உன் கொடி பறக்கட்டும்
எனக்குள்ளே எழுந்த கேள்வி, பெரியவர்கள் தங்களை பிள்ளைகள் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஆளுக்கொரு போனை கொடுத்து அமைதிப்படுத்துவது சிறுபிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சிறந்ததா? பிள்ளைகளிடம் நேரம் செலவிடுவது என்பது சுத்த வேஸ்டா? பிள்ளைகள் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிட கூடாதா? அவ்வாறு ஒன்றும் செய்யாமல் இருந்தால் அழுது விடக்கூடாது என்பதற்காக cell phone கண்டிப்பாக கொடுக்க வேண்டுமா? இவ்வாறு cellயை சிறு வயதிலேயே பயன்படுத்த ஆரம்பித்தால் பிள்ளைகளின் கண்பார்வை பாதிக்கப்படாதா? இயந்திரத்தோடும், Networkவோடும் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெற்றோர்களை எப்படி கவனிப்பார்கள்? பெற்றோர்கள் வயதானபின் பேசிக்கொண்டிருப்பது வேஸ்ட் என்று நினைக்க மாட்டார்களா? என்ற கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக என்னை தொந்தரவு செய்தது. அப்பொழுது சிவாஜியின் தாயார் எப்படி வீரசிவாஜியாக மாற்றினாள் என்பது எண்ணத்தில் உதித்தது.
ஜீஜீபாய் மகன்தான் சிவாஜி. வீரம் விளைந்த மகனாக உருவெடுப்பதற்கு அவன் தாய் ஒரு மூல காரணம். அன்று மிகவும் களைப்பாக இருந்ததால் ஓய்வெடுக்கச் சென்றான். அப்பொழுது அவன் தாய் அவனை சதுரங்கம் ஆட அழைத்தாள். அவன் களைப்பாக இருந்ததால் வேண்டாம் என்று மறுத்தான். அந்த தாய் அவனை வீரனுக்கு என்னடா ஓய்வு என்று விளையாட வம்புக்கு இழுத்தாள். வீரன் எல்லாம் படுத்து தூங்கி ஓய்வு எடுத்தால் நாடு என்னவாகும் என்று கூறி challenge செய்தாள். “விளையாட்டில் தோற்றால் வென்றவர் கேட்பதை கொடுக்க வேண்டும்” என்றாள்.
சரி என்று தாயிடம் சதுரங்க ஆட்டத்தில் அமர்ந்தான். ஆட்டம் அமர்க்களமாக ஒரு கட்டத்தில் தான் பெற்ற மகனுக்கு check வைத்தால் ஜீஜீபாய். தோல்வியை ஒத்துக் கொண்டவன் “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்றான்.
ஜீஜீபாய் தன் மகன் சிவாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு உயர்ந்த ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றாள். தூரத்தில் சிம்ஹகாட் என்ற கோட்டையில் கொடி பறந்து கொண்டிருந்ததை அவனுக்கு காட்டி, “இதோ பார் அவன் கொடியை பார்க்கும் போதெல்லாம் என் மனம் கொதிக்கிறது. நாளை மாலைக்குள் அவன் கொடியை இறக்கி உன் கொடி பறக்க வேண்டும்” என்றாள்.
இரவோடு இரவாக திட்டங்களை தீட்டி தன் படையோடு சென்று வெற்றி வாகை சூடி சிம்ஹகாட் கோட்டையில் தன் கொடியை ஏற்றினான்.
சிறுபிள்ளைகளோடும், இளைஞர்களோடும் நேரம் செலவிடுவது வேஸ்ட் என்று நினைக்கிறீர்களா? சங்கீதக்காரன் ஆண்டவரிடம் வேண்டும்போது ஆண்டவரே எனக்கு நீடித்த ஆயுளை தாரும். எதற்காக என்றால் உம்முடைய அதிசயங்களை என் தலைமுறைக்கு விவரித்து காண்பிப்பதற்காக என்று கேட்கிறான். லேமுவேல் ராஜாவாக மாறின போதிலும் ஜீஜீபாய் போன்று ஆலோசனைகளை நீதிமொழிகள் 31 ஆம் அதிகாரத்தில் அள்ளி வழங்குகிறாள். தன் மகன் எதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று விவரிக்கிறாள்.
லோவிசாலும், ஐனிக்கேயாலும் தன் சந்ததியாகிய தீமோத்தேயுவிற்கு தாங்கள் பெற்ற நம்பிக்கையை பகிர்ந்து கொடுத்து விசுவாசத்தில் வல்லவனாக மாற்றுகிறார்கள்.
தாவீது மிகவும் வயதான போதும் தன் மகனாகிய சாலமோனுக்கு உலக நட்புகளையும், இதுவரையில் தான் பெற்றுக்கொண்ட கசப்பான, நல்ல அனுபவங்களையும் கூறி கவனமாக செயல்பட அழைப்பு கொடுக்கிறான்.( 1 ராஜாக்கள் 2)
நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன்,பேரப்பிள்ளைகளுடன் எப்படி செயல்படப் போகிறீர்கள்?
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment