வெட்டுக்கிளியா? தேனீயா?

இளைஞர்களுக்கு செல்போன் வந்ததில் இருந்து நேரம் போவதே தெரியவில்லை. Network Connection இல்லாத ஊரில் இனி குடியிருக்க மாட்டோம் என்று இளைஞர்கள் மறுக்கும் காலம் இது. நமது ஊரில் என்ன? இந்தியாவில் 4G connection தான். இது என்ன நாடு? வெளிநாட்டில் வாழ்ந்தால் அருவிபோல் சோர் என்று கொட்டிக்கொண்டிருக்கும் நெட்வொர்க்கோடு தான் வாழ்வு! என்று இளைஞர்கள் இந்தியாவை ஒதுக்கும் காலம்.

அம்மா, அப்பா இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் நெட்வொர்க் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. Network  இல்லை என்றால் நேரமே போக மாட்டேங்குது, ஒரே boring இது என்னம்மா வாழ்க்கை! சும்மா அடுத்தவங்க கிட்ட பேசிக்கொண்டே இருக்கனுமா!! சே என்ன வாழ்க்கை!!!

நேரத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. காலத்தை விரயம் செய்வதிலே இன்று பல இளைஞர்கள் கில்லாடிகளாக உள்ளனர். கொஞ்சம் வாசிங்க Bro.

தேனீ ரீங்காரம் செய்துக்கொண்டு ஒவ்வொரு மலராக வட்டமிட்டுக் கொண்டே வந்தது. மணம் வீசும் மலர் கண்டு வட்டமிட்டு மெதுவாக பூவில் உட்கார்ந்தது தேனீ.

ஏய் என்ன எப்படி இருக்கிறாய்? உனக்கு முன்னே வந்து இந்த செடியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் பார்த்தாயா என்றது வெட்டுக்கிளி. பார்த்தியா நம்ம இரண்டு பேருக்குமே இந்த செடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவைகள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கை அம்போ தான் என்றது வெட்டுக்கிளி.

சரிதான். ஆனால் நான் அந்தச் செடியை மகரந்தச் சேர்க்கையால் அதன் மகிமையை என்றும் உயர்த்துகிறேன். இன்னும் சில நாட்களில் இந்த செடி அழகாக காய் காய்த்து, பழுத்து பலன் பெற்றுவிடும். ஆனால் நீயோ இந்த செடியின் இலையை வெட்டி வெட்டி ஒன்றுமில்லாமல் ஆக்குகிறாய் என்றது தேனீ.

இன்று நாம் நேரம் என்ற செடியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். நேரத்தை சேமித்து வைக்க முடியாது. ஆனால் அதை பயன்படுத்த முடியும். நல்ல முறையில் நல்ல முறையில் பயன்படுத்தினால் அதற்கு பலன் பின்னாட்களில் கிடைக்கும். அதை விரயம் பண்ணி TV, Interne, Facebook, Instagram, WhatsApp, Twitter என்று தடவிக் கொண்டே இருந்தால் வாழ்க்கை நம்மை நிர்பந்தமான நிலைக்கு கொண்டு வந்து விடும். அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தரும் பணத்திற்கு மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. இது என்ன பெரிய பணமா? என்று வீசி விடுகிறோம்.

உங்கள் பெற்றோர் தன்னை வெறுத்து சேமித்த பணத்தின் மகிமை இப்பொழுது தெரியாமல் இருக்கலாம். ஆனால் B.E, M.E, MBA படித்துவிட்டு Rs.10,000, Rs.15,000 என்று சம்பளம் வாங்கிக்கொண்டு சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் தடுமாறும் போது தான் பணம் மற்றும் நேரத்தின் மதிப்பு தெரியும்.

“இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.” (நீதிமொழிகள் 6:10,11) என்று திருமறை எச்சரிக்கிறது. அதிக நேரம் Internetல் இருந்த பின்பு படிப்பதற்கு கண்கள் ஒத்துழைப்பதில்லை. அது  சோர்ந்து போய் விடுகிறது. இரவு 2 மணி வரை facebook பார்த்து விட்டு காலையில் பள்ளிக்கு/காலேஜுக்கு கிளம்ப முடியாமல் வீட்டிற்குள்ளே சண்டை ஏற்படுகிறதா? மாயையான நண்பர்கள், மனதை லயிக்க வைக்கும் ஏராளமான செய்திகள் குப்பை போல் குவிந்து கிடக்கிறது. பார்க்க பார்க்க,கிளற கிளற நேரம் தான் விரையமாகுமே தவிர வாழ்வு ஈடேது. கவனம் Bro.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி