நீ இல்லாத நாளெல்லாம்


“நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா” என்று உள்ளம் உருக இளைஞன் ஒருவன் ஆலயத்தை சுற்றி சுற்றி வந்தான். பார்த்தால் முன் பின் தெரியாத முகம். ஏதாவது புதிதாக இப்பகுதியில் குடியிருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.

அடிக்கடி ஆலயம் இருக்கும் தெருவிலேயே அங்கும் இங்குமாக அலைந்து திரிவான். சில வேளை ஆயர் தங்கும் இல்லத்தையும் தயக்கத்தோடு வெளியே நின்று பார்த்து விட்டு அப்படியே போய் விடுவான்.

ஒரு நாள் ஆலய ஆராதனை துவங்கும் முன்பே அந்த வழியாக வந்தான். மெதுவாக அழைத்தேன். அவனைக் குறித்து விசாரித்தேன். அவன் அந்த ஆலயத்தை சார்ந்த ஒரு பெண் பிள்ளை வேலைச் செய்யும் பெரிய நிறுவனத்திலே பணிபுரிந்துள்ளான் என்று கூறினான். நன்றாக படித்துள்ளான். ஆனால் குறைந்த சம்பளத்திலே பணிபுரிந்துள்ளான். அந்த பெண் ஷாலினியைப் பார்ப்பதற்காக வந்துள்ளான். ஆனால் ஷாலினி இவன் டார்ச்சர் தாங்க முடியாமல் வேலையை விட்டு விட்டாள். அவளுடைய பெற்றோர் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று அவள் சொந்த ஊர் வந்து சரணடைந்தாள். 

இவன் மெதுவாக படையெடுப்பைத் தொடங்கினான். ஊர், இடம் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு அவளுடைய ஊருக்கு வந்து விட்டான். பெற்றோர்கள் அதனை அறிந்து அவனை நன்றாக ஏசி பேசி அனுப்பி விட்டார்கள். ஆனாலும் அவள் வரும் ஆலயத்திலேயாவது பார்த்துவிடலாம் என்று கர்த்தருடைய வாசற்படியிலே காத்திருந்தான். 

உன்னை அவள் பார்க்க விரும்பினாளா? ஏதாவது cell ல் contact பண்ணினாளா என்றேன். இல்லை என்றான். WhatsApp, facebook ஏதாவது? இல்லீங்க.  

ஏன் உன்னை அவர்கள் பெற்றோர் மருமகனாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை? என்றேன். நான் BE Courseயை இன்னும் complete பண்ணல்ல. அதனால் எனக்கு சம்பளம் மிக குறைவாக இருக்கிறது. இந்த சம்பளத்தை வைத்து உன்னையே காப்பாற்ற முடியாது, உனக்கெல்லாம் ஒரு கல்யாணம்! இந்த பக்கமே தலை வைத்துப் படுக்காதே என்று கேவலமா திட்டுறாங்க. அதனால் தான் அவள் ஆலயத்திற்கு வரும் போது அவளைப் பார்த்துப் பேச வேண்டும் என்றான்.

அவனின் பரிதாபநிலையை உணர்ந்தேன். அதேவேளையில் சில இளைஞர்கள் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று acidயை முகத்தில் வீசுவதும், கொலை வெறித்தனத்தோடு நடந்து வருவதை மனதில் யோசித்தவாறு அவனிடம், உன்னை துச்சமாக எண்ணி அவமரியாதைச் செய்த குடும்பத்திற்கு முன் நீ ஏன் வாழ்ந்துக் காட்டக் கூடாது. நீ ஏன் உன் BE படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்தும் அளவிற்கு சம்பளம் வாங்கக் கூடாது. உன்னை வெறுத்து ஒதுக்குகிறவர்களிடம் நீ ஏன் மண்டியிட வேண்டும். அவ்வாறு மண்டியிடுவதைக் காட்டிலும், உன்னைத் தேடி வரும் பெண்ணை நீ ஏன் மணந்துக் கொள்ளக் கூடாது என்று அவன் உள்ளத்தில் சிறு பொரியைப் போட்டேன். உன்னை வெறுத்தவர்களின் நிழலைக் கூட நான் மிதிக்க மாட்டேன் என்று ஏன் நீ வைராக்கியமாய் இருக்கக்கூடாது என்றேன். அப்படியே பிரம்மை பிடித்தவனாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தான்.

சரிதான் “இந்தக் கழுதை இல்லன்னா இன்னொரு குதிரை” என்னைத் தேடி தான் வரும் என்று என் பெற்றோர்களும் எனக்கு கூறினார்கள். நான் தான் இப்படி பித்தனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். நீங்க சொன்னதுபோல என்னை விரும்பாதவர்களை நான் ஏன் விரும்ப வேண்டும். நானும் வாழ்ந்து காட்டுகிறேன் என்று பைக்கில் சிட்டாய் பறந்தான்.

சில வருடத்திற்கு பின் என்னுடைய WhatsAppயை பார்த்த போது ஒரு புதிய எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. Open செய்துப்பார்த்தேன். இரண்டு குழந்தைகளோடு ஒரு இளந்தம்பதியர். முகத்தை யோசித்து யோசித்துப் பார்த்தேன். "ஓ நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா வா". புதிய குதிரையோடு ஒரு லட்சம் salary வாங்குவதாக குறிப்பிட்டிருந்தான்.

இன்று இளைஞர்கள் சிலர், தான் விரும்பிய நபர் தன்னை திருமணம் செய்யாவிட்டால் அவர்களை மிரட்டுவதும், அவர்களுக்கு எவ்வளவு தீங்கு இழைக்கவேண்டுமோ அந்த அளவிற்கு தீங்கு இளைத்து திருப்தி அடைகின்றனர். ஆனால் உண்மையான அன்பு என்பது "அயோக்கிய மானத்தைச் செய்யாது... சினமடையாது, தீங்கு நினையாது" (1 கொரி 13:5) என்று திருமறைக் குறிப்பிடுகிறது. 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி