மகாத்மாவானாலும் தலை உருளத்தான் செய்யும்
ஐயோ நம்ம வீடு தான் இப்படி எப்பொழுதும் சண்டைக்காடாக காணப்படுகிறதென்றால் மகாத்மாவின் வீட்டிலும் நடந்த காரியத்தை பார்க்கும் போது நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். சரி வீடு என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்ற மன நிலை நமக்குள்ளும் வந்து விடும்.
மகாத்மா காந்திக்கும், கஸ்தூரிபாவுக்கும் இடையேயான இல்லற உறவு என்பது ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. தம்பதிகளாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். காந்தி படித்தவராக காணப்பட்டாலும், அவரது மனைவி பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கும் ஒதுங்கவில்லை. சிறு வயதிலேயே காந்தி திருமணம் செய்துக் கொண்டார். இளம் வயதிலே திருமண வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்கள்.
குறிப்பாக தமிழரும், தாழ்த்தப்பட்டவருமான லாரன்ஸ் என்பவர் காந்தியின் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அப்பொழுது அவரது சிறுநீர் பாத்திரத்தை எடுக்குமாறு காந்தியடிகள் கூற அதனை அவரது மனைவி மறுத்துள்ளார். ட்க்கென்று கோபம் காந்திக்குள் மூண்டது. உடனே அவரது மனைவியின் கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் வீட்டிற்கு வெளியே விட்டு விட்டார். அப்புறம் சமரசமாகிவிட்டனர். இருப்பினும் காந்தியடிகள் இவ்வாறு குடும்பத்திற்குள்ளே சண்டையிட்டாலும், அந்த சண்டையிலிருந்தும் பாடம் படித்ததாக தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் போது நினைவு கூறுகிறார்.
அப்படி என்ன ஐயா கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறீர்களா? அவருடைய போராட்டத்திற்கான சூத்திரத்தைத்தான் கற்றுக்கொண்டாராம்! "என் ஆதிக்கத்தை எதிர்த்து என் மனைவி செயல்படும் வழிகளிலிருந்து தான் சத்தியாக்கிரகத்தைக் கற்றுக் கொண்டேன்” என்று காந்தி கூறியதாக 'என்றும் காந்தி' என்ற புத்தகத்தில் "ஆசை" அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சண்டை இல்லாத, வாக்குவாதம் இல்லாத, கோபம் இல்லாத குடும்ப வாழ்வை யாரும் எதிர்பார்க்க முடியாது. சண்டைகள் என்பது தவிர்க்க முடியாதவைகள் தான். எல்லாருக்கும் சுயமான விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் செய்கிறது தான் சரி என்று நிலை நாட்ட ஒவ்வொருவரும் முற்படுவதும் இயல்பு தான்.
யோபுவும், அவரது மனைவியும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள். யோபுவைக் குறித்து "உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்" (யோபு 1:1) என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவனுடைய மனைவி "தேவனை தூஷித்து ஜீவனை விடும்" என்று செத்துப் போக தூண்டிய போது, யோபுவுக்கு சற்று கோபம் வருகிறது. நீ normal இல்ல just mental மாதிரி பேசுகிறாய் என்று வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்துகிறார் (யோபு 2:9,10). இவ்வாறு குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தாலும் யோபுவும், அவன் மனைவியும் இணைந்தே தான் வாழ்கிறார்கள். துன்பத்திலும், இன்பத்திலும், சண்டையிலும், சமாதானமுள்ள வாழ்விலும் இணைந்தே செயல்பட்டதை யோபுவின் நூல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எனவே தலை உருளும் போது கர்த்தரே பார்த்துக் கொள்ளும் என்று அவர் மேல் பாரத்தைப் போட்டு விட்டு அமைதியாக இருப்போம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment