இந்த வீண் செலவு எதற்கு?


சென்னையில் IT Fieldல் பணியாற்றும் இளைஞனுடைய Birthday partyக்கு அழைப்பு வந்திருந்தது. அதில் கலந்துக் கொள்ள சென்றிருந்தேன். நானும் ஏதோ சிறிய அளவில் நடைபெறும் என்று நினைத்திருந்தேன்.

அழைத்து செல்லப்பட்ட இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்துப் போனேன். காரணம் arrange பண்ணப்பட்ட Hotel அது Five Star Hotel. மேல் தளத்தில் மிகவும் கோலாகலமாக இடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளைஞன் போட்டிருந்த உயர்தர கோட், ஷூவைப் பார்த்த உடன் மிகவும் பெரிய பணக்காரன் என்பதைப் புரிந்துக்கொண்டேன். விதவிதமான உணவு பரிமாறப்பட்டது. அவனோடு பணியாற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் பட்டாளம் மிகவும் அமர்களம் செய்தது. Party  கொண்டாடினால் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று அவனோடு பணிபுரிந்த இளம் பெண்கள் புகழாரம் சூட்டினார்கள்.

Party முடிந்ததும் விலை உயர்ந்த காரில் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அந்த இளைஞன். அப்பொழுது என்னோடு அவனுடைய நண்பனும் பயணித்தான்.

மெதுவாக அவன் நண்பனிடம் கேட்டேன். Party மிகவும் பிரமாதமாக இருந்ததே. பெரிய பணக்காரானா? அப்பா என்ன business பண்ணுறாங்க? தம்பி எவ்வளவு சம்பளம் வாங்குகிறான்? என்றுக் கேட்டேன்.

நண்பன் சிரித்துக் கொண்டே சொன்னான் Sir, இவன் ஒரு வெட்டி பந்தா! இவனுடைய அப்பா கூரியர் சர்விஸில் வேலைச் செய்கிறார். அம்மா ஒரு bankல ஸ்வீப்பராக பணியாற்றுறாங்க. இவனுக்கெல்லாம் இது அவசியமா Sir! எல்லாருக்கும் முன்னால இப்படி பந்தா காட்டுகிறது தான் இவனுக்கு வழக்கம். இவன் நிலமை எனக்கு மட்டும் தான் Sir தெரியும், என்று சிரித்தான்.

அதிர்ந்துப் போனேன். எனக்கு இது புதுமையாகத் தெரிந்தாலும் ஏன் இப்படி இளைஞர்கள் நடந்துக் கொள்கிறார்கள் என்று பல நாள்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு விடையை பரிணாம உயிரியல் நிபுணர் அமேட்ஸ் ஸஹாவி என்பவர் Handicap Principle மூலம் இதனை விளக்குகிறார். அது எப்படி என்றால் சில காட்டு யானைக்கு மிக பெரிய தந்தம் வளர்திருக்கும். அதைக் கொண்டு நடப்பது, ஓடுவதும் மிகவும் கஷ்டமானது. அதை பாதுகாப்பது மிகவும் கடினம். ஆனாலும் அது ஏன் அதை முறிந்துவிடாமல் பாதுகாக்கின்றன என்றால் தான் ஒரு பலமான, திறமையான ஆண் யானை என்று காட்டுவதற்காகவே என்கிறார்.

இதைப் போன்று தான் மனிதனும் இருக்கிறான் என்று Dr.ஷாலினி குறிப்பிடுகிறார். விதவிதமான dress, bike, car, ஆடம்பரமான செலவு, மக்களை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பந்தா - இவையெல்லாமே Handicap Principle தான். மனிதன் தன்னிடம் ஒன்றும் இல்லாத போதும், இருப்பது போல் செலவு செய்து தான் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறான்.  

பெண்கள் இப்படிப்பட்ட ஆண்களைப்பார்க்கும் போது எதற்கு இந்த வெட்டி பந்தா என்று சிரிப்பார்கள். ஆனால் அவர்கள் உடலில் சுரக்கிற டெஸ்டோஸ்டீரான் தான் காரணமாக அமைகிறது. 

திருமறையில் சிம்சோன் என்ற இளைஞனைப் பார்க்கும் போது அவன் பராக்கிரமசாலியாக இருக்கிறான். அவன் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால் திருமணவாழ்வு அவனுக்கு சரியாக அமையவே இல்லை. இருப்பினும் தன்னுடைய பெலத்தை அடிக்கடிக் காட்டிக் கொள்ளுகிறான். குறிப்பாக தெலீலாளின் அன்புக்காக ஏங்கிய அவன் அடிக்கடி தன்னுடைய திறமையை அநாவசியமாக காட்டிக் காட்டி அவளை தன் பக்கமாக ஈர்த்துக் கொள்கிறான்.

இன்றும் பல இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை வீணான காரியங்களில் காட்டி பெண்களை ஈர்த்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் காலம் மாறிவிட்டது. பழைய காலங்கள் Hard Skill காலம். இப்பொழுதோ Soft Skill காலம். இந்த காலத்தில் வீண் பந்தா, முரட்டு செயல்கள், ஆதிக்க சுபாவங்கள் போன்றவற்றையெல்லாம் விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்குள் வாழ பழகிக்கொள்ளுங்கள். அப்பொழுது தான் வாழ்வு இனிமையாக அமையமுடியும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும்

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்