Leading இல்லீங்க


Bankல் பணியாற்றிய ஜான்சனுக்கு பல வரன்கள் வந்தது. இருப்பினும் அவன் மனதிற்குள் நம்மைப்போல அரசு உத்தியோகத்தில் இருக்கிற பெண் தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தான். பெற்றோரும் அவ்வாறே இருந்தனர்.

மாப்பிள்ளை bankல் பணியாற்றியதால் அதிக demand இருந்தது. சில வரன்கள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று வந்தால், ஜெபித்து சொல்லுகிறோம் என்பார்கள். சில நாள் கழித்து ஜெபித்தோம், ஒரு leadingம் இல்லீங்க என்று பதில் சொல்லி கழித்து விடுவார்கள்.

இறுதியாக அரசு பணியாற்றுகிற ஒரு பெண் வந்து சிக்கினாள். ஆனால் மிகவும் குறைந்த சம்பளம் தான். இருப்பினும் இருக்கிறதை வைத்து சமாளித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

ஜோராக நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து ஏறக்குறைய 50 பேர் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். திருமண நாள் குறிக்கப்பட்டது.

திடீரென்று ஒரு phone call வந்தது. தரகர் தான் பேசினார். பொண்ணு governmentல மிகவும் உயர்ந்த post. சம்பளம் மணமகனை காட்டிலும் அதிகம், dowryயும் அதிகம் தருவதற்கு ஆயத்தம், அதோடு 10 லட்சத்திற்கு கார் ஒன்றும் தருவதாக கூறினார்.

உடனே ஜெபிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்த வீட்டிலிருந்து திருமண invitation அடிப்பது சம்பந்தமாக சம்பந்தி வீட்டிற்கு வருவதாக phone வந்தது. உடனே மணமகன் அம்மா திரும்ப call பண்ணி “நாங்க நம்ம திருமணத்தை பற்றி தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். ஆனா…. வந்து சரியான leading எங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது. அதனால யோசித்து நாம invitation அடிப்போம்” என்று phoneயை வைத்து விட்டார்கள்.

திருமறையில் ஈசாக்கு திருமணம் கடவுளுடைய செயலால் நடைபெற்றது. ஆபிரகாம் கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பெண்ணை தேடுகிறான். அதற்காக அவனுடைய வேலைக்காரனும் ஜெபித்து முடிவெடுக்க விரும்புகிறான். கடவுளுடைய வழிநடத்துதலை புரிந்து கொள்வதற்காக விரும்புகிறான். “நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.” (ஆதியாகமம் 24 :14) இது குறிப்பாக அறிந்துகொள்வதற்காக எடுத்த முயற்சி. ஆனால் ஈசாக்கின் மகன் யாக்கோபோ, ஏசாவோ இவ்வாறு திருமணம் செய்யவில்லை. அதன்பின்பு இந்த முறையில் தான் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க வேண்டும் என்றும் திருமறை கட்டளையிடவில்லை.

ஆனால் நாம் ஜெபிக்க வேண்டியது கடமை. நம்முடைய குடும்பத்திற்கு ஏற்றது தானா என்று அலசிப் பார்ப்பது தவறல்ல. தீர விசாரிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரிடமாக சென்று குறி கேட்பது போன்று கேட்டுக்கொண்டு அலையக்கூடாது. இவ்வாறு பலர் அலைவதினால் ஊழியர்கள் சிலருடைய வாழ்க்கையையே  பாழ்படுத்தி விடுகின்றனர்.

சரியான leading இல்லை என்று வருகிற வரன்களை விரட்டி விட்டு, நம்முடைய சொந்தத்தில் ஒரு பிள்ளை இருக்கிறாள், நமது ஆலயத்திற்கு ஒரு பிள்ளை வருகிறாள் என்று hidden agenda வை வெளியிட்டு விடுகின்றனர்.

ஆண்டவர் பெயரால் நடக்கும் துரோகச் செயல். ஆண்டவர் பேசாதிருந்தும் மனதில் உள்ளதை தீர்க்கதரிசனமாக ஊழியர்கள் சொல்வதை குறித்து எசேக்கியல் தீர்க்கன்  மூலமாக கண்டிக்கிறார். இறைமக்களே விழிப்பாயிருங்கள், பிறரை கடவுள் பெயரால் ஏமாற்றாதிருங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்