சமையலுக்கு ஒன்று சமயத்திற்கு ஒன்று
ஒரு பெண்மணி மிகவும் ஆலயத்தை நேசிக்கிறவர்களாக இருந்துள்ளார். ஆலயத்தில் நடக்கிற அத்தனை கூடுகையிலும் தவறாமல் கலந்து கொள்ளுவார். உபவாச கூடுகை என்றால் முதல் ஆளாக இருப்பார். அதேவேளையில் நாமே சாப்பிடாமல் இருக்கிறோம். வீட்டில் உள்ளவர்களும் உபவாசம் இருந்தால் என்ன? என்று பிள்ளைகளுக்கு கணவருக்கு கூட சமையல் எதுவும் செய்யாமல் போய் விடுவார்
கணவன், பிள்ளைகள் பசியினால் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் இருந்ததால் கணவன் அடிக்கடி மனைவிடம் சண்டையிட்டு உள்ளார். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் போய்க் கொண்டே இருந்துள்ளார்.
ஒரு நாள் திடீரென்று ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். கணவர் வீட்டில் ஒரே சண்டை இறுதியாக அந்த பெண் பாஸ்டரிடம் ஓடினாள். தன் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கதறினாள்.
பாஸ்டர் அடுத்தநாள் அந்த வீட்டிற்கு வந்தார். வந்தவுடன் என்ன இப்படி ஒரு காரியம் செய்து விட்டீர்களே என்று பேச ஆரம்பித்தார்.
அவரோ பாஸ்டரை பேசவிடாமல், கொஞ்சம் பொறுங்கள் என்று உள்ளே போனார்.
வடை, கேசரி, டீ என்று பாஸ்டர் முன்னால் எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தார். மிகவும் டேஸ்ட்டாக இருந்தது. வந்த பாஸ்டர் எவ்வளவு டேஸ்டாக இருக்கிறது என்று நன்றாக சாப்பிட்டார்.
ஐயோ இன்றைக்கு fasting என்பதைக் கூட மறந்து டேஸ்டாக இருப்பதால் நன்றாக சாப்பிட்டு விட்டேனே என்றார் பாஸ்டர்.
உடனே அவர் பாஸ்டரை பார்த்து பேச ஆரம்பித்தார். ஐயா நீங்க திருப்தியாக சாப்பிட்டது போலத்தான் நாங்களும் இப்பொழுது நன்றாக சாப்பிட்டு திருப்தியாக இருக்கிறோம். இதுவரையிலும் அடிக்கடி பட்டினியாக நானும் என் பிள்ளைகளும் இருந்தோம். இப்படி வகைவகையாக சாப்பிடத்தான் இப்பொழுது திருமணம் செய்தேன். அவள் கோயிலுக்கு போய் எங்களுக்காக ஜெபிக்கட்டும், இவள் எங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து கொடுத்து வீட்டோடு இருக்கட்டும் என்று நினைத்தேன். இதில் என்ன தப்பு இருக்கிறது என்றார்! பாஸ்டர் யோசிக்க ஆரம்பித்தார்.!!
திருமறையில் உபவாசம் இருக்கும்போது நமது துணை disturb ஆகாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. நமது ஆன்மீக வாழ்வு என்பது நமது துணையை பிள்ளைகளை எந்தவிதத்தில் பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் பாதிக்கப்படுவார்களானால் அப்படிப்பட்ட உபவாசமே தேவையில்லை.
உங்கள் சொந்த குடும்பத்தை நன்றாக நடத்த முடியாமல் ஆலயத்தில் வந்து உலகத்திற்கு ஜெபித்து என்ன பயன்? உங்கள் கணவன், மனைவி அல்லது பிள்ளைகள் உங்கள் ஆன்மீக வாழ்வினிமித்தம் எரிச்சல் அடையும் அளவிற்கு நீங்கள் செயல்படாதிருங்கள். அப்படிப்பட்ட ஆன்மீக வாழ்வை கர்த்தர் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment