இயன்றதைச் செய்வோம்
திருமண வாழ்வில் ஒரு பிரச்சனை என்றால் உறவினர்கள் பேசி சரிசெய்து விடுவார்கள். அது அந்த காலம். ஆனால் இப்பொழுது மொய் பணம் கொடுப்பதோடு உறவினர்கள், நண்பர்கள் வேலை முடிந்துவிடுகிறது. அதன் பின் ஏற்படுகிற விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்ற நிலைக்கு சென்று விடுகிறது. ஆகவேதான் குடும்பங்களில் ஏற்படும் சின்ன பிரச்சினைகளுக்கு கூட கோர்ட்டில் போய் தான் முடிவு பண்ண வேண்டிய சூழல் வந்துவிடுகிறது. பிறருடைய வாழ்வில் உதவி செய்து அவர்கள் வாழ்வு ஈடேற உதவி செய்வது ஒவ்வொருவருடைய குணமாக மாறவேண்டும். தூத்துக்குடி நாசரேத் பேராயர் அவர்கள் ஒரு மிஷனரி பற்றி ஒரு வார இதழில் குறிப்பிட்டிருந்தார்கள். அது நம் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அதனை குறிப்பிட்டுள்ளேன்.
இந்தியாவில் வருடக்கணக்கில் பணியாற்றிய மிஷனரி சர் பார்டல் பெரைரி என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். தன் வாழ்நாளில் சிறப்பான பணியாற்றிய பின் தன் சொந்த நாட்டிற்கு திரும்பினார். அவருடைய தாயாருக்கு தன் மகன் தன் வீட்டிற்கு வருவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தன் மகனை அன்போடு அழைத்து வர ரயில் நிலையத்திற்கு ஒரு வண்டியை அனுப்பினார்.
அந்த வண்டிக்காரர் புறப்படுமுன், “அம்மா உங்கள் மகனை நான் முன் பின் பார்த்தது இல்லை. அவரைப் பற்றிய அடையாளம் எதையாவது சொல்ல முடியுமா?” என்று கேட்டான்
இதைக் கேட்ட அந்தத் தாய் அந்த வண்டிக்காரரிடம் என் மகனை கண்டு பிடிப்பது மிகவும் எளிது. யாராவது ஒரு ஆளுக்கு உதவி செய்து கொண்டிருப்பது தான் என் மகனுடைய அடையாளம் என்றார்கள்.
வண்டிக்காரன் சிரித்துக் கொண்டே வண்டியை தட்டினான். ரயில் வந்து நின்றது. மக்கள் எல்லாரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயதான ஒருவர் இறங்க முடியாமல், கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த நபருக்கு ஒருவர் உதவி செய்து அவரது பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த வண்டிக்காரர் மெதுவாக போய், “sir, good name please!” என்று மெதுவாகக் கேட்டார்.
கேட்ட உடன் வண்டிக்காரர் மகிழ்ச்சி அடைந்தார். Sir உங்களுக்காக தான் நான் காத்திருக்கிறேன். உங்கள் தாயார் என்னை, உங்களை pick up பண்ண அனுப்பி விட்டார்கள் என்று அழைத்து சென்றான்.
இதை வாசிக்கிற சகோதரனே, சகோதரியே உலகிற்கு நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். ஒரு மெழுகைப் போன்று உருகி பிறருக்கு ஒளி கொடுப்பதற்காக அழைத்துள்ளார் இயேசு கிறிஸ்து .
ஒருவேளை நீங்கள் அதிகமாக உதவி செய்யாவிட்டாலும் மனிதநேயத்தோடாவது உதவி செய்ய முன் வாருங்கள். நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும் உங்கள் சேவையை முடக்கி விடாதிருங்கள். அதை தாண்டி உறவினர்கள், திருச்சபை மக்கள், தெருவில் உள்ளவர்கள் என்று விரிவடையட்டும். குறிப்பாக திருமண வாழ்வில் இளம் தம்பதிகள் தடுமாறும் போது முதிர்ந்த தம்பதியினர் வழிகாட்டினால் அனேக குடும்பங்கள் நிமிர்ந்து நிற்க முடியும். அதை கூட செய்ய மறுப்பதால் தான் உறவுகள் பாழ்பட்டு சமூகம் சீர்குலைந்து, மகிழ்ச்சியை இழந்து விடுகிறது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment