இறைவன் தவறு செய்வாரா?


நண்பருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய பிள்ளைகளுடன் ஜெபத்திற்கு காத்திருந்தார். மனைவி எங்கே? என்றேன்.

யோசித்துக்கொண்டே பதிலளித்தார், "அவளுக்கும், எனக்கும் சரியான பொருத்தமே இல்லை, தவறான நபரை நான் தெரிவுச் செய்து விட்டேன் " என்றார்.

கடந்த முறை உங்களைப்பார்க்கும் போது நீங்கள் accident ஆகி மருத்துவமனையில் இருந்தீர்கள். அப்பொழுது உங்களுக்கு blood ஏற்ற, group கிடைக்காமல் கஷ்டப்பட்டது நியாபகம் இருக்கிறதா? என்றேன். ஆம் என்றார்.

அப்பொழுது blood கொடுத்தது உங்கள் மனைவியும், அவர்களுடைய சகோதரரும் தானே என்பதை நினைவுபடுத்தினேன். 

உடனே அவர் முகம் வேறுபட்டது, அது அப்பொழுது நல்லா தான் இருந்தாள். இப்பொழுது இரண்டு பேருக்கும் ஒத்துவரவில்லை. கடவுள் எதுக்குத்தான் அவளை என் தலைமேலே சுமத்திவச்சரோ தெரியல என்று புலம்பினார்.

பிள்ளைகள் இரண்டும் விழி பிதுங்கி பாட்டியின் மடிக்குள் அமுக்கப்பட்டு இருந்தது.

கடவுள் ஒரு போதும் தவறு செய்வதில்லை. நாம் தவறு செய்து விட்டு கடவுள் பேரிலே குறைச் சொல்லுகிறோம் என்பதை அவருக்குப் புரிய வைத்தேன்.

மனிதனுக்கு ஏற்ற துணையை உண்டு பண்ணுவேன் என்று கூறிய ஆண்டவர் தவறான துணையை நமக்குத் தருவாரா? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்பி பார்க்க வேண்டும்.

நம்முடைய சுயநலமானப் போக்கு, கட்டு மீறிய ஆசை, அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம், தவறான பழக்க வழக்கங்கள், பண ஆசை, இரவும் பகலும் வலைத்தளத்திலே வலம் வருதல், மனைவி பிள்ளைகளோடு ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் கூட பேச மனமில்லாமை, தவறான நட்பு, போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி அதுவே வாழ்க்கை என்று நினைத்துச் செயல்படுதல், எதை விற்றாகிலும் குடித்து விடவேண்டும் என்று வீட்டையே சூரையாடுதல், மனைவி பிள்ளைகளின் நகை, பணம் எல்லாவற்றையும் விற்று சுயநலமாக வாழ விரும்புதல் போன்று பல்வேறு காரியங்களில் நாம் ஈடுபடும் போது மனைவி அதற்கு சம்மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் சம்மதிக்காவிடில் அவளுக்கும், எனக்கும் பொருத்தமில்லை என்று கடவுள் மீதே குறை கூறிக் கொள்ளுகிறோம். எரிச்சல்பட்டுக் கொண்டு மனைவியை துரத்தி விட நினைக்கிறோம். கடவுள் நமக்கு சிறந்த மனைவியை/கணவனைத்தான் தந்துள்ளார். நாம் தான் இக்கரைக்கு அக்கறை பச்சை என்று திருப்தியில்லாமல் அலைந்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்