ஒத்துப் போக வேண்டுமா?
தொலைப்பேசி அழைப்பு ஓன்று வந்தது. ஹலோ என்றேன். ஐயா, நான் மேரி பேசுகிறேன், என்று கூறி ஊர் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னார். என்னுடைய திருமணத்தை நீங்கள் தான் நடத்தி வைத்தீர்கள் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்றார்.
அப்படியா என்றேன். என்ன விஷயமாக போன் செய்தீர்கள் என்றேன். ஐயா நீங்க தான் திருமணம் செய்து வைத்தீர்கள். இப்பொழுது என் கணவருக்கும் எனக்கும் எந்த விஷயத்திலும் ஒத்தே போகவில்லை. எனவே தயவு செய்து பிரித்து விட்டு விட வேண்டும். அதற்கு தான் உங்களை நேரில் பார்க்க போன் பண்ணினேன் என்றார்.
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், " எனக்கு சேர்த்து வைக்கிற வேலை மட்டும் தான் உண்டு, பிரித்து வைக்க எனக்கு அதிகாரம் கிடையாதே என்றேன்."
தொடர்ந்து என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி நான் சிந்திப்பதற்கும் என் கணவன் சிந்திப்பதற்கும் முற்றிலும் முரண்பாடாக உள்ளது. என் பிள்ளையை CBSE Schoolல் சேர்க்க வேண்டுமென்றால் அவர் அரசு பள்ளியில் படித்து நாமெல்லாம் பெரிய ஆளாக மாறவில்லையோ என்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் நேருக்கு மாறாக செயல்படுகிறார். நான் அவரோடு இருந்தால் தினமும் சண்டைப் போட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதற்கு பதிலாக நீங்களே உங்க கையால பிரிச்சு வைச்சிட்டிங்கண்னா நிம்மதியாக இருக்கும் என்றார்.
இதைப் போன்று கணவன் மனைவி இருவரும் எல்லாவிதத்திலும் ஒத்துப் போக முடியுமா? என்ற கேள்வி எல்லாருடைய உள்ளத்திலும் எழும்பிக்கொண்டே தான் இருக்கிறது. இதே கேள்வியை பில்லி கிரகாமின் மனைவியிடத்திலும் கேட்டார்கள். அதற்கு அந்த பெண்மணி கூறின பதில் மிகவும் அருமையானது. "நானும் பில்லிகிரகாமும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போனோம் என்றால், எங்களில் ஒருவர் எப்படியும் தேவையில்லாமல் போய்விடுவோமே" என்று கூறினார்.
திருமறையிலும் ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. அதேப் போல யாக்கோபுக்கும் அவன் மனைவிக்கும் இடையே கூட மனக்கசப்புகள் வந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு குடும்ப வாழ்வில் சண்டைகள் என்பது மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது வருவது இயற்கைதான். மனிதர் என்றால் அவனுக்கு என்று ஒரு கருத்து இயற்கையாகவே வரத்தான் செய்யும். ஆனால் சில வேளைகளில் நம் கருத்தை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கும் போது சண்டைக்கு முடிவு வந்து விடுகிறது. இருவரில் ஒருவர் அவ்வப்போது விட்டுக் கொடுத்துப் போகும் போது பிரச்சனைகள் என்பது தீர்ந்து விடும். நான் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்று அகந்தையுடன் செயல்படும் போது தான் பிரிவினைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண முயலுவோம். ஏனென்றால் நமக்கு கர்த்தர் கொடுத்த துணை ஏற்ற துணை.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment