Hand Feeding


ஒருநாள் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது காலை 7:30 மணி. தன் மகன் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருப்பதால் அந்த தாய் ஒரு பாத்திரத்தில் உணவை வைத்துக்கொண்டு சாப்பிடுப்பா, சாப்பிடு, இந்த ஒருவாய் மட்டுமாவது சாப்பிடு என்று வற்புறுத்தி கொண்டிருந்தார்கள்.

என்னம்மா சின்ன பிள்ளைக்கு ஊட்டிவிடுகிறீர்களா? என்றேன். சிரித்துக்கொண்டே என்ன செய்யணும்னு தெரியவில்லை ஐயா! ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு! அவன் சாப்பிடாமல் போனால் எனக்கு சாப்பிட முடியாது. நான் தான் அவனுக்கு dress எல்லாவற்றையும் ironing பண்ணி வைத்துள்ளேன். இனி வந்தவுடன் dressஐ அப்படி வீசி விடுவான். அடுத்த நாளுக்கு uniform வேண்டுமே, சரியான இடத்தில் வைக்காவிட்டால் தேடிக் கொண்டு அலைய வேண்டுமே என்ற அக்கறை கிடையாது. இப்படியே வளர்ந்து விட்டான் என்று தன் மகனை புகழ்ந்து கொண்டார்கள்.

பிள்ளைகள் எப்படியாகிலும் தாங்கள் நினைத்த படிப்பை பிள்ளைகள் படித்தால் போதும் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர்.

அவனுக்கென்ன/அவளுக்கென்ன  படித்தால் போதும், வேறு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவேன். ஆனால் அதை மட்டும்தான் செய்ய மாட்டேன் என்று செயல்படுகிறான்/ள் என்று பெற்றோர்கள் வருத்தப்படுகின்றனர்.

பள்ளிகளில் எது மிகவும் கண்டிப்பாக, ஒழுக்கமாக இருக்கிறதோ அங்கே கொண்டு சேர்த்துவிட விரும்புகின்றனர். சில பள்ளிகள்/கல்லூரிகள் அவை பாடசாலை என்று சொல்லக்கூடாது. அவற்றை சிறைச்சாலை என்று கூட அழைக்கலாம். எதற்கெடுத்தாலும் punishment, imposition என்று மனிதநேயமற்ற அளவில் பிள்ளைகள் மேல் பாரத்தை தலைமேல் சுமத்தி செக்கு இழுக்கும் மாடுகளைப் போல பிள்ளைகளை படிக்க வைத்து பேப்பர்களில் வாந்தி பண்ண சொல்லுகின்றனர்.

இவ்வாறு வளரும் பிள்ளைகள் பெரியவர்களான போதும் மனித நேயத்தோடு வளராமல் திருமணமான மனைவியை பெல்ட்டால் அடித்தும், கடுமையான வார்த்தையினால் இதயத்தைத் துளைக்கும் அளவிற்கு பேசுவதும், திருமண வாழ்க்கையை துச்சமாகக் கருதி ‘நீ எனக்கு தேவையில்லை’ என்று விரட்டி விடுவதும், எடுத்த உடன் divorceக்கு நோட்டீஸ் அனுப்புவதும், எனக்கு எங்க அம்மா இருக்கிறாங்க, நீ எனக்கு தேவையில்லை என்று தாயின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கொண்டாடுவதும் சர்வசாதாரணமாக மாறிப் போய்க் கொண்டிருக்கிறது. காரணம் பிள்ளைகள் வெறுமனே தான் B.E, M.E, M.B.B.S, M.S, M.D, M.Sc, P.hD என்று படித்து தள்ளுகிறார்களே தவிர வாழ்க்கை நெறிமுறைகளுடன் வளரத்தக்கதான கல்வியை, ஒழுக்கத்தை, மனிதநேயத்தை கற்றுக் கொள்வதில்லை.

நம்முடைய பிள்ளைகளுக்கு அளவுக்கு மிஞ்சிய செல்லம் கொடுத்து, படிக்க வைத்து பார்க்கலாம். ஆனால் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால் இறைவனிடம் நம் பிள்ளைகளை ஒப்புக் கொடுத்து அவருடைய சித்தம் நிறைவேற காத்திருக்கவேண்டும். டாக்டருக்கு படித்தால் தான் வாழ்க்கை, IAS போனால் தான் வாழ்க்கை என்று நினைத்து பிள்ளைகளை அளவுக்கு மிஞ்சி கஷ்டப்படுத்தாதிருங்கள். அவர்களுடைய திறமைக்கு ஏற்ப, புரிதலுக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப படிக்க  ஊக்கப்படுத்துங்கள்

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியாவை கர்த்தர் எப்படி தேர்ந்தெடுத்தாரோ அதைப் போன்று உங்கள் பிள்ளைகளையும் எதற்காக அழைத்தாரோ அதை புரிந்துகொள்ள காத்திருங்கள். அவர்கள் திறமைக்கு மிஞ்சி உங்கள் எதிர்பார்ப்பு ஏற்படும்போது பிள்ளைகள் அவைகளை அடைய முடியாமல் போகும்போது பிள்ளைகள் மன சோர்வுக்குள்ளாக தள்ளப்படுகின்றனர். அவர்கள் முழு சந்தோஷத்தையும் இழந்து போய் விடுகிறார்கள். தன்னால் எதுவும் முடியாதோ என்ற பய உணர்வு அவர்களை ஆளுகை செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஆகவே பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள், உற்சாகப்படுத்துங்கள், ஜெபியுங்கள், காத்திருங்கள், கர்த்தர் உங்கள் பிள்ளைகளை அற்புதமாக வழிநடத்துவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி