எதிரியின் இனிதான முத்தம்
ஹெய்ரோ (Hiero) என்ற ஒரு மன்னன், தன்னுடைய எதிரியை நேருக்கு நேராக சந்தித்தான். எதிரியுடன் வீராவேசமாக பேசினான். அப்பொழுது ஹெய்ரோவின் எதிரி அவனைப் பார்த்து "உன் வாய் ஏன் இப்படி நாறுகிறது" என்று முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிட்டான். இப்படிப்பட்ட வார்த்தையை எதிரி சொன்னது அவனுக்கு மிகுந்த கோபத்தையும், வெட்கத்தையும் உருவாக்கினது.
தன் அரண்மனைக்கு வேகமாக வந்தான். தன் மனைவியைப் பார்த்து "என் வாய் நாறுகிறதா" என்றான். அப்பொழுது அவள் "ஆம்" என்றாள்.
அப்படியென்றால் "நீ ஏன் என்னிடம் இதை ஒரு போதும் சொல்லவில்லை” என்றான். அதற்கு அவள் “ஆண்களுடைய வாய் எல்லாம் இப்படித்தான் நாறும் போல் என்று நான் நினைத்துக் கொண்டேன்" என்றாள்.
பலவேளைகளில் பிறருடைய குறைகளை நேரில் சொல்லிவிட்டால் நம்முடைய நட்பு முறிந்து விடுமோ என்று பலர் அதை வெளிப்படையாக கூறுவது இல்லை. சிலர் நாம் தவறு செய்தால் கூட அதை பாராட்டி பேசுவார்கள். நன்றாக செய்தீர்கள் என்பார்கள். காரணம் நம்மிடம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உள்ளான எண்ணத்தின் விளைவு தான்.
திருமறையில் "மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துக் கொள்ளுதல் நல்லது. சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள். சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்" என்று நீதிமொழிகள் 27:6,7 கூறுகிறது.
நம்முடைய குறைகளை யாராவது சுட்டிக்காட்டி விட்டால் அவர்கள் மேல் நமக்கு அன்பு வருவதில்லை. அவர்களோடு உறவை வைத்துக் கொள்ளுவதை நாம் தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் உண்மையான நண்பர்கள் நம்மை கண்டிப்பதினால் நாம் தவறுச் செய்வதிலிருந்து நேர்மையான வழிக்கு வர உதவிச் செய்கின்றனர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறவர்கள், குடும்பத்தில் தலைவனாக, தலைவியாக இருக்கிறவர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்கள் / நம்முடைய பிள்ளைகள் நம்மிடம் காணப்படும் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது மன நிறைவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். பின்பு அவர்கள் கூறுவதைக் குறித்து பரிசோதித்து பார்த்து நம்மை மாற்றிக் கொள்வது அவசியம்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
Comments
Post a Comment