Party வைக்கக்கூடாதா?
சினிமாவில் நடிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரை பலர் வலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் செய்கிற ஒவ்வொரு செயலுமே சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க கூடியது. எனவே தான் விளம்பரங்களில் அவர்களை பயன்படுத்துகின்றனர்.
மதுப்பழக்கம் என்பது ஆண் சமுதாயத்தை எவ்வளவு பாழ்படுத்தியுள்ளது என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அதே வேளையில் சில சமூகங்களில் போதைக்கு பெண்களும் அடிமையாகுவதை காணமுடிகிறது. பொதுவாக மது அருந்துவது அவமானமாகக் கருதுவதால் பெண்கள் barகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே மது அருந்துகின்றனர். ஆனால் இதுபோன்று நடிகைகள் செய்கிற செயலானது பெண்கள் சமுதாயத்தையும் இந்த மதுவுக்குள் தள்ளுவதற்கு காரணமான செயலாக மாறிவிடும் என்பதாலே சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்புகிறார்கள். இவ்வாறு மதுவுக்கு ஒரு பெண் அடிமையாகி விட்டால் அவர்கள் அதைக் குறித்து மற்றவர்களிடம் பேசி அதிலிருந்து வெளிவர முயற்சியை மேற்கொள்ள முடியாமல் போய்விடுகிறது.
சூழ்நிலை நிமித்தமாகவும், மன அழுத்தங்கள் நிமித்தமாகவே பெண்கள் அதை சமாளிப்பதற்காக மதுவை அருந்துகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஒரு கணவனும், மனைவியும் குடிக்கிறவர்களாக மாறிப் போனால் குடும்பம், பிள்ளைகள் நிலை பரிதாபத்திற்குரியதாகவே மாறிப்போகும். மதுப்பழக்கத்திற்கு மாறிவிட்டால் மது அருந்தாமல் இருக்க அல்லது தவிர்ப்பது என்பது கடினமான சூழலாக மாறிவிடும். இவைகளையெல்லாம் உணர்ந்துதான் இளம் பருவத்திலே மது அருந்த முயற்சிப்பதை தவிர்க்க முற்பட வேண்டும் என்று கூறுகிறோம். மது அருந்துவது என்பது கவர்ச்சியான விஷயமல்ல, மாறாக நாற்றமெடுக்க கூடிய விஷயம்.
இளைய சமுதாயத்திற்கு மது இல்லாமல் விருந்து நடத்த முடியும், மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறோம். மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பது என்பது நட்பையும், நண்பர்களின் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து மகிழ்வதும், நண்பர்களின் வேடிக்கையான காரியங்களை அனுபவித்து மகிழ்வதுமே தவிர மது அருந்தி லம்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் இருப்பது அல்ல.
திருமறை இவைகளை மனதில் கொண்டுதான் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. “மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.” (நீதிமொழிகள் 23:31,32) துவக்கத்தில் மகிழ்ச்சிக்காக வேடிக்கைக்காக மதுவை பயன்படுத்தும் ஆணோ, பெண்ணோ படிப்படியாக போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி வாழ்வையே இழந்து போவார்கள். துவக்கம் என்பது Bachelor partyயில் தான்! வேடிக்கைக்காக, நண்பனுக்காக ஆரம்பிக்கிறோம். எனவே இளம் சமுதாயமே வாழ்வை காத்துக்கொள்! வளமான வாழ்வை இழந்து போகாதே!!
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment