காந்தியின் ஒரு குரங்கு

.

ஷீபா அன்று நன்றாக தூங்கி விட்டாள். வேலை பார்த்து பார்த்து அலுத்துப் போனாள். என்னவோவென்று திருமண வாழ்வை எதிர்பார்த்தவளுக்கு இதுதான் வாழ்க்கையா என்று வெறுத்து போனாள். ஏனென்றால் காலையில் எழுந்து சமைத்து வைக்க வேண்டும். பின்பு 1 மணி நேரம் பஸ் பயணம் செய்துதான் officeக்கு போக முடியும். மாலையில் 6 மணிக்கே வேலை முடிந்தாலும் managerக்கு வெளியே விட விருப்பமில்லாமல் ஏதாவது வேலையை கொடுத்து கஷ்டப்படுத்துவார். வாழ்க்கையே ஒரு இயந்திரமாய் மாறிப்போனவளுக்கு தன் திருமண நாள் கூட மறந்து விட்டது. அதுபோக அன்று அரசு விடுமுறையாக இருந்ததால் அலுத்துப்போய் 7 மணி வரையிலும் தூங்கி போனாள்.

எழும்பி மெதுவாக வெளியே வந்தால் surprise. வீடு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிள்ளைகள் அம்மாவுக்கு வாழ்த்து சொன்ன பின்புதான் ஞாபகமே வந்தது.

அவசர அவசரமாக கிச்சனுக்குள் நுழைய ஆரம்பித்தவளுக்கு எதிராக வந்த ஜானி கையில் சூடான காபியோடு மனைவியிடம் நின்றான். ஐயோ என்ன ஒரே surpriseஆக இன்று இருக்கிறது. மெதுவாக கிச்சனுக்குள் நுழைந்த போது தான் தெரிந்தது ஜானி தன் கையாலே தன் மனைவிக்கு காலை உணவை youtube பார்த்து சூப்பராக செய்து வைத்திருந்தான்.

எல்லாம் ரெடியாக இருக்கிறதே என்று பேசிக்கொண்டே, சரி நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன். ஐயா திருமண நாளுக்கு ஜெபிக்க வந்துவிடுவார்கள் என்று வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள். வேகமாக குளித்து விட்டு வந்தவள் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்த போது அவளுக்கு பிடித்த காப்பர் கலரில் சுடிதார் hangerல் தொங்கியது. ஜானியும் அதே கலரில் shirt போட்டிருந்தான். எவ்வளவு அழகான selection என்று ஜானியை பாராட்டினாள்.

காலை உணவை குடும்பமாக உட்கார்ந்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர். கை கழுவும் போதுதான் சுடிதாரை உற்றுப்பார்த்தால்.சுடிதாரில் ஒரு பகுதியில் சின்ன damage. அவளுக்கு பகீர் என்று இருந்தது. இவ்வளவு காஸ்ட்லியான துணியை எடுத்திருக்கிறீங்க, ஆனால்  சரியாக பார்த்து எடுக்க வேண்டாமா? என்று sound விட்டாள். ஜானியின் முகம் சூரியன் போல் பிரகாசித்தது அஸ்தமனம் கண்டது. என்னை கூப்பிட்டுட்டு போயிருந்தால் நான் சரியாக எடுத்திருப்பேன்லா, பிடிங்க உடனே கொண்டு மாத்திட்டு வாங்க, இல்லன்னா அவன் திருப்பித் தரமாட்டேன் என்பான் என்று உடுத்திய  dressயை கழற்றிக் கொடுத்தாள்.

ஜானி surpriseஆக செய்ய வேண்டும் என்று ஒரு நாள் முழுவதும் கடை கடையாக ஏறி இறங்கி மேட்சாக, அவளுக்கு பிடித்த மாதிரி எடுத்ததை, இப்படி செய்து விட்டாளே என்று வாடி வதங்கி நின்றான்.

திடீரென்று வீட்டு கதவு தட்டப்பட்டது, திறந்தால் ஷீபாவின் அம்மா அப்பா. என்ன அம்மா திடீரென்று வந்திருக்கிறீங்க.

உங்க marriage dayயை  celebrate பண்ண தான் வந்தோம். மருமகன் சொன்னாரு. ஆமா மருமகன் என்ன சோகமா இருக்கிறாங்க.

நடந்ததை போட்டு உடைத்தாள் ஷீபா. உடனே ஷீபாவின் அம்மா அவளை பார்த்து, ஷீபா எங்களுக்கு வயது 75 ஆகிறது. ஒரு நாள் கூட உங்க அப்பா எனக்கு dress வாங்கி கொடுத்தது கிடையாது. நாங்க வருஷத்திலே கிறிஸ்மஸ் மட்டும்தான் dress கடைக்கே போனது உண்டு. ஆனால் உன் கணவன் ஆசையாக வாங்கித் தந்ததை மகிழ்ச்சியாக உடுத்திக்கொள்.  குறையை பார்க்காதே அவர் மனதை பார் என்று எடுத்துச் சொல்ல, ஷீபா தன் தவறை உணர்ந்து ஓடிப்போய் ஜானியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். மீண்டும் ஜானியின் முகத்தில் சூரியன் உதயம் ஆனது.

“நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம், அன்பே தலைசிறந்தது” (1 கொரிந்தியர் 13:10,13) என்று பவுலடிகள் குறிப்பிடுகிறார். குறைகளை மட்டும் பார்க்கும் எண்ணம் உள்ளவர்களால்  அழகானவைகளை  பார்க்க முடியாமல் போய்விடுகிறது. இருக்கிறதில் மகிழ்ச்சி அடையாமல் இல்லாததற்காக ஏங்கி நிற்கிறோம். ஆண்டவர் நம் வாழ்வில் கொடுத்த ஒவ்வொன்றிற்காகவும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

நம்முடைய சந்தோஷத்தை மட்டும் பார்க்காமல் நமது முழு குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். குற்றம், குறைகளை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் நிம்மதியே நமக்கு இருக்காது. நாம் ஒரு மனநோயாளியாகவே மாறிவிடுவோம். அன்பினால் செய்யப்படும் செயல்களுக்குள் குறைகளை பார்த்து பழகாதிருங்கள் 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி