சந்தேகிக்க வயதுண்டா?


ஏறக்குறைய 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடியிலிருந்து விடுதலைப் பெற முகாம் ஒன்றில் கலந்துக் கொண்டார். அந்த வயதானவரிடம் 4 நாட்கள் கழித்து மெதுவாக பேசினேன். ஏன் ஐயா இந்த வயதிலும் குடித்து வீட்டில் கலாட்டா பண்ணுகிறீர்கள்.   உங்கள் பிள்ளைகள் உங்களை இப்படி முகாமில் சேர்த்து விடுதலைப் பெற விரும்புகிறார்களே என்றுக் கேட்டேன்.

பெரியவர் கூறிய பதில் என்னை திக்கு முக்காட வைத்துவிட்டது. ஐயா நான் குடிக்கிறதற்கு காரணமே என் மனைவிதான். அவள் நல்லவள் அல்ல. அவள் கெட்டவள். அதனால் தான் அதை மறக்க குடிக்கிறேன் என்றார்.

அருகில் இருந்த அவருடைய 68 வயது மனைவி சிரித்துக்கொண்டே, ஐயா இவர் குடிக்க ஆரம்பிச்சதிலிருந்து சில வருஷமாகவே இப்படி என்னைக் குறைக்கூறிக் கொண்டே இருக்கிறார். நான் பிள்ளைகள் பெற்று, பேரப்பிள்ளைகளுக்கே திருமணம் ஆயிட்டு.  நீங்க தான் அவருக்கு ஏதாவது செய்யணும் அப்படி சொன்னாங்க.

மது என்பது இந்தியர்களை பாடாய் படுத்துகிறது. ஒருவர் பிறந்தாலும், ஒருவர் இறந்தாலும், எல்லாவற்றிற்கும் மது தான் மைய இடத்தை பிடித்து வருகிறது. எல்லாவற்றிற்கும் உற்சாகம் தரும் பானமாகவே நினைத்து பயன்படுத்துகின்றனர். ஏழு இந்தியர்களில் ஒருவர் குடிகாரராக இருக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 15% பேர் குடிக்கு அடிமையாக வாழ்கின்றனர். 

மது என்பது மனிதனின் நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்து மைய நரம்பு மண்டலத்தையே பாதிக்கும் தன்மை உடையதாக உள்ளது. குடி பழக்கத்தினால் பல  ஆண்கள் தங்கள் மனைவி மீது சந்தேகம் கொண்டு பெண்களை அடித்து துரத்துகின்றனர், கொலை வெறித்தாக்குதல்களையும் மேற்கொள்ளுகின்றனர். மது பழக்கத்திற்கு தடையாக மனைவியோ, பிள்ளைகளோ, பெற்றோர்களோ யார் எதிராக நின்றாலும் மூர்க்கத்தோடு எதிர்த்து நிற்கின்றனர். குடி வெறியினால் பாதிக்கப்பட்ட அநேகர் மனைவியை சந்தேகக் கண்ணோடே பார்க்கின்றனர். பலர் சந்தேகம் சார்ந்த மனசிதைவு நோயினாலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இப்படி தாக்கத்திற்குள்ளானவர்கள் தவறான எண்ணங்களாலும் நம்பிக்கையினாலும் மிகவும் வேதனைப்படுகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட அறிகுறிகள் உடன் அவர்கள் வாழ்வதை அறியலாம்.

a)  மனைவியை தவறான கண்ணோட்டத்தோடே பார்ப்பது, பின் தொடர்வது.

b)  குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் போகும் போது ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசினால் கூட என்னைப் பற்றித்தான்  எல்லாரும் பேசி கேலிச் செய்வதாக சண்டை யிடுவர்.

c)  தன் மனைவி, பிள்ளைகள் தன்னை அழிப்பதற்கு திட்டமிடுவதாக நினைப்பர்.

d)  குடிப்பதற்கு பணம் கொடுக்காவிட்டால் எரிச்சலுடன் நடந்துக்கொள்வர்.   சில வேளையில் பொருட்களை உடைக்கும் அளவிற்கு சென்று விடுவர்.

இவ்வாறு சந்தேகம் சார்ந்த மனநோய் ஏற்படும் போது அவர்களைச் சரிச் செய்ய நினைத்தால் நல்ல மனநல மருத்துவர்களைத்தான் அணுகவேண்டும் அல்லது மனநல ஆலோசகர்களைத்தான் நீங்கள் தொடர்புக் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சந்தேகம் தானே என்று விட்டு விட்டுவிடாமல் அவர்களுக்கு உதவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் மனைவி நிம்மதியாக வாழ முடியும். ஆனால் குடிக்கு அடிமையானவர்கள் எளிதில் இதை உணரமாட்டார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு நோய் என்பதை ஏற்கும் மனநிலை இல்லாமல் இருப்பார்கள்.  

திருமறையில் நீதிமொழிகள் 23:31-33 ல் "மதுபானம் இரத்த வருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும் போது, நீ அதைப் பாராதே.   அது மெதுவாய் இறங்கும்.   முடிவிலே அது பாம்பைப் போல் கடிக்கும், விரியனைப் போல் தீண்டும்.. உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்" என்று கூறி நம்மை எச்சரிக்கிறது. மதுபானம் என்பது நல்ல பண்புள்ள மனைவியையும் சந்தேகிக்க வைப்பதினால் மனமுடைந்து தற்கொலைச் செய்கிற பெண்களும் உண்டு, கணவன் தன்னை தவறாக சித்தரிப்பதினால் கணவன் தூங்கும் போது மாவரைக்கும் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொன்றவர்களும் உண்டு. எனவே பல குற்றவாளிகளை உருவாக்கி விடும் மதுபானத்திற்கு இன்று ஒரு முற்று புள்ளி வைத்து  விட்டு குடும்பத்தை மகிழ்ச்சியான வழியில் நடத்த முடிவெடுங்களேன்!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி