அரட்டல் உருட்டல்


அது ஒரு கிராமம். திருமணம் என்றாலே ஊர் முழுவதும் சாப்பாடு போட்டு ஒரே அமர்க்களம் தான். காலையிலே மணமகன் ஊருக்குள்ள வந்த போது ஐயோ நம்ம ஊரு வெள்ள காக்காவை, வெளியூரு அண்ட காக்கால்ல கூட்டிகிட்டு போக வந்திருக்குது என்று பேச ஆரம்பித்தனர்.

அரசல் புரசலாக மணப்பொண்ணு காதில வந்து போட்டுட்டாங்க. மணப்பெண்ணின் கனவுக் கோட்டை கேட்ட நேரத்திலேயே mass sliding ஆரம்பித்தது.  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். முன்ன பின்ன மணமகனை மணமகள் பார்த்தது கிடையாது. எல்லாரும் சொல்வதைக் கேட்டதும் அவளால் பொறுக்க முடியவில்லை.

நல்ல சொத்து, பத்து இருக்குது. சும்மா அடுத்தவங்க பேசுகிறதைக் கேட்டுக்கிட்டு அழாதே. அப்பா காதுல விழுந்ததுன்னா அவ்வளவு தான் என்று சொல்லி ஆலயத்திற்கு dress பண்ணி அனுப்பிவைத்தாள் தாய்.

ஏதெனில் ஆதிமணம் பாட மெல்ல மெல்ல தயங்கி மணமகனை பார்த்துக்கிட்டு நடந்தாள். நனைஞ்ச பனை மரமாய் நெடுநெடுவென்று சந்தன கலர் சட்டையும், வேஷ்டியுமாய் வைச்ச கண் மாறாம பொண்ணை பார்த்துக் கிட்டு நின்னாரு மாப்பிள்ளை.

வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் என்று வாக்கு வாங்க - வாக்கு வாங்க கண்ணீருடன் தலையை  ஆட்டிக்கிட்டே நின்னிச்சுது அந்த மணபெண்.

பொன்னு கையைப் பிடிச்சி கொடுத்துக்கிட்டு வெளியே போய்விட்டார் அப்பா. ஆயர் திருமாங்கல்யத்தை அணியுமாறு மணமகனிடம் கொடுத்தார். மணமகன் மணமகளுக்கு அணிய முற்பட்ட போது தலையைக் கொடுக்க மாட்டேன் என்று உதறினாள். ஆயருக்கு அதிர்ச்சியாய் போய்ட்டு.

"இந்த மங்களம் செழிக்கவே கிருபை கூரும்" என்று பாடி பாடி பாட்டு தான் முடிய போயிச்சுதே தவிர திருமாங்கல்யம் மட்டும் அணிவிக்க முடியாமல் தவித்துப் போனார் மணமகன்.

செய்தி வெளியே நின்றுக் கொண்டிருந்த தகப்பனாருக்குப் போனது. அவரு மீசையை முறுக்கிகிட்டு "அவ தாலியை கழுத்தில கட்டிக்காம வெளியே வந்தா அவ தலை இந்த கோயில் வாசல்ல தான் கிடக்கும் சொல்லிடுங்க" அப்படி வெடிச்சது கோயில் முழுக்க கேட்ருச்சு. இது கேட்டு அதிர்ந்த மணபெண் கோயில் ஆடு மாதிரி தலையை அசைச்சு கொடுத்து தாலியை வாங்கிகிட்டு. சிக்சர் அடிச்சமாதிரி மணமகன் சந்தோஷத்தோடு மலையாக நின்னாரு.       

இப்படி பல அரட்டல் உருட்டல்கள் எல்லாம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. வலுகட்டாயமாக திருமணம் ஒரு புறம், நயவஞ்சகமாக நடக்கும் திருமணம் ஒருபுறம், பழிவாங்க நடக்கும் திருமணம், சுயலாபத்திற்கு நடக்கும் திருமணம் ஒரு புறம், கடமைக்காக நடக்கும் திருமணம், பிரிந்து விடவேண்டும் என்பதற்காகவே நடக்கும் திருமணம் ஒரு புறம், சம்பிராயத்துக்காக நடக்கும் திருமணம் ஒருபுறம் என்று பல விதங்களில் திருமணங்கள் நடக்கிறது.

திருமணங்கள் பல விதங்களில் நடக்கிறது. ஆயினும் தற்சமயங்களில் யாரையாவது திருப்திபடுத்துவதற்காக ஒருவரை திருமணம் செய்து விட்டு, அடுத்த நாளே காரணம் எதுவும் இல்லாமல் அவரை கழற்றிவிட கங்கனம் கட்டித் திரியது மிகவும் கொடுமையான ஓன்று. நம் சுய நலத்திற்காக பிறருடைய வாழ்வை பாழ்படுத்துவது எந்த விதத்தில் தான் நியாயம். உங்கள் பெற்றோரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மற்றொரு நபர் வாழ்வை பாழ்படுத்துவது தவறு.

ஏற்ற துணையை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் ஏற்ற துணை என்று நீங்கள் விரும்புவதைத்தான் கர்த்தர் விரும்புகிறாரா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அதே வேளையில் கர்த்தருடைய சமுகத்தில் செய்யப்படும் திருமணம் என்பது வேடிக்கையாக எண்ணக் கூடாது. கர்த்தருக்கு நீங்கள் கணக்கு கொடுக்க வேண்டும்.   தேவனுடைய சமுகத்தில் உங்கள் விளையாட்டுகளை நடத்துவதற்கு துணிவுக் கொள்ளாதிருங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்