சமரசம் தேவையா?
வில் எட்ராட் தன் மகள் நைட்டிங்கேலை செல்வச் செழிப்போடு வளர்த்தார். அவள் படிப்பில் ஆர்வத்தோடு படித்தாலும், அவள் ஒரு குடும்பத்திற்கு நல்ல மணப்பெண்ணாக அனுப்பி வைக்கவேண்டும் என்று தன் மனதில் கனவோடு இருந்தார். ஆனால் நைட்டிங்கேலுடைய சிந்தை என்பது சற்று வித்தியாசப்பட ஆரம்பித்தது. அது அவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. எனவே தனது மனைவியிடம் கூற இருவரும் நைட்டிங்கேலிடம் நீ கண்டிப்பாக செவிலியர் பணிக்கு போக வேண்டாம் என்று கண்டித்தனர். நம்முடைய குடும்பம் எவ்வளவு செல்வம் உடையது. நமது பாரம்பரியம் எவ்வளவு உயர்ந்தது. அதை விட்டுவிட்டு செவிலியர் பணிக்கு போக விரும்புகிறீயே என்று கண்டித்தனர். ஆனால் நைட்டிங்கேல் தனது தீர்க்கமான முடிவையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தவே எட்ராட் தனது முடிவில் பின்வாங்கினார்.
இந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1853 ஆம் ஆண்டு கரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார். அவர் மூலம் சிலர் செவிலியர் பயிற்சி பெற்று காயமடைந்த வீரர்களுக்கு மிக நேர்த்தியாக மருத்துவ சேவை செய்து இங்கிலாந்து அரசையே திரும்பிப்பார்க்க வைத்தார். சிறு விளக்கை எடுத்துக்கொண்டு சேவையை இரவு பகல் என்று பாராமல் செய்ததால் “கைவிளக்கேந்திய காரிகை” என்று பெயர் பெற்றார். இன்றும் செவிலியர்கள் நினைக்கும் அளவிற்கு அவர்கள் தீர்மானம் சரியாக இருந்தது.
இன்று பல மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்று தெரியாமல் திகைக்கின்றனர். தங்கள் நண்பர்கள் படிக்கின்றனர் எனவே நானும் application போட்டுள்ளேன் என்று சிலர். இன்னும் சிலர் எந்த course கிடைக்கிறதோ அதை படிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு சிலர் அப்பா - அம்மா எதைச் சொல்கிறார்களோ அதை தான் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். சிலர் எதில் அதிகமான சம்பளம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
படிக்கிற மாணவர்கள் தங்களது விருப்பத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதைக்குறித்து நன்றாக விசாரித்து நாம் படிக்கிறது பயன்பெறுமா, வேலை வாய்ப்பு உண்டா என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது விருப்பம் என்ன என்பதை பெற்றோரிடம் கலந்துரையாட வேண்டும்.
இறைவன் உங்களுக்கு வைத்திருக்கிற படிப்பை குறித்து நன்றாக ஜெபிக்கவேண்டும். ஆண்டவரின் சித்தம் இல்லாமல் எதுவும் நடக்கப் போவது இல்லை. எனக்கு guide பண்ணும் என்று அவரிடம் ஒப்புக்கொடுக்கும் போது அவர் காரியத்தை வாய்க்க செய்வார்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment