கொஞ்சம் பறக்க விடுங்களேன்
ஜீன் அவளை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி, எப்படிம்மா இருக்கிறா? Husband எப்படி இருக்கிறாங்க? என்றார். நல்லா இருக்கிறேன் uncle என்றவள் husband பற்றி ஒன்றும் கூறவில்லை. ஏம்மா எங்க வீட்டுக்கு அவரையும் அழைத்து வந்து இருக்கலாமே என்று கூற, அவள் - uncle அவரை பற்றி என்னிடம் ஒன்றும் கேட்காதீங்க என்றாள்.
ஜீனுக்கு சற்று மனது குழம்பியது. கவினை நோக்கி பார்த்தார். அதற்குள்ளாக கவின் முந்திக் கொண்டார், “அவன் ஒன்றுக்கும் உதவ மாட்டான், தெரியாமல் மாட்டிக் கொண்டோம்” என்றார்.
கவின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க, அவரது மகள் அங்கும் இங்குமாய் பார்த்து ஜீன் கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை.
வந்ததும் வராததுமாய் தெரியாமல் கேட்டு கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருத்தப்பட்ட ஜீன், “வாங்க வீட்டிற்குள் போகாமல் வெளியேயே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
மாலை மயங்கும் போது அப்படியே கவின் மகள் ஜான்சி, வீட்டிற்கு பின்புறம் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அங்கே வண்ணத்துப்பூச்சிகள் இனிமையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன.
அங்கே வண்ணத்துப்பூச்சிகளின் முட்டைகளை பார்த்தாள். ஒரு முட்டையிலிருந்து சிறு பூச்சி போல் உள்ளே இருந்து கொண்டு வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது.
பாவம் எவ்வளவு கஷ்டப்படுகிறதே என்று ஜான்சி அதற்கு உதவிட முன் வந்தாள். மெதுவாக அது கஷ்டப்படாமல் அந்த முட்டையிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள். தான் ஒரு நல்ல வெட்னரி டாக்டர் போல் செய்து விட்டோமே என்று மனதுக்குள் மகிழ்ந்தாள்.
மறுநாள் காலையிலே வந்து வண்ணத்துப்பூச்சியாக பறந்து விட்டதா என்று பார்க்க விரைந்து வந்தாள். ஆனால் பாவம் அந்த பூச்சி இன்னமும் அது ஊர்ந்து கொண்டே அலைந்தது.
விடவில்லை மாலை வேளையிலும் வந்து பார்த்தாள். அது இன்னும் பறப்பது போல் தெரியவில்லை. என்ன இது பறக்க மாட்டேங்குதுதே! இவ்வளவு help பண்ணியும் என்ன இப்படி இருக்கிறது என்று மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அந்த வேளையில் ஜீன் அவளைப் பார்த்து விட்டார். என்ன கவின் உன் மகள் அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறிக்கொண்டே இரண்டு பேரும் வந்தார்கள்.
Uncle நான் எவ்வளவு உதவி செய்தாலும் பறக்க மாட்டேங்குது, பூச்சி போலவே தான் இருக்கிறது என்றாள்.
ஜீன் சிரித்தார், மகளே இந்த பூச்சி நீதான் என்றார். ஜான்சிக்கு என்ன uncle விளையாட்டா என்றாள்.
இல்லை மகளே உண்மையைத்தான் சொல்லுகிறேன். அது முட்டையிலிருந்து வெளியே வர நீ உதவி செய்ததால், பெரிய help பண்ணினதாக நினைத்தாய். ஆனால் அது இயற்கையாகவே தன் தலையை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓட்டை உடைக்கும் போது அதன் உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் ஓடிக்கொண்டே இருக்கும். அது ஒரு வாரத்தில் வண்ணத்துப் பூச்சியாக பறக்க பலன் கிடைத்துவிடும். ஆனால் நீ இப்பொழுது உதவி செய்ததால் அது வாழ்நாள் முழுவதும் புழுவாகவே ஊர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.
மெதுவாக கவினை நோக்கி, bro நீயும் உன் மகளுக்கு இப்படித்தான் உதவி செய்து கொண்டிருக்கிறாய். உன் மகள் உலகில் அவள் கணவனுடன் பறப்பதற்கு விட்டுவிடு, கூட்டுப் புழுவாக மாற்றி விடாதே என்றார்.
யாக்கோபு லாபானை விட்டுப் புறப்படும்போது தன் பிள்ளைகளையும், தன் மனைவிகளையும் கூட்டிக்கொண்டே சென்றான். (ஆதியாகமம் 31:17) லாபானிடம் அதிக சொத்துக்கள் இருந்தாலும் ராகேலும், லேயாளும் அவள் கணவனுடனே புறப்பட்டார்கள் என்பதை கவினுக்கு எடுத்துக்காட்டினார் ஜீன்.
அந்த வேளை பார்த்து, ஜான்சி cell சிணுங்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்தாள். அவள் husband தான். அப்பா அவர் தான் பேசுகிறார் என்று cellயை தகப்பனிடம் நீட்டினாள்.
கவின் மகளைப் பார்த்து நீ பேசுமா, உன் husband தானே! நீ பேசு!! ஜான்சிக்கு தூக்கிவாரிப்போட்டது. நான் கூட்டுப் புழுவாக துடிப்பதை அப்பா புரிந்து கொண்டாரே என்று கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
என்னங்க நான் ஜீன் uncle வீட்டில்தான் இருக்கிறேன், நீங்க வாரீங்களா என்றாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜான்சி வண்ணத்துப்பூச்சியாய் பறகடித்து சென்றாள்.
வேண்டாம் பிரியமானவர்களே உங்கள் பிள்ளைகளை எத்தனை நாள்தான் பராமரிக்கப் போகிறீர்கள், அவர்கள் வாழ்வை கெடுக்காதிருங்கள். நீங்கள் உதவி செய்வதாக நினைத்து தீமை செய்கிறீர்கள். கர்த்தர் உங்களை கண்டித்து உணர்த்துகிறார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment