இன்னும் காலி பண்ண வில்லையா
இப்பொழுது பேரப்பிள்ளைகளோ, மகனோ, மருமகளோ வந்து உட்கார்ந்து கதை விடுவதற்கு யாரும் வருவதில்லை. தனிமை வாட்டி வதைத்தது.
ஒருநாள் மகன் அருகில் வந்து உட்கார்ந்தான். அம்மா உங்கள் பேரப் பிள்ளைக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கப்போகிறது நியாபகம் இருக்குதா, அது விஷயமாக தான் உன்னிடம் பேச வந்தேன். தன் மகன் வீட்டுக் காரியங்களை பற்றி பேச வந்திருக்கிறான் என்ற உடன் ரெபெக்காளுக்கு மிகவும் சந்தோஷம்.
அம்மா வந்து... என்று மெதுவாக இழுத்து கதைக்கு வந்தான் ராபர்ட். அதான் பேரனுக்கு திருமணமானா எந்த அறையை கொடுக்கிறது என்று யோசித்தோம்.
ஜேம்ஸ்க்கு புதிதாக திருமணம் ஆவதால் தனி அறை கொடுக்கவேண்டும். நீங்க தனியாகத்தானே இருக்கிறீங்க அதனால நீங்க படுத்திருக்கிற அறையை அவனுக்கு நீங்க கொடுத்து விட்டு ஹாலில் படுத்துக்கிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் என்று இழுத்தான்.
ரெபெக்காளுக்கு தூக்கிவாரிபோட்டது. வயது 75 ஆகிவிட்டது, அடிக்கடி யூரின் போக வேண்டும் இரவு நேரம் தட்டி தடுமாறாமல் பழகிய இடம் என்பதால் போவதற்கு கஷ்டம் இல்லை. ஆனால் ஹாலில் படுத்தால் எப்படி செல்வது. sugar குறைந்தால் இந்த அலமாரியில் சீனி, மிட்டாய் என்று ஏதாவது வைத்திருப்பேன். உடனே சாப்பிட்டுக் கொள்வேன். அந்த அறைக்குப் போனால் இதுவெல்லாமே கஷ்டம் ஆகிவிடுமே யோசித்தார் ரெபெக்காள்.
ஒரு வாரம் கழிந்தது… அம்மா இன்று வீடு பெயிண்ட் பண்ணுவதற்கு ஆள் வாராங்க அதனால நீங்க அறையை காலி பண்ணி அந்த ஹாலுக்கு வந்திடுங்க. அப்போ தான் இந்த அறையை ஜேம்ஸ்க்கு சரி பண்ண முடியும் என்றான் ராபர்ட்.
ரெபெக்காள் நெருக்கடி நிலையை உணர்ந்தாள். ராபர்ட் இன்றைக்கு மட்டும் நான் இந்த அறையிலேயே தங்கி கொள்ளுகிறேன் பா. இன்றைக்கு எங்களுக்கு 50வது திருமண நாள். அதனால இன்றைக்கு மட்டும் விட்டுருப்பா. நாளைக்கு நான் காலி பண்ணுகிறேன் என்றாள்.
அம்மா, நீங்க சின்ன பிள்ளை போல பிடிவாதம் பிடிக்கிறாங்க என்று முனங்கிக்கொண்டு சரி என்றான்.
அடுத்த நாள்…. காலையிலே மீண்டும் காலி பண்ணுவியாம்மா வேலைக்கு ஆட்கள் வருவாங்க என்றான். அம்மாவோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் படுத்துகொண்டாங்க.
ராபர்ட்டுக்கு சற்று கோபம் ஏறியது. அம்மா இந்த அலமாரிய நீங்க காலிப் பண்ணுறீங்களா அல்லது நான் காலி பண்ணி தரட்டுமா என்று கோபத்தோடு திட்டியவாறு அம்மாவின் கட்டிலின் பக்கத்தில் வந்தான். அப்பொழுதும் அம்மா அதை காதில் வாங்காமல் படுத்துகொண்டார்கள்.
அம்மாவை மெதுவாகத் தட்டி பார்த்தான், முகத்தைப் பார்த்தான், அதிர்ச்சியானான். அம்மா இரவே காலி செய்துவிட்டார்கள் என்று!
வாழையடி வாழையாக தொடரும் குடும்ப வாழ்க்கையில் வயதாகும்போது புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் திருமறையில் யோசேப்பு நல்ல ஒரு முன்மாதிரியாக உள்ளார். ஆதியாகமம் 47:12 ல் “யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக மாறும்போது நம் பெற்றோரை எப்படி நாம் வைத்திருக்கிறோம் என்பது முக்கியம். மனிதநேயத்தோடு பெற்றோரை நடத்த பழகிக்கொள்ளவேண்டும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment