கசக்கிப் பிழியலாமா?
என்ன படிக்கிறார்கள் என்றேன். அதற்கு ஒரு பிள்ளை 1st std என்றும் அடுத்தது 3rd std என்றும் கூறினார்கள். ஏன் பிள்ளைகளை தனி அறையில் வைத்திருக்கிறீர்கள். Hallல் உட்கார்ந்து படிக்கச் சொல்ல வேண்டியது தானே என்றேன்.
ஐயோ அப்படி செய்தால் இரண்டு பேரும் சண்டைப் போடுவார்கள், படிக்க மாட்டார்கள். எங்களிடம் ஏதாவது தொன தொன வென்று பேசிக்கொண்டிருப்பார்கள். அதனால் தான் அவர்களுக்குத் தேவையான ஸ்நாக்ஸ் எல்லாம் அவர்கள் அறையிலேயே வைத்து விட்டு Close பண்ணிக் கொள்ளச் சொன்னோம் என்றார்கள்.
நான் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இளையக் குழந்தை அறைக்குள்ளிருந்து கத்தியது "அம்மா கண் வலிக்குது, கண் வலிக்குது off செய்யட்டுமா?”
உடனே அம்மா No, class முடியும் வரையிலும் off பண்ணக் கூடாது என்று பதிலுக்கு கத்திச் சொன்னார்கள். காரணம் சென்னையில் அதிக பணம் கட்டி, பெயர் வாங்கிய உயர்ந்த பள்ளியில் சேர்த்துள்ளார்கள். பிள்ளைகள் Online Class ஐ attend பண்ணவில்லையென்றால் உடனே Phoneவந்து விடும்.
பிள்ளைகளின் கண்களைப் பற்றிய அக்கறை பள்ளிகளுக்கும் இல்லை பெற்றோருக்கும் இல்லை. காரணம் "கல்வி என்பது தனியார் பள்ளியில் படிக்க வேண்டும். அப்பொழுது தான் பொறுப்புடன் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பார்கள்" என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெற்றோருக்குள்ளும் வந்து குடியேறி விட்டது. எனவே தான் கூலி வேலைக்குச் செல்லுகிறவர்களும் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக், CBSE பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர்.
கல்வி என்பது இன்றைக்கு இந்தியாவில் மிகப்பெரிய வியாபாரம். இன்று ஒரு பள்ளி, கல்லூரி வைத்திருப்பவர்கள் சில ஆண்டுகளிலே காளான் போன்று ஆங்காங்கே பள்ளிகளை, கல்லூரிகளைக் கட்டிக் கொண்டே போகிறார்கள். பெரிய வியாபாரிகள் எல்லாம் கல்வி கூடங்களிலே பணத்தை முதலீடு செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு கல்வி கண் திறக்க வேண்டும் என்று அல்ல, பிள்ளைகள் கண்களைக் கெடுத்தாவது தங்கள் பையை பணத்தால் நிரப்ப வேண்டும் என்ற ஆவலில் தான்.
இன்று NEET என்ற பெயரிலேயே, 6ம் வகுப்பு படிக்கும் போதே பிள்ளைகளை வற்புறுத்தலின் பெயரில் சேர்த்து பிழிந்து எடுத்துவிடுகின்றனர். இதில் பெரிய வியாபாரமே நடக்கிறது. இந்த வியாபார உக்தியால் 95% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் எல்லாம் தனியார் வியாபார மையங்களை நோக்கியே படையெடுக்கிறார்கள்.
பிள்ளைகளை எந்த Tution Centerல் சேர்ப்பது என்பது அடுத்த முக்கியமான பிரச்சனை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. லட்ச கணக்கில் பள்ளிக் கூடத்தில் Lock down Periodல் வாரி வழங்கி விட்டு, பெற்றோர்கள் தெருத் தெருவாக பிள்ளைகளை Tuitionக்கு அனுப்பி வைக்க அலைகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகளில் சுமார் 25 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் 30% மாணவர்கள் Tuitionலில் தான் போய் கற்றுக் கொள்ளுகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதுவும் Online லேயே Tution, zoom-google meet மூலமாக செய்வது மிகப்பெரிய வரபிரசாதம் என்று கூறுவதா, காலத்தின் கட்டாயம் என்பதா? அல்லது பிள்ளைகளுக்கு ஏற்பட்ட துன்புறுத்தலின் உச்சக்கட்டம் என்று கூறலாமா என்று தெரியவில்லை.
சீனாவில் 6 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு internet மூலம் கல்வி கற்கும் முறை முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு அவசியமானது என்பதை இந்திய அரசும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
திருமறையில் மோசே சிறுகுழந்தையாக இருக்கும் போது அவன் தாய் அவனுக்கு பாலூட்டி வளர்க்கும் போதே நல்ல சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்கிறாள். அன்னாளும் சாமுவேலை குழந்தையாக வளர்க்கும் போதே இறை சிந்தனைகளை ஊட்டி வளர்த்தாள். எனவே அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறிய போது உண்மையுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, நீதியுள்ளவர்களாக தலையை உயர்த்தி சமூகத்தில் நடந்தனர். சமூகத்தின் மேன் மக்களாக, மதிக்கத்தக்க தலைவர்களாக சிறந்து விளங்கினர். இன்றைய சிறு குழந்தைகளும் பெற்றோரின் அரவணைப்பில், மகிழ்ச்சியுடன் வாழ உதவிடுங்கள். பிள்ளைகள் தானாக படித்து முன்னுக்கு வந்து விடுவார்கள். கவலையை விடுங்கள். கர்த்தர் உங்கள் பிள்ளைகள் மீது அதிக அக்கரைக் கொண்டுள்ளார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment