வரதட்சனை - ஆயிரம் பொற்காசு


பையன் நல்லவன், அரசு வேலை, கைநிறைய சம்பளம், நல்ல கலர், சொந்த வீடு, தோட்டம், வீட்டில் வேலை செய்ய வேலையாள், உங்கள் சொந்த ஊர் அருகில் தான் அவர்கள் ஊர். ஆனால் பண்டிகை, friends உடன் party வைக்கும் போது மட்டும் கொஞ்சம் ‘சில்’ அடித்து விடுவான். அவ்வளவுதான் பழகுகிறதற்கு நல்ல பையன், வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வருகிறவள் கொடுத்து வைத்தவள் தான். அவங்க status அளவுக்கு கூட எதுவும் எதிர்பார்க்கவில்லை, நல்ல பெண்ணாக இருந்தால் போதும், குடும்ப பெண்ணாக இருந்தால் போதும், எதுவும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.  பையனோடு நன்றாய் பேசி இருந்தாலே போதும் என்று வரன் வருகிறதா?.

கோடி கும்பிடு போட்டு வேண்டவே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிவிடுங்கள். இளம் வயதில் கொஞ்சம் குடிக்கிறவன் தான் நாளடைவில் மொடாக் குடிகாரனாக மாறிவிடுகிறான். எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் நாளடைவில் குடித்தே அனைத்தையும் அழித்து விட அவனால் முடியும். நீடித்த ஆயுளை எதிர்பார்க்க முடியாது. நாயைப்போல் வீட்டிற்குள்ளேயே வாந்தி எடுத்து நாற்றம் எடுக்க வைத்து விடுவான். அவன் குடிகாரனாக இருப்பதால் அதிக சதவீதம் அவனுக்கு பிறக்கும் கற்ப பிறப்பும் குடிகாரனாகவே விளங்குவான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

குடிகாரனை தெரியாமல் திருமணம் செய்துவிட்டால் அவர்களோடு வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற சூழல் ஏற்படும். ஆனால் திருமணத்திற்கு முன்பே குடிப்பான் என்று தெரிந்த பின் திருமணம் செய்ய நினைத்தால் உங்கள் பிள்ளைகளை பாழ் கிணற்றுக்குள்  தள்ளி விடுகிறீர்கள் என்பது தான் உண்மை. உங்கள் பண ஆசை உங்கள் கண்களை மறைக்கிறது அல்லது உங்கள் மோக ஆசை உங்கள் கண்களை இருள செய்து விட்டது என்பதுதான் உண்மை.

இதை கடினமாக எழுதுவதற்கு காரணம் என் கையில் இருக்கிற தினசரி இதழின் செய்தி. “குடித்துவிட்டு தாயை அடித்த தந்தையை வெட்டிக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது”. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மகன் 12 வருடமாக மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் தந்தை ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் சண்டையிட்டு தாக்கி வந்துள்ளார். இதை வாடிக்கையாக நடத்திய செயல் மகனின் உள்ளத்தை பாதித்துள்ளது. குறிப்பாக அன்று தன் தகப்பனார் தன் தாயை அடித்து உதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்டித்துள்ளார். ஆனால் அவர் குடிபோதையில் மனநலம் பாதித்த மகனையும் தாக்கியுள்ளார். உடனே Tension ஆன இந்த மனநோயாளி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டார். தன் தந்தையை, தன் சொந்த கையினால் எடுத்து வளர்த்த பிள்ளை, இப்பொழுது தன் சொந்த கையினாலே தகப்பனை கொன்றுவிட்ட பரிதாப நிலை.

ஆனால் இப்படித் துணிந்து தகப்பனின் அட்டகாசத்தை நிறுத்த முடியாத ஒரு இளைஞர் அதே நாளில் தானே யூடியூபில் பார்த்து எப்படி தற்கொலை செய்வது என்று பார்த்து, தன் தகப்பனின் குடிக்காக என்னையே மாய்த்து கொள்ளுகிறேன் என்று தற்கொலை செய்துவிட்டான். காரணம் தகப்பனை திருத்த முடியவில்லையே என்ற விரக்தியில் மூன்று வருடம் பேசாமல் இருந்து பார்த்துள்ளான். ஆனால் அதன் விளைவால் தகப்பன் திருந்தாததால் அந்த வாலிபன் தன் வாழ்வையே முடித்து கொண்டான்.

குடி என்பது குடும்பத்தையே அழித்துவிடும் ஒரு கொடிய நோய். விட முடியாத நோய். எனவேதான் ராஜாவாகிய லேமுவேலுக்கு அவன் தாய் ஆலோசனை கூறும் போது “திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல” (நீதிமொழிகள் 31-1 to 4) என்று திருப்பி திருப்பி கூறுகிறாள். வாழ்வை அப்படியே அழித்துவிடும். திருமணத்தின் அன்றும் கொஞ்சம் குடித்துவிட்டு தான் மனைவியோடு அவனால் இருக்க முடியும். இல்லை என்றால் கை மெதுவாக நடுங்கும். உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பணக்காரன் என்பதற்காக திருமணம் செய்து கொடுக்காதிருங்கள். குடி பணத்தை கரைத்து விடும் ஆற்றல் உள்ளது. சந்தோஷத்தை அழித்துவிடும் மிகப்பெரிய பிசாசு.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி