நியாயமான கோபமா?


தவறுதலாக ஒரு பெண்ணின் முடியை வெட்டியதற்காக ஐ.டி.சி மவுரியா ஹோட்டல் நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையம் விதித்துள்ளது. வாடிக்கையாளராக வந்த அந்த பெண் கூறியதற்கு மாறாக கவனக் குறைவாக கூந்தலை வெட்டிவிட்டார் பணியாள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு காரணமாகி விட்டாராம். காரணம் அவர் VLCC மற்றும் Pantene நிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார். ஆனால் தன் கூந்தலை இழந்ததினிமித்தம் எதிர்பார்த்த பணி வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.  4 இன்ச் முடியை வெட்டுவதில் ஏற்பட்ட சிக்கலால் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகப் போய் விட்டது. இதை போன்ற ஒரு சம்பவம் என் கண்முன் நடைப்பெற்றது.

தவறுதலாக முடிவெட்டப்பட்டதை late ஆக உணர்ந்த அந்த பெண் மிகுந்த உணர்ச்சி வசப்பட ஆரம்பித்தார். அந்த அழகு நிலையத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வீசி உடைக்க ஆரம்பித்தார். இறுதியாக பணிபுரிந்த பெண்ணையும் அடித்து உதைக்க ஆரம்பித்தாள். இதைப் போன்று பலரும் பலவிதமாக உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்கள். 

குடும்பங்களில் கூட சிலர் ஒரு பொருளை எங்கு எங்கு வைக்க வேண்டும் என்று இடம் ஒதுக்கியிருப்பார்கள். அங்கு குடும்பத்தினர் அல்லது பிள்ளைகள் வைக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள். சிலர் உடனே பிள்ளைகளை, மனைவியை அடித்து உதைத்து இது வீடா அல்லது காடா என்று ஊர் கேட்கும் அளவிற்கு சத்தமிடுவார்கள்.    

யாராவது ஏன் இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்லுவார்களென்றால் எனக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும். சரி இல்லை என்றால் சொல்லிப் பார்ப்பேன் இல்லையென்றால் அடிதடியில் இறங்கி சரிபண்ணிட்டுத்தான் மறு வேலை என்பார்கள். எங்கே போனாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உடனே சண்டை இழுத்து விடுவார்கள். இவர்களுடைய கோபமானது நியாயமானதாகக் காணப்பட்டாலும், கோபத்தை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்படி கோபத்தை வெளிப்படுத்த Remote, செல்போன், கையில் கிடைத்தப் பொருட்களை எடுத்து வீசி உடைப்பவர்கள் abnormal personஆக மாறிவிடுகின்றார்கள். இதற்கு Emotionally Unstable Personality என்று பெயர்.

இவ்வாறு திருச்சபையிலும் சிலர் அது சரி இல்லை, இது சரியில்லை, எதுவும் சரியில்லை என்று சண்டையிட்டு ஆலய ஆராதனை முடிந்தவுடன் சமாதானத்துடன் போகக் கடவோம் என்று ஆயர் கூற இவர்கள் அனைவருடைய சமாதானத்தையும் கெடுத்துதான் அனுப்புவார்கள். கேட்டால் திருச்சபையை நாம் சரிபண்ணவில்லை என்றால் யார்தான் சரி படுத்த முடியும் என்று காலரை தூக்கி விட்டுப் பேசுவார்கள். மக்கள் எல்லாரும் இப்படிப்பட்ட மனிதர்களோடு தொடர்புவைக்கவே பயப்படுவார்கள். இவர்களைக் கண்டாலே ஓரமாக ஒதுங்கிப் போவார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் தன்னைத்தானே வருத்திக் கொண்டு இந்த குடும்பம் ஒரு நாளும் சரிபட்டு வராது. திருச்சபை ஒரு நாளும் உருப்படாது என்று புலம்பிக் கொண்டு குடும்பத்திற்கு, திருச்சபைக்கு எதிரிபோலவே நினைத்து செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இயேசுவானவர் பல வேளைகளில் அன்றைய சமுதாயத்தைப் பார்த்துக் கோபப்படுகிறார். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மாயக்காரரே, பார்வையற்றோருக்கு பாதைக்காட்டும் பார்வையற்றோரே என்று கடினமாக பேசி கோபத்தை வெளிப்படுத்துகிறார். ஆலயத்தை சுத்திகரிக்கும் போது மட்டுமே சவுக்கை தூக்கி கோபத்தை வெளிப்படுத்துகிறார். இயேசு பலமுறை எருசலேமுக்குச் சென்றாலும் எப்பொழுதும் சவுக்கை தூக்கிக் கொண்டே அலையவில்லை. இன்று பலர் சவுக்கோடே எப்பொழுதும் குடும்பத்திற்குள்ளும், திருச்சபைக்குள்ளும் வலம் வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் BP, மற்றவர்களுக்கும் BP எகிருகிறது. சவுக்கை கீழே போடுங்கள் உங்களுக்கும் சமாதானம், மற்றவர்களுக்கும் சமாதானம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி