மாற்று பாதையில் பயணி



நீட் தேர்வு எழுதும் முன்னும், எழுதிய பின்னும் வருகிற பயத்தினால் மாணவிகள் தற்கொலை புரிந்து கொண்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரியது. டாக்டர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் தான் சவுந்தர்யா, கனிமொழி, அனிதா போன்றோர் இரவு பகலாக படித்துள்ளனர். தேர்வு நேரத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதும் படிப்பு படிப்பு என்றே இவர்கள் வாழ்ந்தார்கள். தங்கள் லட்சியத்தை எப்பொழுதும் கனவு கண்டு வந்துள்ளனர். நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்தும் சரியாக எழுத முடியாத போது கனவுக் கோட்டை தகர்ந்து விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை அசைத்து விட்டது. இதனால் யாரிடமும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளனர். சிலவேளை தனிமையாக இருந்துள்ளனர். பெற்றோர்கள் உடன் எந்த இடத்திற்கும் செல்லாமல் தவிர்த்துள்ளனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் அதை யோசித்து யோசித்து வேதனைப்பட்டுள்ளனர். குறிப்பாக இப்படிப்பட்ட சூழலில் பிள்ளைகள் தனிமையாக இருப்பதை தவிர்க்க பெற்றோர்கள் முற்படவேண்டும்.

மாற்று வழிகளில் பிள்ளைகள் மருத்துவம் சம்பந்தமான பிற courseளை தேர்ந்தெடுக்க உதவிடலாம். MBBS மட்டும்தான் மருத்துவ படிப்பு அல்ல. மருத்துவம் சார்ந்த அநேக படிப்புகள் இருப்பதால் அதனை துவக்க காலத்திலேயே முன் வைப்பது நல்லது. உனக்கு MBBS படிப்பதற்கு போதிய மதிப்பெண் கிடைக்காவிட்டால் BDS, சித்தா, ஹோமியோபதி, Radiotherapy என்று பலவிதமான படிப்புகள் இருக்கிறது. MBBS இல்லை என்றால் வாழ்க்கையை போய்விட்டது என்று சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

கனவு காண்பது முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியபடி அவர்கள் துவக்க வாழ்க்கை அமையவில்லை. அவர்கள் மிகவும் விரும்பியது கிடைக்கவில்லை என்றவுடன் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட போது அவரை ஒரு பெரியவர் ஆற்றுப்படுத்தினார். அதன் பின்பு அவருடைய விருப்பத்தை சற்று மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டார். அதன் வழியாகவே விண்கலத்தை அனுப்பும் திட்டவரைவு பணியில் பங்கு பெற்றார். பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன்பின் யாரும் எதிர்பாராமல் ஒரு விஞ்ஞானி மற்றொரு மாற்றுப் பாதைக்கு சென்று ஜனாதிபதியாக மாறினார். உலகில் பெரிய அளவில் ஜொலித்தவர்கள் தங்கள் கனவுகள் நிறைவேறாத போது கனவுகளை மாற்றிக் கொண்டார்கள்.

அறிஞர் அண்ணா தொடக்கத்தில் ‘திராவிட நாடு’ என்ற சிந்தனை உடையவராக முழங்கினார். ஆனால் இந்திய அரசு பிரிவினைவாத சட்டத்தின் மூலம் அண்ணாவின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை முடக்கியது. இப்படி முடக்கப்பட்டதினால் அண்ணா அரசியலை விட்டு ஓடிவிடவில்லை. மாறாக திராவிட நாடு என்று ஒன்று அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து அதன் சாராம்சங்களை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்காக உழைக்க ஆரம்பித்தார். அதன் விளைவு தமிழ்நாட்டின் முதல்வராக மாறி நல்ல திட்டங்களை முன்னெடுத்தார்.

கழுதையை தேடிச் சென்ற சவுலையும், ஆடு மேய்த்த தாவீதையும் இறைவன் மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்று அரசனாக மாற்றினார். எபிரேயர்கள் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள். ஆனால் யோசேப்பு என்ற எபிரேயனை எகிப்தியருக்கு எல்லாம் அதிபதியாக மாற்றி உயர்த்தினவர் ஆண்டவர் அல்லவா! உயர்வையும், மேன்மையையும் கொடுப்பது இறைவன் தான். ஒரு வழி அடைபடும் போது வாழ்வே கிடையாது என்ற சூழலுக்கு உங்களை கடவுள் கொண்டு செல்வதில்லை. மாற்றுப்பாதை உங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களை எந்த விதத்தில் உயர்த்த இறைவன் திட்டமிட்டுள்ளாரோ அதற்கு அர்ப்பணியுங்கள். நிச்சயமாகவே உயர்வீர்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி