இதுவெல்லாம் ஒரு மேட்டரே இல்லீங்க


பெரிய கம்பெனி ஒன்றில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார். மிகவும் லாவகமாக பிரச்சனைகளைக் கைக்கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான். அவருடைய P.A அவரை நன்றாக கவனித்துக் கொண்டே வந்தார். எந்த பிரச்சனையைக் கண்டும், கொஞ்சமும் அசராத தன் தலைவியைப் பார்த்து ஒரு நாள் கேட்டுவிடவேண்டும் என்று மனதில் யோசித்துக் கொண்டே இருந்தார். சந்தர்ப்பம் தான் சரியாக வாய்க்கவில்லை. 

நாட்கள் உருண்டு ஓடியது. கம்பெனியில் தொழிலாளர்களுக்கிடையே மிகப் பெரிய பிரச்சனை. தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த தலைவிக்கு மிகவும் குடைச்சலைக் கொடுத்தது. பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர company யில் பணிபுரியும் பலரை அழைத்து அழைத்துப் பேசிப்பார்த்தார். பிரச்சனை குறையாமல் வளர்ந்து போய் கொண்டே இருந்தது. பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளையும், மிரட்டல்களையும் விட்டுப் பார்த்தார்.   ஒன்றும் பலிக்கவில்லை.

மாலை வேளை வந்தது. பிரச்சனை தலைக்கு மேலேப் போய் கொண்டிருந்தது.  தலையை பிடித்துக்கொண்டிருந்தார். P.A  அவரின் பரிதாப நிலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் அந்த அற்புத நிகழ்வு நடந்தது.

எப்பொழுதெல்லாம் வெள்ளம் தலைக்கு மேலேப் போகிறதோ அப்பொழுதெல்லாம் அவர் தன்னுடைய மேஜை டிராயரின் உள் பகுதியில் உள்ள ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அந்த பார்வை சில நிமிடங்கள் நடக்கும், பின்பு ஒரு மகிழ்ச்சி முகத்தில் படர, படத்தை உள்ளே வைத்து விட்டு சிரித்துக் கொண்டு பிரச்சனையை லாவகமாக கையாண்டு முடிவுக் கொண்டு வந்து விடுவார்.   அன்றும் அப்படியே நடந்தது.

மெதுவாக P.A ரகசியத்தை அறிந்துக் கொள்ள தீர்மானித்து, மேடம் என்று மெதுவாக கூப்பிட்டார்.

என்ன என்று திரும்பினார் தலைமை அதிகாரி.

இல்ல தப்பா நினைச்சிடாதீங்க. அடிக்கடி பிரச்சனை வரும் போது டிராயரைத் திறந்து ஏதோ ஒன்றைப் பார்க்கிறீர்கள். உங்கள் முகத்தில் மாற்றம் உடனே நடைபெறுகிறதே.   அது தான் என்ன என்று தெரிந்துக் கொள்ளலாமா?

ஆகா கா கா என்று சிரித்தார் தலைமை அதிகாரி. அது ஒன்றும் இல்ல ஆண்ட்ரு. என் கணவர் படத்தைத்தான் நான் என் டிராயரில் வைத்திருக்கிறேன். எப்பொழுதெல்லாம் பிரச்சனைத் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அந்த Photoவை எடுத்துப்பார்ப்பேன். இந்த மனுஷனையே நான் சமாளித்து 35 வருடமா காலத்தைக் கடத்துகிறேனே.

இந்த comapanyயில் இப்போம் வந்து join பண்ணின இந்த பயல்க எம்மாத்திரம் என்பதை உணருகிறதுக்குத்தான், அவருடைய படத்தை எடுத்துப் பார்ப்பேன். வேறு ஒன்றும் இல்ல என்றார்.

இனியவர்களே பலருடைய வாழ்க்கை என்பது போராட்டமாகவே தான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஒரு குடும்பத்தை பொறுப்புடன் நடத்தி குடும்ப வாழ்வில் நிலைத்திருக்கும் போது பொறுமை நம்  உள்ளத்திற்குள் குடிக்கொண்டு விடுகிறது. எனவே தான் பவுலடியார் "ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?" என்று குறிப்பிடுகிறார். குடும்ப வாழ்வு என்பது பொறுமையைக் கற்றுக் கொடுக்கும் இடம், விட்டுக் கொடுக்கும் இடம், மன்னிக்கும் இடம், தவறுகள் செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் இடம், நீடிய பொறுமையை வெளிக்காட்டும் இடம். எனவே குடும்ப வாழ்வில் வெற்றி பெறுகிறவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற இயலும். குடும்ப வாழ்வில் தோல்வியுறுகிறவர்கள், பொதுவாழ்விலும் பிறருடைய பிரச்சனைகளைப் புரிந்துக்கொள்ள இயலாதவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும். தான் செய்கிறது  தான் சரி என்று செயல்படுகிறவர்களாகவும் காணப்படுவர். எனவே குடும்பவாழ்வை திட்டமிடுவோம், வெற்றி பெறுவோம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி