அவரே விட்டுக் கொடுத்துவிட்டார்.


திடீரென்று வீட்டு கதவு தட்டப்பட்டது. வீட்டிற்குள் TV volume அதிகமாக இருந்தது. கொஞ்ச நேரமாக வந்தவர் நின்று கொண்டே இருந்தார். வீட்டிற்குள் பயங்கர சண்டை நடந்து கொண்டிருந்தது. மீண்டும் கதவை தட்டினார். மெதுவாக கதவைத் திறந்தாள் அமுதா.

வாங்க மாமா வாங்க, வாங்க. பிள்ளைங்க TV volumeயை கூட்டி வைச்சுக்கிட்டு எங்கேயோ போயிட்டாங்க என்று சமாளித்தாள். இதைப்போன்ற பல சமாளிப்புகளையெல்லாம் தெரியாதவரா  என்ன, Mr.டேவிட்.

தெரிந்துதான் வந்திருக்கிறார். தன்னுடைய மருமகளும், மகனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வெறும்  மோதலிலேயே காலத்தை கழிக்கிறாங்க என்று.

வந்தவர் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நான் கிளம்புறேம்மா. அதுக்கு முன்னால ஒரு சின்ன game வைக்க விரும்புகிறேன். நீயும் உன் கணவரும் இதுல பங்கு பெறனும். வெற்றி பெறுகிறவர்களுக்கு ஒரு தங்க மோதிரம் என்றார்.

மருமகளுக்கு ஒரே சிரிப்பு, மாப்பிள்ளையை அழைத்து வந்தாள். மெதுவாக game உடைய rules and regulationsயை விவரித்தார்.

கையிலே வைத்திருந்த பெரிய நூல்கண்டை பிடித்து இருவர் கையிலேயும் இரண்டு பக்கங்களை கொடுத்தார். யார் வேகமாக இழுத்து இதை அறுந்து போக செய்கிறீர்களோ அவர்களுக்கு மோதிரம்.

“ப் பூ இவ்வளவுதானே” என்று இருவரும் மல்லுக் கட்டினார்கள். ஒரு condition. “ஒருவர் இழுக்கும் போது மற்றவர்கள் நூலை விட்டுவிட வேண்டும் என்றார்.”

Game start ஆனது. ஒருவர் இழுக்க மற்றவர் நூலை விட்டார். இருவரும் அதை அறுக்க முடியவில்லை. மாமா சிரித்துக் கொண்டே சொன்னார். “ஒருவர் பொறுமை இருவர் நட்பு! நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் இறைவன் ஏற்படுத்திய உங்கள் வாழ்வு ஒருநாளும் குலைந்து போகாது” என்று கூறி விட்டு நடையை கட்டினார்.

ஆபிரகாமுக்கும் அவருடைய மனைவியாகிய சாராளுக்கும் ஒரு வாக்குவாதம் வந்தது. இஸ்மவேல் தன் மகன் ஈசாக்கோடு சுதந்திரவாளியாக இருக்கக்கூடாது என சாராள் வாக்குவாதம் செய்து போது ஆபிரகாமின் தலைவலி ஆரம்பித்தது. மனசு உடைந்து போனார். அப்பொழுது ஆண்டவர் ஆபிரகாமிடம் உன் மனைவியிடம் இப்பொழுது விட்டுக் கொடுத்து விடு. அவள் சொல்வதைக் கேள் என்று கூறுகிறார். சில வேளைகளில் நம் பக்கமே நியாயம் இருந்தாலும் விட்டு கொடுத்து போய்விட்டால் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி