அன்னப்பறவை
அன்று எலிசபெத் ஏதேன் தோட்டத்திற்குள் நுழைந்த சர்ப்பமாக உள்ளே ஊர்ந்து வராமல் நடந்து வந்தாள். இப்பொழுதுதான் சர்ப்பம் பல வண்ண சேலை, சுடிதார்களில், கோர்ட்டு, சூட்களில் உலாவருகிறதே! கண்கள் உள்ளவன் கண்டுகொள்ளக்கடவன். மெதுவாக chessல் shoulderஐ இறக்கினாள் எலிசபெத்.
அக்கா மருமகள் வேலைக்கு போயாச்சா? என்று கேட்டுக் கொண்டாள். உள்ளே மருமகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, மெதுவாக அடுத்த காயை நகர்த்தினாள். உங்க மருமகளை பற்றி தான் உங்ககிட்ட பேச வந்தேன்! உங்ககிட்ட சொல்லாவிட்டால் பாவம் என்னை சும்மா விடுமா என்றாள்.
போகிற போக்கை பார்த்தால் மருமகளுக்கு check வைக்கல்லா வந்திருக்கிறா என்பதை உணர்ந்து கொண்டாள் நவீன ஏவாள், சாரி நகோமி. மூணாவது காயை எலிசபெத் நகர்த்துவதற்கு முன்னால அவளுக்கே check வைக்கலாமா என்று கணக்கு போட்டாள்.
முதல் காய், எலிசபெத்தை பார்த்து நீ சொல்லப் போகிற விஷயம் என் மருமகளை பற்றி உண்மையான செய்தியா? என்றாள்.
எலிசபெத்திற்கு இப்படி ஒரு கேள்வி நகோமி கேட்பாள் என்று தெரியல. எனவே மெதுவாக மழுப்பலாக, தெரியல நான் கேள்விப்பட்டேன் அதுதான் சொல்லிவிடலாம் என்று நினைச்சேன்.
அப்படியா, அடுத்த காய், எலிசபெத் நீ சொல்ல வருகிறது உண்மையான்னு சரியா தெரியாம சொல்ல வந்துட்ட, அதை விடு “நீ சொல்லப் போகிற விஷயத்தில் ஏதாவது நல்லது இருக்கிறதா?” என்றாள்.
வந்து… அக்கா... அது நல்லதா என்பது தெரியல, ஆனா... வந்து... நீங்க தான் அதை முடிவு பண்ணனும். அசடு வழிந்தாள் எலிசபெத்.
எலிசபெத்துக்கு மூன்றாவது முறையே check வைக்க ஆரம்பித்தாள் நகோமி. என் மருமகளை பற்றி சொல்ல வந்திருக்கிறீயே அந்த விஷயத்தால எனக்கு ஏதாவது பயன் இருக்கிறதா? என்றாள்.
சற்றும் இப்படி அம்பு பாயும் என்று தெரியாத எலிசபெத், உங்களுக்கு இதில் எந்த பயன் இருக்கப் போகுதுன்னு எனக்கு தெரியல. சரி சும்மா சொல்லிட்டு போகலாமே என்று வந்தேன். அக்கா எப்பொழுதுமே இப்படித்தான், மருமகள் பற்றி ஏதாவது சொல்ல வந்தா ஏட்டிக்கு போட்டியா ஏதாவது பேசுவீங்க என்று சொல்லிவிட்டு இப்பொழுது ஊர்ந்தே போய்விட்டாள். காரணம் இயேசு கிறிஸ்து சிலுவையில் சாத்தானின் தலையை தான் நசுக்கி விட்டாரே! இனி அதற்கு இங்கு என்ன வேலை.!!
மாலை வேளையில் நகோமியும், மருமகளும் எலிசபெத் வீட்டை தட்டினார்கள். எலிசபெத் திறந்து பார்த்தாள். மருமகளுக்கு இன்றைக்கு Birthday. அதுதான் பிரியாணி உங்க வீட்டுக்கு கொண்டு வந்தோம் என்றாள் நகோமி.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment