தயவுசெய்து தூக்கிக் கொண்டு வர வேண்டாம்



அன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அரசன் மகனுக்கு திருமணம். நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் உருண்டோடியது. ராஜாவின் அரண்மனைக்கு அருகில் வாழ்ந்த பிச்சைக்கார பெண்மணிக்கும் அந்த திருமணத்தில் பங்கு கொள்ள மிகவும் ஆசை.

இந்தக் கோலத்தில் போனால் உள்ளே விட மாட்டார்களே என்ன செய்வது? ஒரே யோசனை! திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது!!. அரசி சிலவேளை இந்த வழியாகத்தானே  செல்வார்கள். அவர்களிடம் அவர்கள் பயன்படுத்திய ஒரு ஆடையை கேட்டால் என்ன?

அரசியின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் ஏக்கத்தோடு காத்திருந்தவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. அரசியை கண்டதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.

எதிர்பார்க்காமல் அரசியும் ஆச்சரியப்படும் அளவிற்கு தான் பயன்படுத்திய ஒரு ஆடையைக் கொண்டு வந்து கொடுக்க பணிப்பெண்ணுக்கு ஆணையிட்டாள். அதோடு மட்டுமல்ல, அரசி அந்த பிச்சைக்கார பெண்ணிடம் “இந்த ஆடை எளிதாக கிழிந்து போகாது தண்ணீரில் அலசாமல் இருந்தாலும் நாற்றமும் அடிக்காது. எனவே பழைய துணியை எல்லாம் வீசிவிட்டு கல்யாண விருந்துக்கு வந்து சேர்” என  அழைப்பு கொடுத்தாள்.

மகிழ்ச்சி என்றால் அந்தப் பெண்ணுக்கு தாங்க முடியவில்லை. காலையில் குளித்து அரச விருந்துக்கு போக ஆயத்தமானாள். ஆனால் மனதில் ஒரு எண்ணம், ஒருவேளை அரசி சொன்னபடி இந்த ஆடைக் கிழியாமல் இருக்குமோ? அல்லவோ? தெரியவில்லையே! அரசமரத்தை நினைத்து புருஷனை கைவிட்ட கதையாக, எல்லா துணியையும் தூக்கி வீசி விட்டால் என்ன ஆகும் என்று நினைத்தாள்.

அரச விருந்துக்கு சென்ற போது பழைய துணி மூட்டையையும் தூக்கிக் கொண்டே போனதால் சரியாக உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை. துணிகளும் திடீரென்று கூட்ட நெரிசலில் கீழே விழுந்துவிட அதை எடுத்து வைக்க சிரமமாக இருந்தது. ஒரு வழியாக விருந்துக்குப் போய்விட்டு வந்தாள்.

நாட்கள் ஓடியது ஒரு நாள் அரசி அந்த வழியாக வரும் போது ஒரு கூட்ட மக்கள் தெருவில் நிற்பதை பார்த்து பணிப்பெண்ணிடம் அது என்ன என்று விசாரித்தாள். பணிப்பெண் விசாரித்த போது ஒரு பிச்சைக்கார பெண் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். அதனால்தான் கூட்டமாக மக்கள் நின்று மக்கள் நின்று பார்க்கிறார்கள் என்றார்.

அரசி அந்த பெண்ணைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. தன்னிடம் ஆடையை பெற்ற அந்தப் பெண்மணி தான் கொடுத்திருந்த அந்த ஆடையை உடுத்தி இருந்தாலும், நம்பிக்கையின்மையால் பழைய துணி மூட்டையுடனே கஷ்டப்பட்டு வாழ்ந்து இருக்கிறாள் என்பதை அரசி புரிந்துகொண்டு வருத்தப்பட்டாள்.

இன்றும் பலர் நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் அதனை மகிழ்வோடு வாழ தெரிவதில்லை. தங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்கள் திருமணத்திற்கு முன் கூறிய காரியங்களை மனதில் பெரிய பொட்டலமாக வைத்துக்கொண்டே திருமணத்தில் துணையை கைப்பிடிக்கின்றனர். Pre Judgement, Pre Assumption எல்லாம் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியை கெடுக்க கூடியவைகள். நம்முடைய அம்மா தன் வாழ்வில் தன் கணவனிடம் பட்ட கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கூறி நீ என்னைப்போல் இருந்து விடாதே, முதலிலேயே உன் கணவனிடம் கண்டிப்பாக நடந்து கொள். என்னைப்போல் தாழ்ந்து போகாதே, எதிர்த்து சண்டை போட்டால் தான் ஆண்கள் எல்லாம் வழிக்கு வருவார்கள். கணக்கு வழக்கு எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள், நம்ம வீட்டை பார்த்தீயா,  அப்பா எந்த கணக்கையும் எனக்கு காட்டுவதில்லை. இதை போல் நீயும் விட்டு விடாதே, முதலிலேயே கார சாரமாக நடந்துகொள். மாமியாரிடம் முதலிலேயே பணிந்து போய் எல்லா காரியத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யாதே. அப்படி செய்தால் எல்லாவற்றையும் உன் தலையிலேயே கட்டிவிடுவார்கள். எல்லா சொத்தையும் பணத்தையும் உங்களுடைய joint accountலேயே போடுங்கள், register பண்ணுங்கள். அப்பொழுது தான் உன் கணவன் உனக்கு அடங்குவான். இவ்வாறு புதிதாக திருமணம் ஆகப்போகும் பெண்களிடமோ ஆணிடமோ பெற்றோர்கள் key கொடுத்துவிட்டு ஆட வைக்க நினைக்கிறார்கள். இது பிள்ளைகள் வாழ்க்கையை பாதிக்கும்.

திருமறையில் ரெபெக்காளை அவள் வீட்டார் அனுப்பும்போது மனதார வாழ்த்தி அனுப்புகிறார்கள். எந்தவிதமான பொட்டலங்களையும் கொடுத்து விடவில்லை. அதைப்போல் ஈசாக்கு தன் மகனாகிய யாக்கோபை அவன் மாமனின் குடும்பத்தோடு ஐக்கியமாக வாழ அனுப்பும் போதும் எந்த hidden agendaவையும் கொடுத்து விடவில்லை. ஆகவே அவர்கள் மனமகிழ்ச்சியாக வாழ முடிந்தது.

இன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவை கொடுப்பதற்கு பதிலாக தீய ஈவை அறியாமல் கொடுத்து அனுப்புகிறார்கள். மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் பிடித்து கொடுத்து திருமண வாழ்விற்கு அனுப்புகிறார்கள். மறு வீட்டிற்கு வந்தால் முட்டைக்கு பதிலாக தேளை கொடுத்து அனுப்புகிறார்கள். அடிக்கடி கொட்டுவதால் பிள்ளைகள் திருமண வாழ்வு துவக்கத்திலேயே வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கிறது. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு தயவுசெய்து எதையும் கொடுத்து விடாதிருங்கள். அவர்கள் அவர்களாக வாழட்டும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

புத்தியுள்ள மனைவி

உண்மையை உரக்க சொல்வோம்