மாட்டிக்கிட்டியா


மோனிகாவிற்கு அவள் கணவன் மீது மிகவும் கோபம். தன்னுடைய பேச்சை சற்றும் கேட்காமல் தன் விருப்பப்படியே தான் அனைத்தையும் செய்ய நினைக்கிறார். நானும் மனுஷிதானே. என்னை ஒரு பொருட்டாக நினைக்காத மனிதனோடு எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என் Friends திரிஷா, ரட்சினி போல் நானும் என் கணவனை விட்டு விலகிடவேண்டியது தான் என்று முடிவெடுத்தாள்.

திரிஷா நீ consult பண்ணின lawyer பெயர் என்ன? கொஞ்சம் number யைக் கொடு. உன்னை மாதிரி நானும் என்  Husband  யை கழற்றி விட விரும்புகிறேன் என்று  போனில் உரையாடினாள் மோனிகா. இந்த உரையாடலைக் கவனித்த திரிஷாவின் தாய் ரெபேக்காள் தன் மகளிடம் போனை தருமாறு கேட்க, போனில் ரெபேக்காள் வந்தாள்.

இதை எதிர்பார்க்காத மோனிஷா aunty எப்படி இருக்கிறீங்க என்று formalityக்கு கேட்டாள். நல்லா இருக்கிறேம்மா. நீ எப்படி இருக்கிறா? நான் எப்படியோ இருக்கிறேன் Aunty! இன்றைக்கு ஒரு முடிவு கட்டப்போகிறேன்!! அப்புறம் தான் நான் நல்லா இருப்பேன் என்றார்!!! 

நடந்த விஷயத்தை கேட்ட ரெபேக்காள் தன் மகள் திரிஷாவின் நிலையை எடுத்து சொல்ல ஆரம்பித்தாள்.

மோனிக்கா, ஒரு காட்டில் குதிரைகளும், மான்களும் அதிகமாக வாழ்ந்துவந்தன. குதிரைகளைக்காட்டிலும் சிலவேளை மான்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்தால் குதிரைகளால் அதோடு போட்டிப் போட முடியாத அளவிற்கு வேகமாக ஓடுகிறது. அதனால் இந்த மான்களை பலவேளைகளில் குதிரைகளுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை. நம்ம சொல்லைக் கேட்காத இந்த மான்களை எப்படியாவது நமது காட்டை விட்டு விரட்டி விட்டால் நமக்கு நாமே தான் ராஜா. நம்மோடு போட்டிப்போட யாரும் இல்லை என்று யோசித்தது. முடிவுகட்ட தீர்மானித்தது.

எப்படி, யாரைக்கொண்டு விரட்ட என்று யோசித்த போது காட்டுக்குள் ஒரு மனிதன் துப்பாக்கியோடே வந்தான். அவன் யாரையும் சுட்டு கொல்ல முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டு, தலைவனாகிய குதிரை அவனிடம் பேரம் பேசியது. 

உடனே அவன் ஒரே ஒரு Condition யை மட்டும் போட்டான். நான் என் துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி விரட்டிவிடுகிறேன். ஆனால் நீ ஒன்றுச் செய்ய வேண்டும். நீ நன்றாக ஓடக்கூடியவன். உன் மேல் இந்த சேணத்தை முதுகில் வைத்து கட்டிக் கொள்ளுகிறேன். அப்பொழுது தான் நான் கீழே விழுந்து விடாமல் இருந்து விரட்டமுடியும், அதோடு இந்த கடிவாளத்தையும் உனக்கு நான் மாட்டிக்கிடுதேன். அப்பொழுது தான் சரியான திசையில் அதை விரட்ட முடியும் என்றாள். 

இதுதானே தாராளமாக செய் என்றது குதிரை. உடனே குதிரை மீது ஏறி துரத்திட ஆரம்பித்தான். அவன் கையில் உள்ள துப்பாக்கியால் ஆங்காங்கே கண்ட மான்களை சுட ஆரம்பித்ததும் ஓட்டம் பிடித்தது. அத்தனை மான்களும், குதிரைக்கு சந்தோஷம்னா தாங்க முடியல. அதனை விரட்டி விரட்டி குதிரை ஓடியது.

மெதுவாக கேட்டான் கொன்ணுறவா என்றான். குதிரை, சே சே, பிழைச்சிட்டுப் போகுது. எங்க இடத்தை காலி பண்ணினாலே போதும் என்றது. மூச்சு இறைச்சி அத்தனையையும் விரட்டிய சந்தோஷத்தில் நின்றது குதிரை.

குதிரை அந்த மனிதனிடம் ரொம்ப சந்தோஷம். முதுகில் இருக்கிற சேணத்தை எடுக்கிறிங்களா? கொஞ்சம் வலிக்குது என்றது.

அதற்கு அவன் அது எப்படி, நம்ம Condition ன மறந்துட்டியா. நீ சேணத்தையும், கடிவாளத்தையும் எப்பொழுதும் வச்சிக்கொள்ளனும்.

சரி கிளம்பு என்றான். எங்கே, அது தான், Court வரை போய்ட்டு வரனும். இன்றைக்கு ஒரு Case Trial க்கு வருது. நேரமாச்சு ரெடி கிளம்பு என்றான். மாட்டிக்கொண்டது வேறு யாரும் இல்லம்மா என் மகள் திரிஷா தான். நீயும் மாட்டிக்கொள்ளப்போறீயா?

“தேவன் இணைத்ததை மனுஷன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று ஆண்டவர் எதுக்கும்மா சொன்னார். பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு ஜெபி (எபே 3:15,16). நீ ஆண்டவரை நம்புகிற பொண்ணுதான, உன்னை இணைத்த ஆண்டவர் முற்றுமுடிய குடும்ப வாழ்வை காப்பதற்கு வல்லவர் என்பதை உணருகிறாயா? என்றாள்.

மோனிகா அடுத்த முனையில் கண்ணீர் விட்டாள்.  சரி Aunty அவசரப்பட்டுடேன். என் வாழ்க்கையில் இயேசுவே சவாரி செய்யட்டும் என்று போனை வைத்தாள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி