மாண்ட்டேகன் சொன்னான்!
LKG படிக்கும் இரட்டை பெண் குழந்தைகளோடு என்னை சந்தித்தாள் ஒரு இளம்பெண். ஐயா எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது அதை யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியவில்லை. நீங்களாவது என் பிரச்சனைகளுக்காக ஜெபிக்க மாட்டீர்களா என்றார்.
நானும் சரி என்று தலையை ஆட்டினேன். என்ன பிரச்சனை என்றேன்? அந்த பெண் கூறினாள். “சில வருடங்களாகவே எனக்கு இரவு தூக்கமே வரவில்லை, என்ன செய்யப்போகிறேனோ என்று யோசிக்கும் போதே பயமாக இருக்கிறது. இரவு வேளைகளில் என் பிள்ளைகள் நன்றாக தூங்குவார்கள். ஆனால் நான் இடை இடையே விழித்து உட்கார்ந்து வேதனைப்பட்டு கொண்டிருக்கிறேன் என்றாள்.
எதைப் பற்றி நினைக்கும்போது வேதனைப்படுபடுகிறீர்கள் என்ற போது, அவள் தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளையும் காட்டி இவர்களை நினைக்கும் போதுதான் என்று காட்டினார்கள். இவர்கள் இருவரும் எனக்கு பெண் பிள்ளைகள். இவர்கள் இப்பொழுது LKG படிக்கிறார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக பெரிய பிள்ளைகள் ஆகிவிடுவார்கள். நான் எப்படி கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முடியும், நல்ல திருமணத்தை எப்படி நடத்தி வைக்க போகிறேன், எனக்கோ என் கணவருக்கோ சரியான வேலை இல்லை என்று கூறி வேதனைப்பட்டார்.
பிள்ளைகள் LKG படிக்கும் போதே பிள்ளைகள் எதிர்காலத்தைக் குறித்து பலர் அஞ்சுகின்றனர். இதைப் போன்ற பயங்கள் பலருக்கு இருக்கிறது. ஆகவே தான் 1st standard படிக்கும்போதே பிள்ளைகளை அடித்து துவைக்கின்றார்கள். நீ இப்படி படித்தால் மாடு தான் மேய்க்க முடியும், தெருவை தான் பெருக்கிகிட்டு இருக்க முடியும் என்று பலர் பிள்ளைகளை எரிஞ்சுக் கொட்டுகிறார்கள். காரணம் பயம். அவர்கள் கற்பனையாக பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து யோசித்து யோசித்து மனநிலையில் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
சிலருக்கு மனைவி மற்றவர்களுடன் பேசினாலே போதும், உடனே பயம் வந்துவிடும். ஐயோ நமது மனைவியை மற்றவர்கள் கவர்ந்து விடுவார்களோ அல்லது நமது மனைவி நம்மை விட்டுவிட்டு போய் விடுவாளோ என்ற பயம். சில அழகான பெண்களிடம் கணவன் பேசினால் பயம், நமது கணவன் நம்மை விட்டு விடுவானோ என்று! இவ்வாறு நடக்காத ஒரு காரியத்தை நடந்துவிடுமோ என்று அஞ்சியே பலர் மன நோயாளிகளாக மாறி விடுகின்றனர்.
ம.லெனின் என்பவர் மன இருக்கத்திற்கு முக்கியமான காரணமாக கூறுவது “நடக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புவதும், நடக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதும் தான் உங்கள் மனதை அதிகமாக அலைக்கழிக்கிறது. ஆனால் இந்த இரண்டு கவலைகளுமே தேவையற்றது.”
திருமறையும் நமக்கு கற்றுத் தருவது “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.” (சங்கீதம் 23: 1,2) இறைவன் நமக்கு மேய்ப்பர் என்றால், நாம் ஆடுகள். ஆடுகள் என்றாவது கவலைப்படுமா? இன்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மேய்ப்பர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம். கர்த்தர்மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். உங்களை தடுமாறுவதற்கு ஒருபோதும் விடமாட்டார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment