எத்தனை விசில்?
ஷர்மிளா பெரிய பெண்ணாக மாறின பின்பும், அம்மா நான் ஏதாவது help பண்ணட்டுமா என்றால், "இல்ல, இல்ல எல்லாம் அம்மாவே பார்த்துக்குவேன், என் செல்லம் doctor ராக வரனும். அது ஒன்னுதான் என் ஆசை. அதை நிறைவேற்றி வைச்சாலே போதும். அடுப்படியெல்லாம் உனக்கு வேண்டாம் என்று கூறிவிடுவாள் தாய்.
தாயின் கனவை நிறைவேற்றினாள் ஷர்மிளா. திருமணம் ஒழுங்கானது. அதுவும் டாக்டராக வேலைச் செய்யும் பையன். ஷர்மிளாவின் தாய்க்கு சந்தோஷம் தாங்க முடியல . கடவுள் எவ்வளவு நல்லவர் என்று மனதுக்குள் நன்றிச் சொல்லிக் கொள்வார்கள்.
ஷர்மிளா friends, திருமணத்திற்கு வந்த போது ஏடி ஷர்மி எப்பொழுதும் மருத்துவம் பார்க்கிறதே வேலை என்று இருந்து விடாதே. அடிக்கடி உன் husband யை பார்த்துக்க, எதாவது நீ உன் கையால எதாவது செய்துக் கொடுத்து சந்தோஷமா வைச்சுக்கோ. வேலைக்காரி எல்லாம் பார்த்துக் கொள்வாள் என்று கண்ணை மூடிக்கிட்டு இருந்திடாதே என்று அறிவுரைக் கூறிச் சென்றனர்.
ஷர்மிளா அடுப்பு பக்கமே போனது இல்ல, இப்பொழுதுதான் யூடிப்பில் எல்லாம் தெரிந்துக் கொள்ளலாமே, தேவைப்பட்டா அம்மாவிடம் கேட்டுக் கொள்ளலாம், டாக்டருக்கு படித்த நமக்கு இது ஒரு மேட்டரா என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு சென்றாள். ஒரு நாள் மாலையில் கணவன் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். வேலைக்காரி அப்பொழுது தான் எல்லா வேலையையும் முடித்துவிட்டு குளிக்கச் சென்றாள். எனவே ஷர்மிளா கணவனைப் பார்த்து நானே டீ போட்டுக் கொண்டு வருகிறேன் என்று மெதுவாக கிச்சனுக்குள் சென்றாள்.
இஞ்சி டீ போட்டு கணவனை அசத்தி விட வேண்டியது தான் என்று யோசித்தாள். அம்மா இஞ்சி டீ போடும் போது எதையெல்லாம் சேர்ப்பார்கள் என்று ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருப்பதால், துணிந்து இஞ்சி டீ தயார் செய்ய ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரமாச்சு இஞ்சி டீ இன்னும் வரவில்லையே. என்ன ஆச்சு, ஸ்பெசல்லா நம்ம மனைவி என்னச் செய்கிறாளோ என்று நினைத்த போது... கிச்சனில் இருந்து விசில் சத்தம் பறந்தது.
ஷர்மிளாவின் கணவருக்கு ஒரு சந்தேகம் நம்ம wife டீ போடத்தானே போனாள், சாப்பாடு சமைக்கிற மாதிரி குக்கர் விசில் அடிக்கிறதே என்று மெதுவாக கிச்சனை நோக்கி நடந்தான்.
என்னப்பா எங்கப் போற என்று அம்மா மெதுவாக கிச்சனுக்கு வந்தார்கள். இல்லம்மா டீ போடப் போறதா ஷர்மி வந்தாள் அதுதான் பார்க்கவந்தேன்.
ஷர்மிளா எத்தனை விசில் அடித்த பின் ரெடியாகுமோ என்று தெரியாம யூடியூப்பை மெதுவாக On செய்து பார்க்க ஆரம்பித்தாள்.
என்ன ஷர்மி என்னப் பண்ணுகிறாய்? அத்தை மெதுவா கேட்டாங்க.
இல்ல அத்தை, இஞ்சி டீ கேட்டாங்க அதுதான் குக்கரில் வைத்தேன். எத்தனை விசில் என்று தெரியல. அதற்கு தான் யூடியூப்பை ஆன் பண்ணி பார்த்துக்கிட்டு இருக்கிறேன்.
அத்தையும், கணவனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இரண்டு விசில் போதும் என்று அத்தை ஸ்டவ்வை Off பண்ணினார்கள்.
புது வகையான "டாக்டர் டீ" ரெடியாச்சு. super என்று ஷர்மிளாவின் கணவர் அவள் நிலையைப் புரிந்துக் கொண்டு அவளை பாராட்டினான்.
அன்பிற்குரியோரே நீங்கள் எவ்வளவு தான் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், உங்கள் பிள்ளைகளை எவ்வளவு தான் உயர்ந்த படிப்பை படிக்க வைத்தாலும் சின்ன சின்ன விஷயங்கள் கூட கற்றுக்கொள்ள முடியாமல் முடமாக்கி விடாதிருங்கள்.
பவுலடியார் நான் வாழ்ந்திருக்கவும் தெரியும், தாழ்ந்திருக்கவும் தெரியும், எல்லா வேளையிலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக் கொண்டேன் என்று குறிப்பிடுகிறார். பவுல் ஒரு பெரிய பணக்காரர், அதே வேளையில் 2000 வருடங்களுக்கு முன்பே கமாலியேலின் பாதத்தருகே உட்கார்ந்து கல்வி கற்றவர். ஆனாலும் அவர் கூறும் statement யைப் பார்த்திர்களா? கஷ்டம், பசி போன்ற சூழல்களிலும் நான் வாழ்ந்து விடுவேன் என்கிறார். இன்று கொரானாவின் நிமித்தமாக பலர் தங்கள் வேலைகாரிகளை வீட்டில் வேலைச் செய்ய வைக்க முடியாத சூழல். Hotel எல்லாம் அடைக்கப்பட்ட சூழல் வந்தது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழல் எப்பொழுது யாருக்கு வரும் என்று தெரியாது. ஆதலால் பிள்ளைகள் எல்லா சூழ்நிலைகளிலும் அனுசரித்து வாழ கற்றுக் கொடுங்கள்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment