வளர்ப்பதை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பதும் தவறானது. பின்னாட்களில் அவர்கள் வளர்ந்து வரும் போது தீய செயல்களை துணிகரமாக செய்ய பழகி விடுவார்கள் என்பதை ஏலியின் பிள்ளைகள் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம். (1 சாமுவேல் 2)
பிள்ளைகள் சிறு வயதில் இருக்கும் போது அதை ஏலி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். அவர்கள் பெரியவர்களான போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. எனவே அன்புடன் சிறுவயதில் இருக்கும் போது கண்டித்து திருத்த வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுடன் நேரம் செலவு செய்து இறைவனுக்கு பிரியமானது எது, சமுதாயத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை குறித்து பேசி மகிழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment