வேண்டாம் Reverse Gear


சில இளைஞர்களுடைய திறமையை கண்டு வியந்து போய் ஐயோ எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று மூக்கு மேல் கை வைக்க வேண்டிய சூழல் நமக்கு வருகிறது.

ATMல் அடுத்தவர்கள் பணம் எடுத்துவிட்டு சென்றபின், ATM கார்டு இல்லாமல் மற்றவர்கள் பணத்தை அபேஸ் செய்து பெரிய ஆளாய் மாறுவது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருவர் pocketல் உள்ள ATM கார்டை, அவர்கள் அறியாமல் இருக்கும் போது ஸ்கேன் செய்து தங்கள் அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பி விடுவது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு கோடிக்கு வாங்கின காரை ஒரு ரூபாயை கொண்டு திறந்து, உள்ளே உள்ள laptop, பணப்பையை தூக்கி செல்வது ஆச்சரியமாக இருக்கிறது.

நம்முடைய செல்போனை hack செய்து, நம் விருப்பம் இல்லாமல் நம்முடைய account பணத்தை தன்னுடைய accountக்கு மாற்றி பணத்தை ஸ்வாகா செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி திறமைகளை புறவாசல் வழியாக பயன்படுத்தி முன்னுக்கு வர சில இளைஞர்கள் முற்படுகின்றனர். நேர்மையான வழியில் சம்பாதித்தால் என்று தான் முன்னுக்கு வரமுடியும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். ஆனால் நேர்மையான வழியில் நமது திறமைகளை பயன்படுத்தினால் தான் நாம் நிரந்தரமாக முன்னுக்கு செல்ல முடியும்.

வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் Harvard பல்கலைக் கழகத்தின் படிப்பை இடையிலே நிறுத்தி சல்யூட் அடித்துவிட்டு வெளியே வந்தார் ஒரு இளம் வயது நிறைந்தவர். கம்ப்யூட்டர் உலகில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற கனவு  உள்ளவருக்கு கம்ப்யூட்டர் நிறுவனம் துவங்க தேவையான பணம் இல்லை. கையைப் பிசைந்துகொண்டு பணமில்லாமல் Apple, Intel போன்ற நிறுவனங்களோடு போட்டியிட முடியுமா? பேசாமல் குறுக்கு வழி ஏதாவது உண்டா என்று யோசிக்கவில்லை. மாறாக hardware செய்த அவர்கள் softwareயை தேட வேண்டிய சூழல் இருப்பதை அறிந்து மூளையை 5th Gear க்கு தள்ளினார். Operating System என்ற இயங்குதளத்தை உருவாக்க மூளையை கசக்கி பிழிந்தார். அதிலிருந்து வெளிவந்தது தான் MS-Dos, Windows 95, 98, XP, Vista, 7  போன்றவை. மென்பொருள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார் அந்த இளைஞர் பில்கேட்ஸ்.

இளைஞர்களே ஏதாவது ஒரு IT கம்பெனியில் வேலை கிடைக்காதா என்று தேடி திரிகிறீர்கள். உங்கள் மூளை ஒரு Super Computer. உட்கார்ந்து சிந்தனை செய்யுங்கள். எங்காவது ஒரு கம்பெனியின் ஓரத்தில் ஒட்டிக் கொள்ளலாமா என்று சோகத்தோடு அலையாதிருங்கள்.

உங்கள் திறமைகளை கண்டறியுங்கள். புதிய appகளை உருவாக்கி மக்கள் தேவைகளை எப்படி சந்திக்கலாம் என்பதை குறித்து யோசியுங்கள். எந்த ஒரு படைப்பும் உருவாவதற்கு முதல் காரணம் “இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை தான்”. இந்த சிந்தனை தான் புதுமைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அடுத்தவர் போட்ட ரோட்டிலேயே சென்றுவர பழகிய நீங்கள் எப்பொழுது தனி ரோடு போட போகிறீர்கள். நீங்கள் போட்ட ரோட்டில் மற்றவர்கள் நடப்பதை பார்த்து மகிழ பழகுங்கள்.

திருமறையில் ஒரு super computer மனிதன் இருந்தான். நாட்டில் 7 ஆண்டுகள் செழிப்பு, 7 ஆண்டுகள் வறுமை வரப்போகிறது என்பதை அறிந்ததும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பார்வோன் திகைக்கிறான். அப்பொழுது அந்த இளைஞன் தன்னுடைய softwareயை அறிமுகப்படுத்துகிறான். அதை பார்த்து அசந்து போய் விடுகிறான் பார்வோன். இந்த software இல்லாமல் இனி காலத்தைத் தள்ள முடியாது என்பதை உணர்கிறான். எனவே அந்த super computer மனிதனைத் தன் அருகில் வைத்து ஆட்சியை வளமாக்கி கொண்டான். அந்த மனிதன் யோசேப்பு என்ற இளைஞன். ஆக்கபூர்வமான செயலுக்கு எப்படி திட்டமிட வேண்டும் என்பதே உங்கள் உள்ளத்தின் சிந்தனை ஆகட்டும். அப்பொழுது இறைவனின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்