எங்கேயோ இடிக்குதே


நண்பர் ஒருவருடைய இல்லத்திற்கு சென்றிருந்தேன்.  அவரோடு மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஒரே ஒரு மகன் தான். அவன் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறான் என்று என் நண்பர் கூறினார். அவனைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்று கிளம்பும் போது கொஞ்சம் உன் மகனை கூப்பிடு என்றேன்.

என் நண்பன் சிரித்துக்கொண்டு அவன் உன்னை பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை. நீ அவனைப் பார்க்க உள்ளே வா என்று உள் அறைக்கு அழைத்துச் சென்றான். எனக்கு அவன் மகனை பார்த்தபோது ஷாக் அடித்தது.

நண்பனின் மகன் முகம் முழுவதும் வெள்ளை கலரில் தயிருடன் எதையெல்லாமோ சேர்த்து பூசி இருந்தான். கண்ணின் மேல் வெள்ளரிக்காய் போல் ஒன்றை ஒன்றை வைத்து மூடி இருந்தான்.

மெதுவாக Sam இடம் கேட்டேன், “ Sam உனக்கு என்ன ஆச்சு” என்றேன். அவன் சிரித்துக் கொண்டு, “Sorry, uncle முகத்தில் சில பருக்கள் வந்திருக்கிறது. அதற்கு தான் மருந்து தயார் செய்து பூசி உள்ளேன்.”

இப்படி செய்ய வேண்டும் என்று எங்கே பார்த்தாய், யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டேன். Uncle எல்லாம் YouTube Doctor  தான் என்று சிரித்தான்.

வெளியே வரும்போது நான் படித்திருந்த “மைக்கேல் ஜாக்சன் சிண்ட்ரோம்” என்ற கட்டுரை என் நினைவில் வந்தது.

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மனநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று மீடியாக்கள் கூறிக் கொண்டிருந்தன. மைக்கேல் ஜாக்சன் Body Dysmorphic Disorder என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு புள்ளிவிபரத்தின் படி 20% பேர் அமெரிக்காவில் cosmetic clinicகிற்கு  செல்பவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.

இந்தியர்களுக்கு எப்பொழுதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை நாம் வெள்ளையாக இல்லை. எனவே கலராக மாறினால் தான் நம்மை எல்லாரும் விரும்புவார்கள் என்ற எண்ணம் மனதில் உண்டு. அதனால் இளம் வயதில் உள்ள ஆண்கள் குறிப்பாக பெண்கள் வெயிலே தன் மேல் பட்டுவிடக் கூடாது என்று குடையும் கையுமாக அலைவார்கள். தனக்குத் தெரிந்த அத்தனை creamமையும் பயன்படுத்தி பார்ப்பார்கள். தங்களோடு படிக்கிற பிள்ளைகளுடன் எப்பொழுதும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள், “ஏய் என்னடி நீ திடீரென்று color அதிகமானபடி இருக்கிறாய்?, என்ன soap பயன்படுத்துகிறாய்? என்ன cream பயன்படுத்துகிறாய்?  எத்தனை முறை முகம் கழுவுவாய்? எப்படி maintain பண்ணுகிறாய்? என்று கேட்டு அதன்படி எல்லாம் செய்து பார்ப்பார்கள்.”

தலையில் உள்ள முடியை மேற்கே இருந்து கிழக்காக, பின்பு கீழேயிருந்து இருந்து மேலாக, அதன்பின்பு பின்னி பின்னி பார்ப்பர், hair swing பண்ணி  பார்ப்பர், முடியை straight ஆக்கி பார்ப்பர். இவைகளெல்லாம் செய்வதற்கு பியூட்டி பார்லர் இப்பொழுது முக்குக்கு முக்கு முளைத்திருக்கிறதே! கவலையை விடுங்க முடிக்கு என்ன கலர் வேண்டுமானாலும் paint பண்ணிக்கொள்ளலாம். முகத்தை எத்தனை முறையானாலும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொள்ளலாம்! கருப்பாக இருந்தால் வெள்ளையாகிக் கொள்ளலாம்! சம்பளத்தை எல்லாம் எங்க கிட்ட கொடுங்க, முடிஞ்சா நிலம், புலம், சொத்து எது இருக்கிறதோ அதை எல்லாம் விற்று பியூட்டி பார்லரில் கொட்டுங்க. நீங்க நினைக்கிற மாதிரி மாற்றிக் கொள்ளலாம் என்று விளம்பரங்கள் மேல் விளம்பரம் செய்து மக்களை அலைக்கழிக்கிறது. இப்படி பியூட்டி பார்லரே வாழ்க்கை என வாசல்படியில் படுத்திருப்பவர்கள் தான் Body Dysmorphic Disorderஆல் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

மைக்கேல் ஜாக்சனுக்கு விட்டிலிகோ (vitiligo) என்ற தோல் நோய்தான் துவக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் காசு இருக்கிறது என்பதற்காக மாற்றி மாற்றி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள ஆரம்பித்தார். Vitiligo தோல் நோய்க்கும் மனச்சோர்வுக்கும் மரபணுக்கள் ரீதியாக தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். மனச்சோர்வில் மாட்டிக்கொண்ட மைக்கேல் ஜாக்சன் போதை மருந்துகளுக்கு அடிமையானார். அவருடைய அழகு பிரச்சனையே அவரது வாழ்க்கையை விழுங்கிவிட்டது.

“மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” (I பேதுரு 3: 3,4) என்று பேதுரு திருச்சபைக்கு ஆலோசனை கொடுக்கிறார். வெளிப்புறமான அலங்காரத்திற்கு நேரத்தை செலவு செய்துவிட்டு ஆலயத்திற்குள் வருவதற்குள் பாதி ஆராதனை முடிந்து விடுகிறது. மீதி ஆராதனையிலும் கஷ்டப்பட்டு இழுத்து வைத்த முடியும் fan காற்றில் அங்கும் இங்கும் அசைய, மக்கள் கூட்டத்தால் வியர்த்துக்கொட்ட, போட்ட பவுண்டேஷன் சரிந்து விழுந்து விடுகிறது. என்ன church இப்படி இருக்குது! இனிமே இங்கே வரக்கூடாது!! நமக்கு இந்த இடமெல்லாம் சரிப்பட்டு வராது!!! என்று புலம்புகிறீர்களா?

அழிந்து போகிற அலங்கரிப்பை maintain பண்ண நினைக்கிறீர்கள், அழியாத அலங்கரிப்பாகிய சாந்தம், அமைதி எல்லாம் காற்றில் பறந்து விட்டது. ஆகவே தான் நீங்கள் போட்டுக்கொண்ட அலங்கரிப்பை பார்க்க உங்கள் மனைவி/கணவன் உங்கள் அருகில் இல்லை! யார் பார்த்து உங்கள் அலங்கரிப்பை மெச்சிக்கொள்வார்கள்!! பரலோகத்தில் இருக்கிறவர் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறார்!!! கொஞ்சம் வலிக்கும்  மன்னித்து கொள்ளுங்கள்  ஏனென்றால் வசனம் இடித்துவிட்டது.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்