ஐ லவ் சீடா


ஆன்ட்வெர்ப் என்ற உயிரியல் பூங்கா பெல்ஜியம் நாட்டில் உள்ளது. இப்பூங்காவில் ஏராளமான மனித குரங்குகள் கண்ணாடி கூண்டிற்குள் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 38 வயது நிரம்பிய சீடா என்ற மனித குரங்கும் வாழ்ந்து வருகிறது. இந்த பூங்காவில் வரும் மக்கள் இந்த கண்ணாடி வழியாகவே இந்த மனித குரங்குகளிடம் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவர்.

இவ்வாறு வருகைத் தருபவர்களில் அடிய் டிம்மர்மேன்ஸ் என்ற பெண் இங்குள்ள மனித குரங்குகளில் குறிப்பாக சீடா என்ற மனித குரங்கிடம் அதிக நேரம் செலவிட்டு மகிழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல வாரத்திற்கு நான்கு நாட்கள் சீடாவிடம் நேரத்தை செலவிட வந்தார். ஒரு நாளுக்கு சுமார் 15 மணி நேரம் சீடாவிடம்  செலவிடும் அளவிற்கு சென்றார். கண்ணாடி வழியாக இருவரும் முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

மனித குரங்காகிய சீடா இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டது. மற்ற யாரைப்பார்த்தாலும் "சீசீ இந்த பழம் புளிக்கும்" என்று யாரையும் கண்டுக்கொள்ளாமல் வெறுத்தது. குறிப்பாக தன்னுடைய மனித குரங்குகள் இனத்தையும் கூட கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது. 

நிலைமை மோசமடைவதைக்கண்ட பூங்கா பராமரிப்பாளர்கள் அடிய் க்கு தடைப் போட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அடிய் கண் கலங்கினார். எங்க அன்பை பிரிக்கிறீர்களே இது நியாயமா? சீடாவும் என்னை நேசிக்கிறது! ஐ லவ் சீடா! எங்களுக்குள் ஒரு உறவு இருக்கிறது. இது உலகத்திற்கு புரியவில்லையே என்று கண் கலங்கினார்.

மனித குரங்கிடம் மனதைப் பறி கொடுத்த இளம்பெண் நிலை என்பது 'காதலுக்கு கண் நிலை' என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. உலகத்தில் மக்களின் நிலை எந்த அளவிற்கெல்லாம் போய் கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

திருமறை ஆரோக்கியமற்ற உறவு நிலையை ஆதரிக்கவில்லை. மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்ற ஆண்டவர் துணையாக ஒரு பெண்ணைத்தான் உருவாக்கினார். மிருகங்கள் அவனுக்கு ஏற்ற துணையாய் இருக்கவில்லை என்பதை ஆண்டவரே புரிந்துக் கொண்டார். ஆனால் மனிதன் மிருகங்கள் மீது அளவு கடந்த உறவுகளை வைத்துக் கொள்வது ஆபத்துக்களை கொண்டு வரக்கூடியதாகவே அமைந்து விடும்.

துவக்க காலங்களிலேயே இப்படிப்பட்டவர்களின் விருப்பத்தை மாற்றிக்கொள்ள பூங்கா நிர்வாகிகள் எடுத்த முடிவது சரியானது. எனென்றால் இவர்கள் இந்நிலையிலிருந்து விலகி சாதாரணமாக மனிதரை நேசிக்க, சகஜமான நிலைக்கு வந்து விட வாய்ப்பாக அமையும்.

மனோதத்துவ நிபுணர் பால் ஹாக் என்பவர் குறிப்பிடும் போது "வழுக்கி விழும் நிகழ்வுகள் அதிகமாக நடக்காமல், அதிகம் சோர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.

சிலர் இவ்வாறு மிருகங்களுடன் பழகி இதுவே போதும் எதற்கு ஒரு கணவன்! எதற்கு ஒரு மனைவி! இந்த நாயே நமக்கு நன்றி உள்ளதாக இருக்கிறது என்று திருப்தியடைந்தும் விடுகின்றனர். சகோதர, சகோதரிகளே realityக்கு திரும்புங்கள். உங்கள் ஏற்ற துணை மனித குரங்கோ, நாயோ... எதுவும் இல்லை. ஒரு மனுஷன், மனுஷி தான். தேடுங்கள் உங்கள் விலா எலும்பை!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்