கொஞ்சம் தூங்க விடுங்க மம்மி


சூரிய உதயத்தை இன்று அனேக சிறுபிள்ளைகள் பார்த்ததே இல்லை. அவர்கள் எழுகிற நேரமெல்லாம் காலை 9, 10, 11 மணிக்குத்தான். அதற்கு முன்பாக எழுப்பினால் “ஏன் என்னை disturb பண்ணுறீங்க. எனக்கு தான் இன்றைக்கு school, college, work கிடையாதே. அப்படி இருக்கும்போது என்னை தொந்தரவு செய்யாமல் விட்டு விட வேண்டியது தான”  இது பிள்ளைகளுடைய வாதம்.

வாதத்திற்கு supportஆக சில பெற்றோர் என் பிள்ளை இரவு முழுவதும் விழித்தே இருக்கிறாள். Laptopலே  தான் இருக்கிறார்கள். என்ன செய்ய பிள்ளைகளுக்கும் நேரம் போக மாட்டேங்குது. வெளியே விடுகிறதற்கும் பயமா இருக்குது. காலம் கெட்டுப் போய் கிடக்கிறது. வெளியே போய் பிள்ளைகள் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் சும்மா Laptop, Mobile phone என்று இருந்துட்டா நமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்து சரி நம்ம பிள்ளை தான, அடுத்த ரூமில் தானே இருக்கிறார்கள், பார்த்து விட்டு போகட்டுமே என்று பெற்றோர்கள் தங்கள் தாராளத்தை காண்பிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட பெற்றோரின் தாராள மனப்பான்மையால் இரவு முழுவதும் facebook, twitter, whatsapp, instagram என்று பார்த்துவிட்டு, மிகப்பெரிய சாதனையை செய்து முடித்தது போல் என்னை காலையிலே disturb பண்ணாதீங்க என்று பிள்ளைகள் அலட்டிக் கொள்ளுகிறார்கள். பெற்றோர்களும் இதற்கு தூபம் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைக்கு என்று எந்தவிதமான எதிர் நோக்கும் இல்லாமல் ஒரு பூஜ்ஜிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் நல்ல எதிர்நோக்கு உள்ளவர்களாக வாழ உதவிடுங்கள். அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு முற்படுங்கள். வாழ்க்கை என்பது போட்டி நிறைந்தது என்பதை உணர்த்திட வேண்டியது அவசியம்.

1984 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களைப் பெற்று புகழின் உச்சத்திற்கு சென்றவர் கார்ல் லூயிஸ் (Carl Lewis). சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகமே அவரை தூக்கிவைத்துக் கொண்டாடியது. அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கத்தை  வென்று மகிழ்ச்சியுடன் நின்றபோது அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. “இப்பொழுது ஒலிம்பிக் போட்டி நிறைவடைகிறது, உங்கள் விடுமுறை திட்டம் என்ன?” என்று கேட்டார்கள். அவர் கூறின பதில் அனைவரையும் வியக்க வைத்தது. “நான் நாளை முதல் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை செய்ய போகிறேன்” என்றார். அடுத்த ஒலிம்பிக் என்பது 1988ல் தான் நடைபெற உள்ளது. ஆனால் அடுத்த நான்கு ஆண்டிற்கு பிறகு நடப்பதற்கு இப்பொழுதே ஆயத்தமாகி  விட்டார். அதன் விளைவு 1988ல் சியோலில்   நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கத்தை வென்ற தங்கமகன் ஆனார். அதோடு விட்டாரா என்று கேள்வியை கேட்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. 1992ல் அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி பார்சிலோனாவில் நடைபெற்றது. அதிலும் இரண்டு தங்கங்களை வென்று முயற்சிக்கு பலனை பெற்றுக் கொண்டார். 

முயற்சி இல்லாமல் படுத்துக்கொண்டே please mummy என்னை எழுப்பாதீங்க என்று கூறினால் அடித்து எழுப்புங்கள். உங்கள் பிள்ளைகள் உலகத்தோடு போட்டி போட எழுப்புங்கள்.

திருமறையில் தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்ற இளைஞர்கள் கைதிகளாக பாபிலோனில் வாழ்ந்தாலும் காலத்தை வெறுமையாக mobile phone chatting பண்ணி கழித்து விட விரும்பவில்லை. அறிவிலும் ஞானத்திலும் தேர்ச்சி பெற முயற்சி எடுத்தனர். அதன் விளைவு, இராஜா அவர்களோடு பேசிய போது அவர்கள் அறிவையும் ஞானத்தையும் கண்டு வியந்தான். அவர்களை தன்னுடைய அரசவையில் பொறுப்புகளை கொடுத்து உயர்த்தி வைத்தான் (தானியேல் 1:20). முயற்சி இல்லாமல் இருப்பவர்களை அல்லது சோம்பேறிகளை கடவுள் ஒருபோதும் உயர்த்த மாட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு எழுப்புங்கள்!  எழும்பிப் பிரகாசிக்க!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி