மதி, மதிப்புக் கூடும்
ஒருநாள் ஒரு இளம் தம்பதியினர் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார்கள். தங்கள் கஷ்டங்கள் போவதற்காக என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்கள். ஒரு சிந்தனை உதித்தது.
தன் வீட்டில் இருந்த மாட்டை, சந்தையில் விற்று அதில் வரும் பணத்தை கொண்டு ஒரு சிறிய கடை ஒன்றை வைக்க முடிவெடுத்தனர்.
காலை வேளையில் மாட்டை பிடித்துக் கொண்டு, சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்லும்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். மெதுவாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தவனுக்கு மனதில் பட்டது “இவனைப் பார்த்தால் சரியான ஏமாளி போல் அல்லவா தெரிகிறது” என்று யோசித்தவன்
நைசாக ஒரு planயை கொடுத்தான். ஏம்பா இந்த மாட்டை கஷ்டப்பட்டு சந்தைக்கு கொண்டு போறா, பேசாம எங்க வீட்டில உள்ள ஆட்டுக்குட்டியை தருகிறேன். அதை கொண்டு போ, அந்த மாட்டை எனக்குக் கொடுத்து விடு என்றான்.
யோசித்துப் பார்த்தான். ஆமாம் அதுவும் நல்ல ஐடியாவாக தான் தெரிகிறது. ஆடு என்றால் easyயாக தான் இருக்கும் என்று அதை வாங்கிக்கொண்டு, மாட்டை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு சந்தையை நோக்கி நடையைக் கட்டினான்.
இன்னும் கொஞ்ச தூரத்தில் மற்றொருவன் வந்தான். இவனிடம் கதை பேசினான். அவனும் யோசித்தான் இவன் ஒரு ஏமாளி என்று. ஒரு திட்டத்தை முன்வைத்தான்.
எதுக்கு போய் இப்படி கஷ்டப்பட்டு ஆட்டைக் கொண்டு போய் .கொண்டிருக்கிறாய். பேசாமல் என் வீட்டில் ஒரு கோழி இருக்கிறது. அதை நீ கையில் வைத்துக்கொண்டு easyயாக மார்க்கெட்டுக்குப் போய் விற்றுவிடலாம். உன் ஆட்டை எனக்கு கொடுத்து விடு என்றான்.
அதுவும் சரியாகத் தான் தோணுது என்று, கோழியை வாங்கிக் கொண்டு, ஆட்டை கொடுத்துவிட்டு மார்க்கெட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தான்.
அந்த வழியாக செல்லும் போது ஒரு டீக்கடை வந்தது. அது பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்தால் நல்லா இருக்கும் என்று டீக்கடை பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.
டீக்கடைக்காரர் வந்தவருடைய சமாச்சாரத்தை கேட்டு அவன் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டான்.
அண்ணேன் டீ குடிக்கிறீங்களா? காசு ஒன்றும் வேண்டாம். உங்ககிட்ட இருக்கிற கோழியை கொடுத்தால் போதும் என்று மெதுவாக கண்ணியை போட்டான்.
கணக்கு தப்பவில்லை. சரி என்று தலையை ஆட்ட டீயை குடித்து விட்டு, கோழியை கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு வீட்டை பார்க்க நடையைக்கட்டினான்.
இத்தனை நிகழ்ச்சிகளையும் ஒருவன் பார்த்துக் கொண்டே இருந்தான். யோவ், மடையா உனக்கு புத்தி இல்லையா, உன் கதையை கேட்டா உன் மனைவி உன்னை வீட்டுக்குள்ளேயே ஏற்ற மாட்டாளே என்று பொரிந்து தள்ளினான்.
அவன் அதற்கெல்லாம் கவலைப்படாம, என் மனைவி ரொம்ப நல்லவள். ஒரு நாளும் என்னை தரைமட்டமாக பேசியது கிடையாது என்றான்.
இரண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்தது. கடைசியாக அவனோடு வந்தவன் கூறினான், “உன் மனைவி உன்னை அவமானமாக பேசாவிட்டால் என் கடையை உனக்கு தருகிறேன்” என்று challenge பண்ணினான்.
சரி என்று வீடு வந்தவுடன், அவனோடு வந்தவன் அவன் மனைவியிடம் அத்தனையும் கோபம் வரும்படியாக விளக்கமாக கூறினான்.
அவன் மனைவி அவள் கணவனிடம் “என்னங்க டீ நல்லா இருந்துச்சா” என்றாள்.
அவ்வளவுதான் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. challengeஇல் தோற்றான். கடை இவனுக்கு சொந்தமானது
குணசாலியான பெண்ணை குறித்து நீதிமொழிகள் புத்தகம் இவ்வாறு கூறுகிறது. “அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.” (நீதிமொழிகள் 31:23) ஒரு ஆணுடைய மதிப்பு என்பது அவனுடைய மனைவியின் கையில்தான் இருக்கிறது. ஒரு கணவனை அவன் மனைவியே மதிப்பாக நடத்தவில்லை என்றால் அவன் வெளியில் மதிப்பாக வாழ்வது கடினம்.
அதேபோன்று “திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு. அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே என்று அவள் கணவன் சொல்லுகிறான்.” (நீதிமொழிகள் 31:29) எனவே கணவன்,மனைவி இருவருமே மற்றவர்களை மதிப்பாக நடத்தி பழக வேண்டும். நீங்களே ஒருவருக்கொருவர் மதிக்காத பட்சத்தில் ஊரார் உங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் நம்மை காட்டிலும் நம் துணையை மேன்மையானவர்களாக கருத வேண்டும். அப்பொழுது குடும்பத்திலும், சமுதாயத்திலும் மேன்மையை காண இயலும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment