பேராசையா?


‘இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரு தனி மனிதனின் பேராசையை நிறைவேற்ற ஒருநாளும் முடியாது’ என்று மகாத்மா காந்தி கூறினார்.

ஏழை குடும்பங்களில் இருந்து வாழ்வில் உயர்ந்தவர்கள் கூட, உயர்ந்த பதவிக்கு வந்ததும் ஆடம்பரத்தை தேடி செல்லுகிற மனிதர்களாக மாறி விடுகிறார்கள். கடைநிலையிலிருந்து உயர்ந்ததை மறந்து கை நீட்டி லஞ்சம் வாங்குகிறவர்களாக மாறி விடுகின்றனர். பிள்ளைகள் மற்றும் மனைவியின் ஆடம்பரத்திற்காக சம்பளத்தையும் தாண்டி கிம்பளத்தால் பாக்கெட்டை நிறைப்பது இறைவன் கொடுத்த வாழ்க்கைக்கு அழகல்ல. வரம்பை மீறிய பேராசை என்றாவது ஒருநாள் நம்மை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.

சகாயம், நீ பெரிய கலெக்டரா ஆகணும், உதவி கேட்டு வருகிறவர்களுக்கு நீ உதவி செய்கிறவனாக மாறனும்டா என்று சிறுவனாக படிக்கிறபோதே சகாயம் IASன் தாயார் கூறுவார்களாம். கலெக்டர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று தெரியா விட்டாலும் அந்த குக்கிராமத்தில் உள்ள அந்த அன்னை தன் மகனை சரியாக போதித்து வளர்த்தார்கள்.

லட்சம் லட்சமாக பணத்தை திரட்ட நினைக்காமல் நீதி நேர்மை உண்மை என்று வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்தவர் சகாயம் IAS. ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்ற சொல்லுக்கு சான்றாக வாழ்ந்தவர். அரசாங்கத்தில் பணிக்குச் சென்ற பின்னரும் 13 வருஷம் வரை தனக்கென்று வங்கிக் கணக்கு வைத்திராத வாழும் காமராஜர். அவர் குறிப்பிடும்போது “பொதுவாழ்வில் ஊழல் செய்யாமல் நேர்மையாய் வாழும்போது பிழைக்கத் தெரியாதவன் என்று உலகம் சொல்லும். ஆனால் அதைக் காதிலே வாங்க கூடாது” என்கிறார். அதேவேளையில் ஆடம்பரமில்லாத எளிமையான வாழ்வும், இலட்சியம் மாறாத செயல்பாடுகள் மட்டுமே நம் வாழ்க்கையின் நெடுந்தூர பயணத்திற்கு உதவிடும் என்கிறார்.

நம்முடைய இந்தியா போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களாக பணிபுரிகிறவர்கள் மற்ற வேலையை செய்கிறவர்களை காட்டிலும் குறிப்பாக விவசாயம் செய்கிறவர்கள், தனியார் கம்பெனிகளில் வேலை செய்கிறவர்கள் எல்லாரை காட்டிலும் நல்ல சம்பளத்தையே பெறுகின்றனர். ஆனால் அவர்களுடைய அனாவசியமான ஆசைக்கும், பேராசைக்கும் எந்த ஒரு அரசும் சம்பளம் கொடுத்து திருப்திப்படுத்த இயலாது. வரவுக்கு மிஞ்சி ஆடம்பரத்தை பெருக்க பெருக்க பணம் என்பதின் தேவை பெருகிக்கொண்டே போக ஆரம்பித்துவிடும். சைக்கிளில், நடந்து போகிற இடத்திற்கும் bike, bikeல் போகிற இடத்திற்கு car, ஒரு காருக்கு பதிலாக இரண்டு கார். 5 லட்சம் காருக்குப் பதிலாக 50 லட்சம் கார். 70 ஆயிரம் ரூபாய் பைக்கிற்கு பதிலாக 1.50 லட்சம் மதிப்புள்ள bike. ஆடம்பரமான ஹோட்டலிலேயே உணவு. போன் மூலமாக பிள்ளைகள், மனைவி, கணவன் என நினைக்கும் போதெல்லாம் online shopping, திருமணத்தை 20 லட்சத்தில் முடிக்க முடியும் என்றாலும் 60 லட்சம் செலவு செய்து பந்தா பண்ணி, என்னை பார்த்தாயா நான் எவ்வளவு அந்தஸ்துள்ளவன் என்று காட்ட விரும்புகிறோம். இதன் விளைவாக லஞ்சம் வாங்குவது, தவறான தொழில்களை செய்து பணம் ஈட்டுதல், கடத்தல் போன்ற செயல்களில் உதவியாக இருந்து பாக்கெட்டை நிரப்ப நினைக்கிறோம். விளைவு ஒருநாள் வீழ்ந்து விடுவோம்.

“சுகபோகமாய் வாழ்கிறவன்/ள் உயிரோடு செத்தவன்/ள் என்று திருமறை எச்சரிக்கிறது. அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம் ஆபத்தில் தான் கொண்டுபோய்விடும். மற்ற எவரோடும் உங்களை ஒப்புமை செய்து பார்க்காதிருங்கள். நீங்கள் நீங்களாகவே வாழுங்கள். இறைமகன் இயேசு எளிமையாக வாழ்ந்து நமக்கு முன் மாதிரியை காண்பித்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி