நேசித்தது கிடைக்காவிடில், கிடைத்ததை நேசி
வட இந்தியாவில் யாத்ரீகர்களை திருட்டு கும்பல் கொள்ளையடிப்பது மிகவும் யாத்திரிகர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. மக்களை கொள்ளையடித்த பின் கொன்று விடுவதற்காகவே தாங்கள் படைக்கப்பட்டதாக எண்ணி இந்த மக்களை கொன்று குவித்தனர். பக்ராம் என்ற கொள்ளையன் 719 பயணிகளை கொன்றதாக மெடௌ டெய்லர் (Meadow Taylor) என்பவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். ஆண்டுக்கு ஏறக்குறைய 30,000 யாத்திரிகர்களை கொன்று குவிக்கப்பட்ட நிலையில், ஸ்லிமென் இந்தக் கொள்ளை கும்பல்களை அடியோடு ஒழித்துக் கட்டினார். பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி வகித்தார். பதவி அவருக்கு பெருமை சேர்ப்பதை காட்டிலும் அவருடைய பணியினால் பெருமைப்படுத்தப்பட்டார். வரலாறு இன்றும் அவரை “வழிப்பறிக் கொள்ளையர்களைப் ஒழித்தவர்” என்று பெருமையாக கூறிக் கொண்டே இருக்கிறது. கிடைக்காத பதவிக்காக ஏக்கப்படாமல் கிடைத்ததைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.
இதை போன்றுதான் இல்லற வாழ்விலும் எவ்வளவோ வரன் வருகிறது ஆனால் எங்கள் விருப்பப்படி ஒன்றும் அமைய மாட்டேங்குது என்று கூறிக்கொண்டு பிள்ளைகளை 35 வயது வரையிலும் காத்திருக்க வைக்கிறீர்களா? சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் எப்பொழுது திருமணம் செய்தீர்கள், வசதி வாய்ப்பு குறைவாக இருந்தபோதே உங்கள் பெற்றோர் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைத்தார்கள் அல்லவா? நீங்கள் உங்கள் கடமைகளை தட்டிக் கழிக்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளும் அறிவார்கள். ஆனால் அதை எப்படி சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள். வருகிற வரனில் ஓரளவிற்கு ஏற்புடையதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கிற்கு சரியான வரனை தேட முயற்சி செய்கிறான். தான் நேரடியாக போக முடியாத சூழலில் தன் வேலைக்காரனிடத்தில் Terms and Conditionsயை சொல்லி ஒரு பெண்ணை தேடச் சொல்லுகிறான். அதே வேளையில் அந்த வேலைக்காரனும் ஆண்டவரிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறான்.
இன்று பலர் நாங்கள் ஜெபித்துக் கொண்டே தான் இருக்கிறோம், ஒரு வரனும் சரியாக அமையவில்லை. கடவுள் தான் இறங்க வேண்டும் என்று கடவுள் மீது பழி போடுகின்றனர். இது ஒரு தவறு. பல ஆண்டுக்கு முன்பே எலியேசரை பயன்படுத்தி வரன் தேடுகிறார் ஆபிரகாம். இன்று திருமண தகவல் மையம் அதே பணியை தான் செய்து வருகிறது. அதை பயன்படுத்திக் கொண்டு இறை சித்தத்தின்படி முடிவெடுங்கள்.
திருமணமானவர்களில் சிலருக்கு தான் திருமணம் செய்து கொண்ட கணவன்/மனைவி மீது திருப்தி இருக்காது. நான் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்து இருந்தேன். ஆனால் வந்திருக்கிற கணவன்/மனைவி அப்படி இல்லை என்று வருத்தப்படுகிறீர்கள்.
சிலர் அடுத்த கணவன் / மனைவியோடு ஒப்பீட்டு அவர்களை போல் என் கணவன் / மனைவி இல்லை என்று ஏக்கத்தோடு இருக்கிறீர்கள். “இக்கரைக்கு அக்கரை பச்சை”. மனதை போட்டுக் குழப்பிக் கொண்டு இருக்காதிருங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக தவறு செய்ய மாட்டார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment