குழந்தை மொழி தெரியுமா?

ஆறாம் வகுப்பு படிக்கும் டேவிட்டை எனக்கு முன்பாக நிறுத்தி ஐயா, என் பேரன் கொஞ்சம் பயந்து இருக்கிறான். பிசாசு கோளாறு போன்று உள்ளது. நீங்க ஜெபம் பண்ணி விடுவீங்களா என்று ஒரு வயதான தாய் தன் பேரனோடு வந்து நின்றார்கள்.

என்ன நடந்தது என்று விசாரித்தேன். அதற்கு அந்த தாய் தன் பேரன் இரவு வேளைகளில் ஐயோ அடிக்காதீங்க என்று திடீரென்று கத்துகிறான். சிறுநீரை இரவு படுக்கையிலேயே கழித்து விடுகிறான். இதுவெல்லாம் ஆறு மாசமாகத்தான் நடக்கிறது. புது வீட்டிற்கு வந்ததில் இருந்து இப்படியாக நடக்கிறது என்றார்கள்.

பையனை பார்த்தால் வருத்தமான முகத்தோடு இருந்தான். அவனோடு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசி விட்டு ஜெபிக்கிறேன் என்று அந்த வயதான பெண்ணை அனுப்பி வைத்தேன்.

ஒரு paperஐ கொடுத்து அவனுக்கு விருப்பமான படத்தை வரைய சொன்னேன். உடனே உற்சாகத்தோடு படம் வரைய ஆரம்பித்தான். அதில் ஒரு பையன் அழுவதைப் போன்றும்,  மற்றவர்கள் சிரிப்பது போன்றும் வரைந்திருந்தான்.

அவனிடம் கேட்டேன். அந்த அழுகிற நபர் யார் என்று!

நான் தான் என்று தலையை அசைத்தான். சிரிப்பது யார் என்றேன். அவன் “friends” என்றான்.

பிரச்சனையை புரிந்து கொண்டேன். அவன் 5th std வரை கிராமத்தில் படித்து வந்திருக்கிறான். திடீரென்று பெற்றோர் அவன் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நகரத்திற்கு வந்து CBSE பள்ளியில் சேர்த்துள்ளனர். வந்த உடன் Englishல்  பேசமுடியாமல் தடுமாறியுள்ளான். அதைப் பார்த்து நண்பர்கள் கிண்டல் அடித்துள்ளனர். ஆசிரியரும் அவனை திட்டியுள்ளனர். இது அவனுடைய மனதில் பெரிய வருத்தத்தை உண்டு பண்ணியது. இந்த பள்ளியில் படிக்க மாட்டேன் என்று பெற்றோரிடம் அழுதுள்ளான். ஆனால் பெற்றோர் விடவில்லை. எனவே பள்ளியின் மீது பெரிய வெறுப்பு அவனுக்குள்  உருவாகிவிட்டது. இதன் விளைவு தான் படுக்கையில் சிறுநீர் கழிப்பதும், தூக்கத்தில் புலம்புவதும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நன்றாக ஜெபித்து, பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்கினேன். சிலவேளைகளில் பிள்ளைகளால் எட்டமுடியாத இலக்குகளை பெற்றோர் நியமித்து பிள்ளைகளை முயற்சிக்க செய்தால் அது அவர்களை வெறுக்க செய்துவிடும். வெறுப்பின் காரணமாக மன அழுத்தம், மனச் சோர்வுக்குள்ளாக  போய்விடுவார்கள். பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை இருக்கும் வரையில்தான் நாம் இலக்குகளை அமைத்து உந்தித் தள்ள முடியும். அதே வேளையில் நாம் நியமித்திருக்கிற இலக்குகளை கண்டு மிரண்டு போகிறார்கள் என்று உணர்ந்தால் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிள்ளைகள் தோல்விகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். காரணம் பெற்றோருக்காகவே பள்ளிக்கு போவார்கள், B.E படிப்பார்கள், IAS Exam ஆயத்தம்  செய்வார்கள். ஆனால் முழுமனதோடு எதையும் செய்ய மாட்டார்கள். காலங்கள் தான் கடந்து போகுமேயன்றி, முன்னேற்றம் எதுவும் பிள்ளைகள் வாழ்வில் தென்படாது.

பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது பெற்றோரின் கடமை தான். ஆனாலும் உங்கள் பிள்ளைகளை குறித்து கர்த்தருக்கு ஒரு சித்தம் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. தாயின் கர்ப்பத்தில் இருக்கின்ற போதே  உன்னை தெரிந்துகொண்டேன் என்று கூறுகிறவர் நமது ஆண்டவர்.

யோசேப்பு போன்றோருக்கு சிறுவர்களாக இருக்கும்போதே தூர தரிசனங்களை காண்பித்து அதற்கு நேராக கர்த்தர் வழி நடத்தினார் என்பதை பெற்றோர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே கர்த்தர் இன்றும் என் பிள்ளையை குறித்து அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்று நம்பி செயல்படுங்கள். ஏற்ற வேளையில்  கர்த்தர் உங்கள் பிள்ளைகளை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள்ளாக கொடுங்கள். நிச்சயமாகவே உங்கள் பிள்ளைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்