My body My Rights
அதேவேளையில் சரீபாவின் தந்தை தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்பொழுது தலிபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தானின் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளதாக தினசரி பத்தரிக்கைகள் பல்வேறு செய்திகளை வெளியிட்ட வாறு உள்ளது. குறிப்பாக nail polish போட்டால் கை இருக்காது, பெண்கள் மெதுவாக பேச வேண்டும்,அவர்கள் பேசுவது வெளியே கேட்கக் கூடாது. நடக்கும் போது சத்தம் இல்லாமல் நடக்க வேண்டும். எந்தவிதமான விளம்பரங்களிலும் பெண்கள் தங்கள் தலையைக் காட்டக் கூடாது. முக்குக்கு முக்கு முளைத்துள்ள பியூட்டி பார்லருக்குச் சென்று மேக்கப் போடக் கூடாது. வீட்டிற்குள் இருந்தாலும் ஸ்கீரின் போட்டு உள்ளே இருப்பது தெரியாத அளவிற்குச் செய்ய வேண்டும் என்று கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்சூழலில் பெண்களின் சுதந்தரம் முற்றிலும் பறிபோய்விட்டதாக பெண்கள் புலம்புகின்றனர். இனிப் போராடக் கூட தங்களுக்கு திராணியில்லை என்ற நிலைக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர் குறிப்பாக சரீபா போன்ற பெண்கள் பயம் என்னவென்றால் தங்களைப் போன்ற பெண்களை தேடி பிடித்து அழித்து விடுவார்களோ என்று அச்சத்தில் உறைந்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானின் நிலை.
“My body My Rights” என்ற கோஷத்துடன் இந்தியாவில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றனர். அது கணவனாக இருந்தாலும் மனைவியின் அனுமதியின்றி தொடக்கூடாது என்று சத்திஸ்கர் மாநில நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனிமனித உரிமை என்பது முக்கியப்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் குடித்து வரும் ஆண்கள், போதைப் பொருட்களைப் பயன்படுத்தி விட்டு பெண்களை மிகவும் மூர்க்கமாக அணுகுவதால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது.
"கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்... புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்..."(எபே 5:23-25) என்று திருமறை கணவன் மனைவியின் உறவு பற்றி குறிப்பிடுகிறார். தனிபட்ட மனிதனின் சுதந்தரத்தை திருமறை பறிக்கவில்லை. அதே வேளையில் ஒரு சரீரமாக கணவன் மனைவி இருக்க வேண்டும் என்று வலியுருத்துகிறது. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தன்னை திருமணத்தில் அற்பணிக்கிறார்கள். ஆகவே தான் ஒரே சரீரமாக இருக்கிறீர்கள் என்று திருமறை கூறுகிறது.
இல்லற வாழ்வில் இரு சரீரமாகவே தான் இன்றும் பலர் வாழ்வதால் 'My body My rights' என்று பதாகையைத் தூக்க வேண்டிய சூழல் வருகிறது. தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது ஆப்கானிஸ்தானில் அவசியம். பெண்களுக்கு வேண்டிய உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. அதே வேளையில் இந்தியாவில் வாழும் குடும்பங்கள் ஒரு இருதயம் உள்ளவர்களாக, ஒரே சரீரமாக வாழ கர்த்தர் நம்மை அழைக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment