என் பாதை தனி பாதை


மாலை வேளையில் அப்பா கூப்பிட ஓடோடி வந்தான் அந்த குட்டி பையன். என்னப்பா கூப்பிட்டிங்களா என்றான்.

ஆமாடா கண்ணு கொஞ்சதூரம் அப்படியே walking போயிட்டு வருவோமா என்று கூப்பிட, அவனுக்கு சந்தோஷம் வெளியே போய் விட்டு வர, சரி என்று daddy கையைப் பிடிச்சுக்கிட்டு பேசிக்கொண்டே போனான். போகப் போகத் தான் புரிந்தது dady நீங்க என்னப் பேசிறிங்க எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது.

பாவம் அந்த குட்டி பையன், அப்பா குடித்துவிட்டு போதையில் உளறுகிறார் என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக அப்பா லம்பிக் கொண்டே போக, மெதுவாக வீடு வந்து சேர்ந்தான்.

ஓடி போனான் அம்மாவிடம், அம்மா,அம்மா, அப்பா வாயிலிருந்து நாற்றமாக அடிக்கிறது, குடித்திருப்பார்களோ? அம்மா பதிலுக்கு அது ஒரு மனுஷ ஜென்மமா! அது குடிக்காத நாள் தான் ஏது?

அதிர்ந்து போன அச்சிறுவன், தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பார்த்த போது மனதிற்குள் ஒரு உறுதிக் கொண்டான் 'நான் எங்க அப்பா போன்று ஒரு குடிகாரனாக இருக்க மாட்டேன்'. அச்சிறுவன் தன் வாழ்நாள் முழுவதும் தன் தந்தை குடிகாரன் என்பதற்காகவே வெறுத்து ஒதுக்கினான். தந்தையை மட்டுமல்ல தந்தையின் பெயர் கூட தன்னுடைய பெயருடன் ஒட்டக் கூட கூடாது என்று முடிவெடுத்தான். எனவே தன் பெயரான "ஜார்ஜ் பெர்னாட்ஷா" (George Bernard Shaw) என்பதிலிருந்து 'ஜார்ஜ்' என்ற பெயரையே எடுத்துவிட்டான். அவன் தந்தையின் பெயர் ஜார்ஜ் கார் ஷா (George Carr Shaw).

தன் வாழ்வில் அன்புக்கு ஏங்கி நின்ற பெர்னாட்ஷா தன் சிந்தனையை எழுத்தாற்றலில் இறக்கி விட்டார். இதன் காரணமாக நோபல் பரிசு அவரை வீட்டில் வந்து தட்டியது.   அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்தில் தட்டுத் தடுமாறிய மனிதனின் உள்ளுக்குள் கிடந்த எழுத்தாற்றல் என்ற சிங்கம் கர்ஜித்தது. அவர் வார்த்தைகளெல்லாம் சமூகத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் குறித்த எரிச்சலை தீப்பொறியாக கக்கினதை உலகமே கண்டு வியந்தது. ஆனால் பெர்னாட்ஷாவோ நோபல் பரிசுக்கான பெயரை 1926ம் வருடம் நவம்பர் 11 அன்று அறிவித்த போது அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. காரணம் தன் எழுத்து இந்த நோபல் பரிசுக்கும் மேலானது என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.           

நோபல் பரிசை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதை வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவருடைய மனைவி, "இந்த பரிசு உங்களுக்கு மதிப்பைத் தேடி தரா விட்டாலும், நீங்கள் பிறந்த உங்கள் தேசம் அயர்லாந்திற்காவது சேரட்டுமே" என்று வருந்திக் கேட்டுக்கொண்ட பின்தான் சரி என்று ஏற்றுக் கொண்டார்.

ஷேக்ஸ்பியருக்கு இணையாக பெர்னாட்ஷா மதிக்கப்படுகிறார். நூறு ஆண்டுகள் ஆனாலும் அவருடைய எழுத்துக்களில் இன்னும் தீப்பொறி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பதால் இன்றும் மக்கள் எடுத்து வாசித்து புத்துணர்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.        

திருமறையில் இராஜாக்களின் காலத்தில் மனாசே போன்ற அரசர்கள் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தார்கள் (2 நாளாகமம் 33:2). ஆனால் அவனுடைய குமாரன் யோசியா தன் தகப்பனாகிய மனாசேயை போன்று தீய வழிகளைப் பின்பற்றாமல் "கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்" (2 நாளாகமம் 34:2), என்று பார்க்க முடிகிறது.

என்றைக்கும் நாம் நல்ல முன்மாதிரிகளை மட்டுமே பெற்றோரிடம் இருந்து கடன்வாங்கிக் கொள்ளலாம், தீய காரியங்களை மறந்து விடலாம். நம் வாழ்க்கையை முடிவு பண்ணுவது நம் கையில் தான் இருக்கிறது. 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php 

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்